Word |
English & Tamil Meaning |
---|---|
தலைமகன் | talai-makaṉ, n. <>id. +. 1. Gentleman, lord, king; தலைவன். தலைமக னுரைத்தது (மணி, 3, 97). 2. (Akap). Hero of a lovepoem; 3. Husband; 4. Eldest son; |
தலைமடக்கு | talai-maṭakku, n. <>id. +. 1. Repetition of the first foot in one and the same line of a stanza; செய்யுளடியின் முதற் சீரே அவ்வடியில் மடங்கிவரும் மடக்கணிவகை. 2. Grain given at the threshing-floor to a woman in charge of a rest-house, as tied up and carried away on her head; |
தலைமடங்கு - தல் | talai-maṭaṅku-, v. intr. <>id. +. 1. To hang down one's head; தலைகுனிதல். 2. To submit; 3. See தலைமடி-, 2. |
தலைமடி - தல் | talai-maṭi-, v. intr. <>id. +. 1. To die; இறத்தல். இவ்வகை நூற்றிருபது புக்குத் தலைமடியவேண்டுமென்பது (இறை. 32, 150). 2. To bend, bow, as ears of grain; |
தலைமடு - த்தல் | talai-maṭu-, v. tr. <>id. +. To have, as a head-rest or pillow; தலையணையாகக் கொள்ளுதல். ஓடு தலைமடுத்துக் கண்படை கொள்ளும் (மணி. 13, 114). |
தலைமடை | talai-maṭai, n. <>id. +. [T. talamadava.] 1. Head sluice of a tank, where a small channel branches off from the main channel, opp. to kaṭaimaṭai; கிளைக்கால் பிரியும் முதல்மடை. 2. Course of a channel where irrigation first begins; |
தலைமண்டை | talai-maṇṭai, n. <>id. +. Skull; தலையோடு. |
தலைமண்டையிடு - தல் | talai-maṇṭai-y-iṭu-, v. intr. <>தலைமண்டை +. To exceed bounds; மிதமிஞ்சுதல். பிரீதி தலைமண்டையிட்டுச் சொல்லுகிற வார்த்தை (திவ். திருமாலை. 44, 143, வ்யா .. ) |
தலைமண - த்தல் | talai-maṇa-, v. intr. <>தலை +. 1. To be interwined together, entangled, as bamboos; ஒன்றோடொன்று பின்னுதல். மூங்கில் தலைமணந்த காவற்காடு (பு. வெ. 6, 20, கொளு, உரை). 2. To crowd, throng; |
தலைமதகு | talai-mataku, n. <>id. +. See தலைமடை, 1. (C. E. M.) . |
தலைமயக்கம் | talai-mayakkam, n. <>id. +. See தலைமயக்கு. . |
தலைமயக்கு | talai-mayakku, n. <>id. +. [T. talamaikamu.] Dizziness, giddiness; தலைச்சுற்று. |
தலைமயங்கு - தல் | talai-mayaṅku-, v. intr. <>id. +. 1. To increase; பெருகுதல். மறந்த்ததலை மயங்கி (சூளா. மந்திர. 28). 2. To fight at close quarters; 3. To be mixed up; 4. To be ruined, to perish; |
தலைமயிர்வாங்கு - தல் | talai-mayir-vāṅku-, v. intr. <>id. +. 1. To shave a woman's head for the first time on her windowhood; விதவையாயினாள் தலைமயிரை முதலில் எடுப்பித்தல். 2. To shave the hair in fulfilment of a vow; |
தலைமயிருதிரல் | talai-mayir-utiral, n. <>id. +. Baldness, Alopecia; தலையை வழக்கையாக்கும் நோய். (பைசஜ.194.) |
தலைமறி - தல் | talai-maṟi-, v. intr. <>id. +. 1. To disappear, as disease, distress, etc.; நோய்முதலியன நீங்குதல். மாயனைக் காணில் தலைமறியும் (திவ். நாய்ச்.12, 2). 2. To be puffed up with pride; |
தலைமறை - தல் | talai-maṟai-, v. intr. <>id. +. 1. To be concealed; ஒளித்துக்கொள்ளுதல். 2. To abscond; |
தலைமாடு | talai-māṭu, n. <>id. +. 1. Head of a bed; தலைப்பக்கம். 2. Distance; 3. End, side, as of land; |
தலைமாணாக்கன் | talai-māṇākkaṉ, n. <>id. +. Ideal pupil; உத்தமனானசீடன். (நன். 38.) |
தலைமாந்தம் | talai-mantam, n. <>id. +. A disease of children caused by indigestion; குழந்தைகட்குக் காணும் மாந்தவகை. (பாலவா. 37.) |
தலைமாராயம் | talai-mārāyam, n. <>id. +. (Puṟap.) Theme describing the bountiful reward bestowed by a king on a warrior who brings in the head of an enemy ; பகைவனது தலையைக் கொடுவந்தவன் மனமுவக்கும்படி மன்னன் செல்மளித்ததைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 12.) |
தலைமாலை | talai-mālai, n. <>id. +. 1. Garland of flowers for the head; தலைக்கணியும் கண்ணி. 2. Garland of skulls worn by šiva; |