Word |
English & Tamil Meaning |
---|---|
தலையணை | talai-y-aṇai, n. <>id.+. [M. talayaṇa] 1. Pillow; தலைவைத்துப் படுப்பதற்குப் பஞ்சுமுதலியன அடைத்துத் தைத்த பை. (திவா.) 2. The very first dam near the source of a river; |
தலையணைதாங்கி | talai-y-aṇai-tāṅki, n. <>தலையணை+. A constituent part of a cot; கட்டிலின் ஒருறுப்பு (யாழ்.அக.) |
தலையணைமந்திரம் | talai-aṇai-mantiram, n. <>id.+. Curtain lectures, private advice of a wife to her husband, as given over the pillow; மனைவி கணவனுக்கு இரகசியத்திலோதும் உபதேசம் |
தலையரங்கேறு - தல் | talai-y-araṅkēṟu-, v. intr. <>தலை+. To make one's first appearance on the stage as a performer; தான் கற்றவித்தையை முதன்முறை அவையோர்க்குக் காட்டுதல். தலைக்கோலெய்தித் தலையரங்கேறி (சிலப்.3, 161). |
தலையரட்டை | talai-y-araṭṭai, n. <>id.+ அலட்டு-. [K. taleharaṭe.] Colloq. 1. Vain babbler; செருக்குடன் வீண்பேச்சுப் பேசுபவன். 2. Vain babbling; |
தலையல் | talaiyal, n. <>தலை-. 1. Pouring, raining; சொரிகை. (சூடா.) 2. First rains; 3. Cessation of rain; 4. Freshet; |
தலையலங்காரம் | talai-yalaṅkāram, n. <>தலை+. 1. Decoration of the head; தலையை யலங்கரிக்கை. Loc. 2. Conical ornamental top of a car; |
தலையவதாரம்பண்ணு - தல் | talai-y-avatāram-paṇṇu, v. tr. <>id.+aparādha+. To behead; சிரச்சேதஞ்செய்தல். (w.) |
தலையழி 1 - தல் | talai-aḻi-, v. intr. <>id.+. To ruined utterly; to perisn miserably, used in cursing; அடியோடு கெடுதல். |
தலையழி 2 - த்தல் | talai-y-aḻi-, v. tr. <>id.+. 1. to be ruin utterly; அடியோடு கெடுத்தல். தானவரை யென்றுந் தலையழித்தான் (இலக்.வி.646, உரை). 2. To destroy one's power; |
தலையழுக்கு | talai-y-aḻukku, n. <>id.+. See தலைமுழுக்கு. (w.) . |
தலையளி 1 - த்தல் | talai-y-aḷi-, v. <>id.+. 1. To protect; save; காத்தல். தானேவந் தெம்மைத் தலையளித்து (திருவாச. 7, 6). 2. To regard with grace; To give presents; |
தலையளி 2 | talai-y-aḷi, n. <>id.+. 1. Kind speech; முகமலர்ந்து இனிய கூறுகை. யாவர்க்குந் தலையளி செய்தலும் (குறள், 390, உரை). 2. Ideal love; 3. Grace; |
தலையற்றாள் | talai-y-aṟṟāḷ, n. <>id.+. Widow, as one who has lost her husband; (தலைவனை யிழந்தவள்) கைம்பெண். (நிகண்டு.) |
தலையறை | talai-y-aṟai, n. <>id.+அறு-. Headless body; உடற்குறை. (நிகண்டு.) |
தலையன்பு | talai--y-aṉpu, n. <>id.+. See தலையளி, 2. (திருவுந்தி.7, உரை.) . |
தலையா - தல் | talai-y-ā-, v. intr.<>id.+. To become prominent; மேன்மையாதல். தமருட் டலையாதல் (பு.வெ.3, 6). |
தலையாகுமோனை | talai-y-āku-mōṉai, n. <>id.+. (Pros.) Alliteration of the first letter of each foot in a line; செய்யுளின் ஓரடியின் எல்லாச் சீரிலும் மோனையெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை.ஒழிபி.6, உரை.) |
தலையாகெதுகை | talai-y-āketukai, n. <>id.+. (Pros.) Rhyming of the initial foot in each line of a stanza; முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை. (காரிகை.ஒழிபி.6, உரை.) |
தலையாட்டம் | talai-y-āṭṭam, n. <>id.+. 1. [M. talayāṭṭam.] Trembling of the head, as from palsy; தலைநடுக்கம். வந்த தலையாட்டமன்றி வந்தது பல்லாட்டம்(அருட்பா.நாமாவளி.164). 2. Extreme fear; 3. Arrogance; 4. [T. talāṭamu.] Plume of hair on a horse's head; |
தலையாட்டி | talai-y-āṭṭi, n. <>id.+. See தலையாட்டிப்பொம்மை. Loc. . |
தலையாட்டிப்பொம்மை | talai-y-āṭṭi-p-pommai, n. <>தலையாட்டி+. Lit., a doll moving its head to and fro. a servile person; (இங்குமங்கும் தலையசைத்தாடும்பொம்மை) எதற்கும் இணங்கி நடப்பவன். |
தலையாடி | talai-y-āṭi, n. <>தலை+. 1. Top most part of the trunk of a tree, commonly of a palm, as unfit for use; பனைமரத்தின் நுனிப்பாகம். (J.) 2. Latter half of a stanza; |
தலையாண்டு | talai-y-āṇṭu, n. <>id,+. Nā. 1. First anniversary of a deceased person; ஆப்திகம். 2. Previous year, as dist. fr. taṉṉāṇṭu; |