Word |
English & Tamil Meaning |
---|---|
தலைமாறு | talai-māṟu, n. <>id. +. Substitute, exchange; பிரதி.அவ்விரண்டற்குந் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து (குறள். 1183, உரை). |
தலைமிதழ் | talai-mitaḻ, n. <>id. + T. medadu. The brains; brain substance; மூளை. (C. G. 28.) |
தலைமுண்டு | talai-muṇṭu, n. <>id. +. Upper cloth; மேலாடை . Nā. |
தலைமுழுக்கு | talai-muḻukku, n. <>id. +. 1. Bathing head and all; மெய்முழதுங் குளிக்கை. 2. Bathing with oil; 3. Catamenia, as requiring ceremonial bath; 4. First bath in the convalescent stage; |
தலைமுழுகாமலிரு - த்தல் | talai-muḻukā-mal-iru-, v. intr. <>id. +. To be pregnant; கர்ப்பமாயிருத்தல். Loc. |
தலைமுழுகு - தல் | talai-muḻuku-, v. <>id. +. intr. 1. To bathe head and all; மெய்முழதுங்குளித்தல். 2. To take an oil-bath; 3. Take a ceremonial bath after menstruation; 4. To be ruined utterly; 1. To sever one's connection with, as a relative; 2. To give up as irrecoverable, as a loan; |
தலைமுறி | talai-muṟi, n. <>id. +. Portion near the head, as of yam, fish, etc.; மீன்முதலியவற்றின், தலைக்கடுத்த துண்டம். (J.) |
தலைமுறை | talai-muṟai, n. <>id. +. Generation, lineal descent; பரம்பரை. இவன் வழியாய் வரு மெட்டாந் தலைமுறையில் (பிரமோத். 5, 38). |
தலைமுறைதத்துவமாய் | talai-muṟai-tattuvam-āy, adv. <>தலைமுறை +. From generation to generation; பரம்பரை பரம்பரையாய். |
தலைமுறைப்பட்டவன் | talai-muṟai-p-paṭṭavaṉ, n. <>id. +. Scion of an ancient and honourable family; பழங்குடியிற் பிறந்தவன். (w.) |
தலைமூத்தமகன் | talai-mūtta-makaṉ, n. <>தலை +. See தலைமகன், 1. Loc. . |
தலைமூர்ச்சனை | talai-mūrccaṉai, n. <>id. + mūrcchanā. Trouble, vexation, arduousness; வருத்தம். தலைமூர்ச்சனையான வேலை. (w.) |
தலைமேற்கொள்(ளு) - தல் | talai-māṟkoḷ-. v. tr. <>id. +. 1. To obey implicitly; to accept with respect, as a command, etc.; சிரசால் வகித்தல். இப்பணி தலைமேற்கொண்டேன் (கம்பரா. கைகேசி. 110). 2. To undertake responsibility; |
தலைமை | talaimai, n. <>id. 1. Headship, leadership; எசமானத் தன்மை. முறைசெய்யான் பெற்ற தலைமை (திரிகடு. 80). 2. Superiority, pre-eminence, excellence; 3. Priority, as of rank, birth, etc; 4. Ownership; |
தலைமைச்சிறியன் | talaimai-c-ciṟiyaṉ, n. <>தலைமை +. Senior pupil in a school or class, monitor; சட்டாம்பிள்ளை. (J.) |
தலைமைப்பாடு | talaimai-p-pāṭu, n. <>id. +. Greatness, excellence; பெருமை. இவன் தலைமைப்பாட்டிற்குப் போதாதென (திருக்கோ. 22, உரை). |
தலைமைவகை | talaimai-vakai, n. <>id. +. Mode of stating a thing directly, dist. fr. cārttuvakai; ஒன்றன் சார்ர்பானன்றித் தலைமைப்பற்றிக் கூறும் முறை. அகத்திணைக்கட் சார்த்துவகையான் வந்தனவன்றித் தலைமைவகையாக வந்திஅல் (தொல். பொ. 54, உரை) . |
தலையடி 1 - த்தல் | talai-y-aṭi-, v. tr. <>தலை +. To trouble, tease; தொந்தரவுபடுத்துதல். (w.) |
தலையடி 2 | talai-y-aṭi, n. <>தலையடி-. See தலையடிப்பு. (w.) . |
தலையடித்துக்கொள்(ளு) - தல் | talai-y-aṭittu-k-koḷ-, v. intr. <>id. +. To trouble oneself; தொந்தரவுப்படுதல். தத்துவப் பேயோட தலையடித்துக் கொள்ளாமல் (தாயு. உடல்பொய். 29). |
தலையடிநெற்றாள் | talai-y-aṭi-neṟṟāl, n. <>id. +. See தாட்போர். Loc. . |
தலையடிப்பு | talai-y-aṭippu, n. <>id. 1. Trouble, vexation, annoyance; தொந்தரவு. (w.) 2. First threshing of paddy by beating the sheaves against the ground; |
தலையடு - த்தல் | talai-y-aṭu, v. tr. <>தலை +. To add, as in speaking; சேர்த்துக்கூறுதல். அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும் (தொல். பொ.114). |
தலையணி | talai-y-aṇi, n. <>id. +. See தலைச்சாமான். . |