Word |
English & Tamil Meaning |
---|---|
தலைப்பந்தி | talai-p-panti, n. <>id. + paṅkti. First set or row of guests entertained. See அடிப்பந்தி. |
தலைப்பறை | talai-p-paṟai, n. <>id. +. Tom-tom beaten in front, as of an elephant; யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை. மத்த கஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே (ஈடு, 10, 3, 5). |
தலைப்பா | talai-p-pā, n. <>id. + பாகை. See தலைப்பாகை. . |
தலைப்பாக்கட்டிக்கோரை | talai-p-pā-k-kaṭṭi-k-kōrai, n. <>தலைப்பா +. Sedge with culms triquetrous at the base, cyprus haspam; பூங்கோரை. (A.) |
தலைப்பாக்கட்டு - தல் | talai-p-pā-k-kaṭṭu-, v. intr. <>id. +. To perform the ceremony of putting on the turban at the close of the period of mourning; கருமாதிமுடிவில் நடத்தும் சுப சுவீகாரச் சடங்கில் தலைப்பாகையைக் கட்டுதல். Loc. |
தலைப்பாகு | talai-p-pāku, n. <>தலை +. [K. talepāgu.] See தலைப்பாகை. . |
தலைப்பாகை | talai-p-pākai, n. <>id. + T. pāga. Turban; தலையிற்கட்டுந் துணி. ஒன்றுபுகாத்தலைப்பாகு பற்ற (இரகு. அயனெ.104). |
தலைப்பாட்டு | talai-p-pāṭṭu, n. <>id. +. The song sung first in a dance; கூத்தின்முதலில் தொடங்கும் பாட்டு. தலைப்பாட்டுக் கூத்தியும் (சிலப்.14, 156). |
தலைப்பாடு | talai-p-pāṭu, n. <>தலைப்படு-. 1. Cordial intercourse; கலந்திருக்கை. தோழனைக்கண்டு தலைப்பாடெய்தி (பெருங். வத்தவ. 4, 99). 2. Chance occurrence; |
தலைப்பாத்தூக்கி | talaippā-t-tūkki, n. <>தலைப்பா +. See தலைப்பாமாட்டி, 1. . |
தலைப்பாமாட்டி | talaippā-māṭṭi, n. <>id. +. 1. Hat-rack, coat-stand; தலைப்பா முதலியவற்றை மாட்டுதற்கு உதவுங் கருவி. See தலைப்பாமாறி. Loc. |
தலைப்பாமாற்றி | talaippā-māṟṟi, n. <>id. +. See தலைப்பாமாறி. . |
தலைப்பாமாறி | talaippā-māṟi, n. <>id. +. 1. Lit., one who changes turban. Consummate cheat; [தலைப்பாவை மாற்றுவோன்] பெருமோசக்காரன். Colloq. 2. Clever thief; |
தலைப்பாரம் | talai-p-pāram, n. <>தலை +. 1. Head-load; தலைச்சுமை. புலியோ வரவினுக்கொரு தலைப்பாரம் (தனிப்பா. i, 112, 56). 2. Heaviness in the head from cold; 3. Overloading of a vessel in the bow; |
தலைப்பாளை | talai-p-pāḷai, n. <>id. +. 1. First spathe of the coconut and other palm trees; தென்னை முதலியவற்றில் முதலில்வரும் பாளை. 2. A kind of head-ornament for women; |
தலைப்பித்தம் | talai-p-pittam, n. <>id. + pitta. Giddiness of the head; தலைச்சுற்றல். Loc. |
தலைப்பிரட்டை | talaippiraṭṭai, n. <>தலைப்பு + இரட்டை. Tadpole; தவளைமீன். (w.) |
தலைப்பிரி - தல் | talai-p-piri-, v. intr. <>தலை +. To separate, depart, deviate; நீங்குதல். பண்பிற ¢றலைபிரியாதார் (குறள், 810). |
தலைப்பில்முடிந்துகொள்(ளு) - தல் | talaippil-muṭintu-koḷ-, v. tr. <>தலைப்பு +. To remember, as by tying up a knot in the corner of one's cloth ; [துணியின் தலைப்பில் முடிந்து கொள்ளுதல்] ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுதல். இந்த வார்த்தையைத் தலைப்பில் முடிந்துகொள். |
தலைப்பில்வைத்துக்கொள்(ளு) - தல் | talaippil-vaittu-k-koḷ-, v. tr. <>id. +. See தலைப்பில்முடிந்துகொள்-. . |
தலைப்பிள்ளை | talai-p-piḷḷai, n. <>தலை +. See தலைச்சன். தனித்தலைவன் றலைப்பிள்ளை நானே (அருட்பா. திருமு.தான்பெற்றபேறு, 18). . |
தலைப்பிள்ளைச்சூல் | talai-p-piḷḷai-c-cūl, n. <>id. +. See தலைச்சூல். . |
தலைப்பு | talaippu, n. <>id. 1. Heading, title, as of a book; நூல் முதலியவற்றின் தலைப்பெயர். 2. Beginning; 3. Front part of a woman's cloth; 4. End, edge or corner of a cloth; |
தலைப்புணர் - த்தல் | talai-p-puṇar-, v. tr. <>id. +. To pucker, gather; பை முதலியவற்றின் வாயைக்கட்டுவதற்காகச் சுருக்குதல். தலைப்புணர்த்தசைத்த பல்தொகைக் கலப்பையர் (அகநா. 301). |
தலைப்புணை | talai-p-puṇai, n. <>id. +. Main prop; முக்கியமான ஆதாரம். தலைப்பணை தழீஇ (அகநா.166) . |
தலைப்புரட்டன் | talai-p-puraṭṭaṉ, n. <>id. +. Audacious liar; பெரும்ப்ய்யன். |