Word |
English & Tamil Meaning |
---|---|
தலையாப்பு | talai-y-āppu, n. <>id.+. Thin layer of kaci over boiled rice; வடிசோற்றின் மேற் பரந்துள்ள கஞ்சியாடை. தலையாப்புப்பரத்தலையுடைய அடிசிலை. (பெரும்பர்ண்.476, உரை). |
தலையாய்ச்சல் | talai-y-āyccal, n. <>id.+ஆ-. First process; first time, front part; முன்னது. (J.) |
தலையாயார் | talai-y-āyār, n. <>id.+. Persons of the first rank, eminent persons; பெரியோர். கல்லாக் கழிப்பர் தலியாயார் (நாலடி, 36, 6). |
தலையாரி | talai-y-āri, n. <>தலைமை+ஆர். [T. K. talāri, M. talayāḷi.] village-watchman; one of the menial servants of a village, whose duty includes giving information of offences, guiding travellers, etc.; கிராமக் காவற்காரன். (G. Tj. D.I, 208.) |
தலையாரிக்கம் | talaiyārikkam, n. <>தலையாரி. Watchman's dues; தலையாரிக் காவலுக்குச் செலுத்தும் வரி. (I. M. P. Tj. 1312.) |
தலையாலங்கானம் | talai-y-ālaṅkāṉam, n. A place in Tanjore district where the Pandya king Neṭu-ceḻiyaṉ won a great victory; சோணாட்டில் பாண்டியன் நெடுந்செழியன் போர்புரிந்து வெற்றிகொண்ட ஓர் ஊர். தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து (புறநா.19, 2). |
தலையாறு | talai-y-āṟu, n. <>தலை+. Source of a river; ஆற்றின் உற்பத்தித்தானம். (w.) |
தலையானட - த்தல் | talaiyāṉaṭa-, v. intr.<>id. +. Lit., to walk on the head. [சிரத்தால் நடத்தல்]. 1. To be reckless, haughty; 2. To put forth great efforts; 3. To render service whole heartedly; |
தலையிடி | talai-y-iṭi, n. <>id.+. Headache; தலைவலி. பொன்றிணி கழற்கான்மைந்தன் றலையிடி பொருந்திப்பட்டான். (உபதேசகா.சிவத்துரோ.476). |
தலையிடிப்பு | talai-y-iṭippu, n. <>id.+. See தலையிடி. . |
தலையிடு - தல் | talai-y-iṭu-, v. <>id.+. intr. 1. To engage, venture, enter; பிரவேசித்தல். தலையிட்டு வாதுமுயல் சாக்கியர் (அரிசமய.பாயி.). 2. To meddle, interfere; To add, superimpose; |
தலையில்லாச்சேவகன் | talai-y-illā-c-cēvakaṉ, n. <>id.+. Lit., headless servant. crab; (சிரமில்லாத வேலையாள்) நண்டு. (யாழ்.அக.) |
தலையிலடி - த்தல் | talai-y-il-aṭi-, v. tr. <>id.+. 1. To swear, take an oath, as by striking on the head of a person; ஒருவனது தலையைத் தொட்டுச் சத்தியஞ் செய்தல். 2. To do injustice, as in offering an absurdly low price; |
தலையிலாக்குருவி | talai-y-ilā-k-kuruvi, n. <>id.+. Swallow, Hirundinidae; குருவிவகை. (பிங்.) |
தலையிலாவாணி | talaiy-ilā-v-āṇi, n. <>id.+. Broad nail; ஆணிவகை. (C. E. M.) |
தலையிலெழுத்து | talai-y-il-eḻuttu, n. <>id.+. See தலையெழுத்து. . |
தலையிலெழுது - தல் | talai-y-il-eḻutu-, v. intr. <>id.+. To predetermine one's fate or destiny, as writing on one's head; விதியமைத்தல். |
தலையிற்கட்டு - தல் | talai-y-iṟ-kaṭṭu-, v. tr. <>id.+. To impose a responsibility upon another, as the care of a child, payment for goods, etc.; ஒருவனை ஒன்றற்குப் பொறுப்பாக்குதல். |
தலையிற்போடு - தல் | talai-y-iṟ-pōṭu-, v. tr. <>id.+. 1. To make responsible, as putting on one's head; உத்தரவாதமாக்குதல். 2. To impute blame, accuse; |
தலையிறக்கம் | talai-y-iṟakkam, n. <>id.+ இறங்கு-. Grief, chagrin, as hanging down one's head; (தலை சாய்கை) துக்கம். |
தலையீடு | talai-y-īṭu, n. <>id.+. 1. Engaging, undertaking; தலையிடுகை. 2. First quality, highest grade; |
தலையீண்டு - தல் | talai-y-īṇṭu-, v. intr. <>id.+. To assemble, gather; ஒன்றுகூடுதல். மாயிருஞாலத் தரசு தலையீண்டும் (மணி.1, 25). |
தலையீற்று | talai-y-īṟṟu, n. <>id.+. [M. talayīṟṟu.] 1. First calving, yeaning; முதல¦னுகை. 2. Firstling of cattle; |
தலையீற்றுக்கடாரி | talai-y-īṟṟu-k-kaṭāri, n. <>தலைபீற்று+. First-born female calf; முதலில் ஈன்ற கன்று. |
தலையீற்றுப்பசு | talai-y-īṟṟu-p-pacu, n. <>id.+. Cow that has calved but once; முதன் முதற் கன்றீன்ற பசு. |
தலையுடைத்துக்கொள்(ளு) - தல் | talai-y-uṭaittu-k-koḷ-, v. intr. <>தலை+. To take great trouble, as breaking the head over a work; பெரும்பிரயாசம் எடுத்தல். |
தலையுடைப்பு | talai-y-uṭaippu, n. <>id.+. Colloq. 1. Troublesome, intricate work; உபத்திரவம் மிக்க வேலை. See தலையிடி. |