Word |
English & Tamil Meaning |
---|---|
தவலை | tavalai, n. [T. tapela, K. tapalē, M. tavala.] Metallic pot with a wide mouth; அகன்றவாயுடைய பாத்திரவகை. |
தவலைச்செம்பு | tavalai-c-cempu, n. <> தவலை+. A kind of vessel; செம்புவகை. |
தவலைப்பானை | tavalai-p-pāṉai, n. <> id. +. See தவலை.Tinn. . |
தவலையடை | tavalai-y-aṭai, n. <> id. +. Rice-cake cooked in a tavalai; தவலையிலிட்டுச் சமைத்த அடைவகை. |
தவலோகம் | tava-lōkam, n. <> tapōlōka. An upper world, sixth of mēl-ēḻ-ulakam, q.v.; மேலேழுலகத்துள் ஆறாவது. தவலோகங் கடந்துபோய் (திருவிளை. மலயத்துவ. 28). |
தவவிளக்கு | tava-viḷakku, n. <> தவம்1+. Penance, considered as a light illuminating the past, present and future; [முக்காலத்தையும் விளக்கவல்லது] தவமாகிய தீபம். எதிர்வது மிறந்தது மெய்திநின்றது மதிர்வறு தவவிளக்கெறிப்பக் கண்டவன். (சீவக. 2850). |
தவவீரர் | tava-vīrar, n. <> id. +. Sages, as heroic in performing austerities; [தவம் இயற்றுவதில் வீரராயுள்ளார்] முனிவர். தவவீரர் திசை சிலம்பத் துதியோதி (சீவக. 3104). |
தவவேடம் | tava-vēṭam, n. <> id. + vēṣa. Ascetic's garb or guise; முனிவர் கோலம். தகவில தவவேடம் (கம்பரா. வனம்புகு. 24). |
தவவேள்வி | tava-vēḷvi, n. <> id. +. See தவயாகம். (சி. சி. 8, 23, சிவஞா.) . |
தவழ் - தல் | tavaḻ-, 4 v. intr. [K. tevaḷ.] 1. To creep, crawl, as infants, lizards, snakes; ஊர்தல். தங்கள்பாடியில் வளர்ந்துமா மருதிடைத் தவழ்ந்த . . . கருணையங்கடலே (பாரத. கிருட்டிணன். 91). 2. To leap and flow, as waves; 3. To extend, traverse, spread on all sides; |
தவழ்கரடி | tavaḻ-karaṭi, n. <> தவழ்+. Badger, Indian ratel, Mellivora indica, as a creeping bear; விலங்குவகை. |
தவழ்சாதி | tavaḻ-cāti, n.<> id. +. Class of creatures that move slowly on all fours; ஊர்ந்துசெல்லும் உயிரினம். (சூடா.) |
தவழ்புனல் | tavaḻ-puṉal, n. <> id. +. Water of a stream flowing gently; மெல்லச் செல்லும் ஆற்றுநீர். தவழ்புனலிருதூணி. (தைலவ. தைல.13). |
தவழ்வன | tavaḻvaṉa, n. <>id. See தவழ்சாதி. . |
தவழவாங்கிக்கட்டு - தல் | tavaḻa-vāṅki-k-kaṭṭu-, v. tr. <> id. +. (J.) 1. To tie a bullock's neck to its forelegs to prevent straying; மாட்டுக் காலைக் கழுத்துடன் பிணைத்துத் தளைதல். 2. To tie a string binding the neck of a boy and his toe together, as a punishment; |
தவழவாங்கு - தல் | tavaḻa-vāṅku-, v. tr. <> id. +. 1. To deprive a person of all his property, holding him down and robbing him; ஒருவனைக் குனியவைத்து இமிசித்து அவன் சொத்து முழுமையும் அபகரித்தல் (J.) 2. To weary a person by overwork; |
தவளசத்திரம் | tavaḷa-cattiram, n. <> dhavala + chatra. White umbrella, one of the insignia of royalty; அரசர்க்குரிய வெண்கொற்றக்குடை. தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்கு. (பு. வெ. 9, 23, உரை). |
தவளத்தொடை | tavaḷa-toṭai, n. <> தவளம்+. Garland of tumpai flowers; தும்பைமாலை. (காளத். உலா.132.) |
தவளம் | tavaḷam, n. <> dhavala. 1. White; ash -colour, grey; வெண்மை. தவளவாணகை கோவல னிழப்ப (சிலப். 4, 55). 2. White pepper, the mature seed of black pepper; 3. Camphor; 4. An arsenic; |
தவளமிருத்திகை | tavaḷa-miruttikai, n. <>id. +. Lime; சுண்ணாம்பு. (யாழ். அக.) |
தவளிதம் | tavaḷitam, n. <> dhavalita. Whiteness; வெண்மை. (w.) |
தவளை | tavaḷai, n. <> தவ்வு-. [K. M. tavaḷa.] Animals of the frog and toad variety, Batrachia ecandata; நீர்வாழ்சாதிவகை. தவளைத் தண்டுறை கலங்கப் போகி (பெருங். மகத. 3, 21) . |
தவளைக்கல் | tavaḷai-k-kal, n. <> தவளை+. Laterite; சொறிக்கல். (w.) |
தவளைக்காய் | tavaḷai-k-kāy, n. <> id. +. 1. See தவளை. Madr. . 2. Flat tile ricochetting on the water; 3. Swelling of the biceps, as caused by a blow; |
தவளைக்கால் | tavaḷai-k-kāl, n. <> id. +. See தவளைக்குரங்கு. (W.) . |