Word |
English & Tamil Meaning |
---|---|
தவசவட்டி | tavaca-vaṭṭi, n. <> தவசம்+. Interest payable in paddy; தானியமாகக்கொடுக்கும் வட்டி. |
தவசி | tavaci, n. <> tapasvin. Ascetic, religious mendicant, recluse; தவத்தோன். ஐயம் புகூஉந் தவசி (நாலடி, 99). |
தவசிப்பட்சி | tavaci-p-paṭci, n. <> தவசி+. Flying fox, Pteropus giganteus, as seeming to perform penance; [தவஞ்செய்யும் பறவை] வவ்வால். |
தவசிப்பிள்ளை | tavaci-p-piḷḷai, n. <> id. +. 1. šaiva servant helping in the performance of pūjā; பூசைப்பணியாள். 2. Cook for Non-Brahman šaivites; |
தவசு | tavacu, n. <> tapas. Religious austerity. See தவம். தவசு வஞ்சித் துறையே (பன்னிரு. பா. 211). (சூடா.) |
தவசுமுருங்கை | tavacu-muruṅkaī, n. Tranquebar gendarussa, m.sh., Justicia tranquebartensis; ஒருவகைச் செடி. (பதார்த்த. 542.) |
தவடை | tavaṭai, n. [T. davada, K. tavade.] Cheek; தாடை. |
தவடைசுத்தி | tavaṭai-cutti, n. <> தவடை+. A slap on the cheek; கன்னத்தில்விழும் அறை. |
தவண் 1 | tavaṇ, n. perh. தவு-. Circle drawn with lime, or string tie around a limb, above the site of a poisonous bite with incantations to stop the spread of the poison; கடித்த இடத்திலேயே விஷம் தங்குமாறு இடும் சுண்ணாம்புவட்டம் அல்லது கயிற்றுக்கட்டு. (J.) |
தவண் 2 | tavaṇ, n. White pulpy matter in the palmyra nut. See தகன், 2. Tinn. |
தவண்டை 1 | tavaṇṭai, n. [K. tavaṭe.] 1. A small drum; பேருடுக்கை. தாரை நவுரி தவண்டைதுடி நாகசுரம் (கூளப்ப. 282). 2. Swimming by striking against the water with hands and feet; 3. Anxiety and distress for want of the necessaries of life; |
தவண்டை 2 | tavaṇṭai, n. See தவடை. Loc. . |
தவண்டைப்படு - தல் | tavaṇṭai-p-paṭu-, v. intr. <> தவண்டை1+. See தவண்டையடி-, 2. (J.) . |
தவண்டையடி - த்தல் | tavaṇṭai-y-aṭi-, v. intr. <> id. +. Loc. 1. To splash and play in the water, as children; நீர்விளையாடுதல். 2. To be in straits; |
தவண்டையாடு - தல் | tavaṇṭai-y-āṭu-, v. intr. <>id. +. See தவண்டையடி-, 2. . |
தவணை 1 | tavaṇai, n. 1. Joint, in carpentry; சட்டம்பதிக்குங் காடி. 2. Raft or float for crossing rivers, especially one made of earthen pots and bamboos; |
தவணை 2 | tavaṇai, n. [T. tavana, M. tavaṇa.] Limited time, fixed term for payment of a due or instalment, period of revenue collection, especially of land tax; தொகை செலுத்துதல் முதலியவற்றிற்கு ஏற்படுத்திய கெடு. உறுவன்கூறுந் தவணையன்றாதலாலே (சேதுபு. வேதாள. 70). |
தவணைக்கடை | tavaṇai-k-kaṭai, n. <> தவணை2+. Banking house of a Nāṭṭukkōṭṭai Ceṭṭi; நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் லேவாதேவிக் கடை. T. |
தவணைக்கணக்கு | tavaṇai-k-kaṇakku, n. <> id. +. Periodical accounts of land-revenues; கெடுவிற் செலுத்தற்குரிய நிலவரியின் கணக்கு. |
தவணைக்கிரயம் | tavaṇai-k-kirayam, n. <> id. +. Mortgage by conditional sale; தவணைக்குள் ஒத்தித்தொகை செலுத்தாவிடில் ஒத்திக்காரனுக்கே நிலம் உரிமையாவது என்ற நிபந்தனைக்குட்பட்ட ஒத்தி. |
தவணைச்சீட்டு | tavaṇai-c-cīṭṭu, n. <> id. +. Bond specifying a fixed term; கெடு வைத்தெழுதிய பத்திரம். |
தவணைத்திரட்டு | tavaṇai-t-tiraṭṭu, n. <> id. +. Kistbundy or account showing the demand and collection of each kist; சாகுபடிவரி வசூற் கணக்கு. Nā. |
தவணைப்பணம் | tavaṇai-p-paṇam, n. <> id. +. Money payable in instalments, periodical payment; கெடுப்பிடி செலுத்தவேண்டிய தொகை. கருது நிலுவைப்பணந் தவணைப்பணங்கள். . . கொடுத்தும் (திருவேங். சத. 28). |
தவணைப்புளி | tavaṇai-p-puḷi, n. See தவனப்புளி. Tinn. |
தவணைப்பொருத்து | tavaṇai-p-poruttu, n. <> தவணை1+. A groove or mortise on the top of a gate or door-post; கதவு நிலை முதலியவற்றிலுள்ள சந்து. |
தவணைபார் - த்தல் | tavaṇai-pār-, v. intr. <> தவணை2+. To record and inspect the register of growing crops; சாகுபடிக் கணக்குப் பார்த்தல். |
தவணைமறியல் | tavaṇai-maṟiyal, n. <> id. +. Imprisonment for a limited term; குறிப்பிட்ட காலம்வரை அடைக்குஞ் சிறைக்காவல். (J.) |