Word |
English & Tamil Meaning |
---|---|
தலையுதிர்நெல் | talai-y-utir-nel, n. <>id.+. The paddy collected at the first threshing and used general y as seeds; பெரும்பான்மையும் விதைக்கு உபயோகப்படுவதும் முதலடிப்பில் எடுக்கப் படுவதுமான நெல். Nā. |
தலையுவா | talai-uvā, n. <>id.+. The new moon; அமாவாசை. தலையுவாவிற் செய்யோனாயிறெழ. (விதான.எச்ச.38). |
தலையெடு - த்தல் | talai-y-eṭu-, v. <>id.+. [T. talayettu.] intr. 1. To stand with head erect, as in pride; தலைநிமிர்தல். தேவரெதிர் தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே (கம்பரா.சூர்ப்பண.101). 2. To become eminent, celebrated, distinguished; 3. To flourish, become prosperous; 4. To sprout, come into being; 5. To recover, as a lost position; To remove; |
தலையெடுப்பு | talai-y-eṭuppu, n. <>id.+. 1. Holding the head erect; தலைநிமிர்ச்சி. 2. Pride, arrogance; 3. Growing up and establishing oneself in life, as a youth; 4. Loftiness, prominence, distinction; 5. Improvement in circumstances, recovery from adversity |
தலையெழுத்து | talai-y-eḻuttu, n. <>id.+. 1. Fate, as Brahmās writing on the head; பிரமலிபியாகிய விதி. தன் றலையெழுத்தேயென்ன (பிரபுலிங்.அக்கமா.உற்.35). 2. Heading or title of a book; |
தலையேறுதண்டம் | talai-y-ēṟu-taṇṭam, n. <>id.+. (J.) 1. Unbearable punishment; பொறுக்கக்கூடாத தண்டனை. 2. Heavy labour; compulsory service; 3. Excessive trouble; |
தலையைக்கொடு - த்தல் | talai-y-ai-k-koṭu-, v. intr. <>id.+. See தலைகொடு-. . |
தலையைத்தடவு - தல் | talai-y-ai-t-taṭavu-, v. tr. <>id.+. Lit., to stroke one's head. to cheat a person out of his money; [ஓருவனது தலையைத் தடவுதல்] ஏமாற்றிப் பொருளைப் பெற்றுக்கொள்ளுதல். Colloq. |
தலையொடுமுடிதல் | talai-y-oṭu-muṭital, n. <>id.+. (Puṟap.) Theme describing a wife who dies clasping the severed head of her husband slain in battle; போர்க்களத்தில் மாண்ட கணவனது வெட்டுண்ட தலையைப் பிடித்துக்கொண்டு இறந்துபட்ட மனைவியைப்பற்றிக் கூறும் புறத்துறை. (பு.வெ.4, 13.) |
தலையோடு | talai-y-ōṭu, n. <>id.+. [M. talayōṭu.] Skull; கபாலம். ஊன்முகமார் தலையோட்டுண் (திவ்.பெரியதி.3, 4, 2). |
தலைவட்டம் | talai-vaṭṭam, n. <>id.+. The first round in threshing grain; நெற்கதிர் சூடடித்தலில் முதற்சுற்று. Nā. |
தலைவணங்கு - தல் | talai-vaṇaṅku-, நமஸ்கரித்தல்.-intr v. <>id.+. tr. To do homage; to bow the head; To incline, bend down, as grain in the field; பயிரின்தலை வளைதல். |
தலைவரி | talai-vari, n. <>di.+. 1. Set line, as in a copy-book; மேல்வரிச்சட்டம். 2. [M. talavari.] Poll-tax; |
தலைவரிசை | talai-varicai, n. <>id.+. Magnificent gift; உயர்ந்த சம்மானம். காலன் கொடுத்த மிக்க தலைவரிசையால் (சிலப்.15, 21, உரை). |
தலைவரை | talai-varai, n. <>id.+. Headland, cape, promontory; தரைமுனை. (w.) |
தலைவலி | talai-vali, n. <>id.+. 1. Headache, Cephalalgis; தலைநோவு. தலைவலி மருத்தீடு காமாலை (திருப்பு.153). 2. Facial neuralgia, Myalgia; 3. Painful task or labour; |
தலைவலித்தான் | talai-valittāṉ, n. <>id.+வலி. Pre-eminent, superior person, as one powerful in leadership; தலைமையானவன். தேவர்களில் தலைவலித்தானாயிருக்கிற (ஈடு, 8, 4, 9). |
தலைவழி 1 - தல் | talai-vaḻi-, v. tr. <>id.+. To shave one's head; தலைச்சவரம் பண்ணுதல். Colloq. |
தலைவழி 2 - த்தல் | talai-vaḻi-, v. tr. <>id.+. 1. To shave one's head; தலைச்சவரம் பண்ணுதல். colloq. See தலைதட்டு-. தலைவழித்து ஓருபடி அரிசி கொடுத்தான். |
தலைவழுக்கு | talai-vaḻukku, n. <>id.+. See தலைவழுக்கை. . |
தலைவழுக்கை | talai-vaḻukkai, n. <>id.+. Baldness, alopecia; தலையை வழுக்கையாகச் செய்யும் நோய்வகை. |
தலைவள்ளல்கள் | talai-vaḷḷalkaḷ, n. <>id.+. Munificent patrons of the first order. See முதல் வள்ளல்கள். (பிங்.) |
தலைவளர் - த்தல் | talai-vaḷar-, v. intr. <>id+. To let the hair grow as required ceremonially; தீட்சாகாலம் முதலியவற்றில் தலைமயிர் வளர்த்தல். |