Word |
English & Tamil Meaning |
---|---|
தவணைமுடக்கம் | tavaṇai-muṭakkam, n. <> id. +. Annual account showing particulars of the demand, collection and balance of land-revenue, arrears and current; நிலவரி வசூற் கணக்கு. Nā. |
தவணையுண்டி | tavaṇai-y-uṇṭi, n. <> id. +. Bill of exchange payable at a fixed period after presentation; கெடுவில் கொடுத்தற்குரிய உண்டியற் சீட்டு. |
தவத்தர் | tavattar, n <> தவம்1. Ascetics; முனிவர். தவத்த ரிரப்பெனக் கொண்டுசென்று குறுகினர் (கந்தபு. ததீசியுத். 58). |
தவத்தி | tavatti, n. <> id. 1. Female ascetic; தவப்பெண். 2. Female care-taker in a Roman Catholic church; |
தவதாயம் | tavatāyam, n. <> U. tavāi. Affliction, straits; இடுக்கண். (J.) |
தவதாயி - த்தல் | tavatāyi-, 11 v. intr. <> தவதாயம். To be in straitened circumstances; துன்பநிலைக்குள்ளாதல். (w.) |
தவந்து | tavantu, n. Grain; தானியம். (யாழ். அக.) |
தவநிலை | tava-nilai, n. <> தவம்1+. Performance of penance; தவச்செயல். அருச்சுனன் தவநிலைச்சருக்கம். (பாரத.) |
தவப்பழி | tava-p-paḻi, n. <> id. +. Hungerstrike; உத்தேசகாரியத்தைப் பிறரிடம் பெறற்பொருட்டுக் கொலைப்பட்டினி கிடக்கை. (Insc.) |
தவப்பள்ளி | tava-p-paḷḷi, n. <> id. +. Hermitage; முனிவர்வாசம். எய்தினாள். . . தவப்பள்ளியே (சீவக. 347). |
தவம் 1 | tavam, n. <> tapas. 1. Penance, religious austerities; பற்றை நீக்கிக் காயக்கிலேசஞ் செய்துகொண்டு கடவுளை வழிபடுகை. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் (குறள், 266). 2. Result of meritorious deeds; 3. Householder's life dist. fr. naṟṟavam; 4. Chastity; 5. A section of the kalam-pakam poem, dealing with tavam; 6. Heat; |
தவம் 2 | tavam, n. <> stava. Praise, adoration; தோத்திரம். வேதபாதத் தவத்தால் (கோயிற்பு. இரணிய. 81). |
தவம் 3 | tavam, n. <> dava. (யாழ். அக.) Forest காடு. See தவாக்கினி, 2. |
தவமுதல்வி | வயஎய-அரவயடஎ¬இ n. <> தவம்1+. See தவமுதுமகள். இருந்தவமுதல்வியொடு பின்னையுமல்லிடைப் பெயர்ந்தனர் (சிலப்.13, 135). |
தவமுதுமகள் | tava-mutu-makaḷ. n. <> id. +. A female ripe in asceticism; தவத்தில் முதிர்ந்தவள். உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளைவிட்டு. (குறள், 501, உரை). |
தவமுதுமகன் | tava-mutu-makaṉ n. <> id. +. A male ripe in asceticism; தவத்தில் முதிர்ந்த முனிவன். தவமுதுமகனொடு கருமங் கூறி (பெருங். இலாவாண.20, 69). |
தவயாகம் | tava-yākam, n. <> id. +. Performance of penance or religious austerities, as a sacrifice, one of aivakai-yākam, q.v.,; ஐவகை யாகத்தொன்றாகிய விரதாநுஷ்டானம். தவயாகமாவது உடல்வாடச் சாந்திராயண முதலிய விரதங்களை யனுட்டித்தல் (சிவதரு. ஐவகை. 2, உரை). |
தவர் - தல் | tavar-, 4 v. tr. cf. தமர்2. To bore a hole; துளைத்தல். வண்குறிஞ்சியிசை தவருமாலோ. (திவ். திருவாய். 9, 9, 1). |
தவர் 1 | tavar, n. <> தவர்-. cf. தமர்2. Hole in a board; துளை. |
தவர் 2 | tavar, n. prob. sthāvara. Bow; வில். (திவா.) தவரிற் புரிநாணுற (பாரத. திரௌ. 47). |
தவர் 3 | tavar, n. <> T. dabara. See தவறை. Nauṭ. . |
தவர்க்கம் | tavarkkam, n. <> ta-varga. The dental series in Sanskrit ai-varukkam; வடமொழி ஐவருக்கங்களில் தகரமுதல் நகரமீறான ஐந்தெழுத்துக்கள். |
தவராசம் | tavarācam, n. <> tavarāja. White sugar from Arabian manna; வெள்ளைச் சருக்கரை. (மூ. அ.) |
தவல்(லு) - தல் | taval-, 3 v. intr.<> தவல். To leave, depart; நீங்குதல். அழுங்க றவலா வுள்ளமொடு (மணி. 4, 119). |
தவல் | taval, n. <> தவு-. [K. tavu.] 1. Diminishing, decreasing; குறைவு. தவலருங் கருநீர்க் குண்டகழ் (கல்லா. 54, 38). 2. Failure; 3. Fault; 4. Death; 5. Suffering from poverty; |
தவலத்து | tavalattu, n. <> U. daulat. Managing, reigning, governing; ஆட்சி. (W.) |
தவலம் | tavalam, n. An arsenic; அவுபல பாஷாணம். (யாழ். அக.) |