Word |
English & Tamil Meaning |
---|---|
தவிட்டுப்பாற்சொற்றி | taviṭṭu-p-pāṟ-coṟṟi, n. <> id. +. A plant, Ruellia; ஒருவகைப் பூடு. |
தவிட்டுப்பிட்டு | taviṭṭu-p-piṭṭu, n. <> id. +. [M. taviṭṭupiṭṭu.] Fried ball made of bran; ஒருவகைப் பண்ணிகாரம். (w.) |
தவிட்டுப்பில்லை | taviṭṭu-p-pillai, n. <> id. + புல்லை. Cow partly white and partly brancoloured; வெண்ணிறமும் தவிட்டுநிறமும் கலந்திருக்கப்பெற்ற பசு. Tp. |
தவிட்டுப்புறா | taviṭṭu-p-puṟā, n. <> id. +. [M. taviṭṭuprāvu.] Little brown dove, Turtur cambayensis; தவிட்டுநிறமுள்ள சிறுபுறாவகை. (பதார்த்த. 909.) |
தவிட்டுப்பேன் | taviṭṭu-p-pēṉ, n. <> id. +. A kind of small louse; சிறுபேன்வகை. (w.) |
தவிட்டுப்பொட்டு | taviṭṭu-p-poṭṭu, n. <> id. +. Loc. 1. Refuse of bran; கழிபட்ட தவிடு. 2. Moth-eaten places in cloths; |
தவிட்டுமயிர் | taviṭṭu-mayir, n. <> id. +. (w.) 1. Brown hair; செம்பட்டமயிர். 2. First down of birds; |
தவிட்டுமாக்களி | taviṭṭu-mā-k-kaḷi, n. <> id. +. See தவிட்டுக்களி. . |
தவிட்டை | taviṭṭai, n. <> id. See தவிட்டான். (யாழ். அக.) . |
தவிட்டைப்புறா | taviṭṭai-p-puṟā, n. <> id. +. See தவிட்டுப்புறா. (யாழ். அக.) . |
தவிடச்சு | taviṭaccu, n. Yellow-flowered climbing Indian linden. See செஞ்சடைச்சி . . |
தவிடிலை | taviṭilai, n. <> தவிடு+. Oblong-leaved corymbose Indian linden,1. sh., Grewia columnaris; செடிவகை. (L.) |
தவிடு | taviṭu, n. perh. தவு-. 1. [T. K. tavudu, M. taviṭu.] Bran; நெல் முதலியவற்றைக் குத்தி அரிசிமுதலியன எடுத்தபின் உமியொழியக் கழிந்த பகுதி. நெல்லினுக்குத் தவிடுமிக ளனாதியாயும் (சி. சி. 11, 6). 2. Minute particle; 3. See தவுட்டை. |
தவிடுபொடியா - தல் | taviṭu-poṭi-y-ā-, v. intr.<> தவிடு +. Colloq. 1. To be broken into minute pieces; பொடிப்பொடியாதல் 2. To be ruined beyond recovery; |
தவிப்பு | tavippu, n. <> தவி-. 1. Anxiety, distress for a thing, languishing, as for a thing; வருந்துகை. நோன்பிற் றவிப்பு (சேதுபு. சேதுச. 50). 2. Thirst; |
தவிர் - தல் | tavir-, 4 v. intr. 1. To abstain, refrain; விலகுதல். (பிங்.) 2. To cease, become extinct; 3. To stay, abide; 4. To subside, abate; 1. To leave, separate from, forsake; 2. To shun, avoid, omit, renounce; 3. To gidve up, cease from; |
தவிர் - த்தல் | tavir-, 11 v. tr. Caus. of தவிர்1-. 1. To put away, remove, dispel, chase away, expel, exclude; நீக்குதல். அச்சந் தவிர்த்த சேவகன் (திருவாச. 3, 98). 2. To discontinue; 3. To check, hinder, interrupt, prevent, frustrate; 4. To control, restrain; |
தவிர்ச்சி | tavircci, n. <> தவிர்1-. 1. Abiding, staying; தங்குகை. களவினுட் டவிர்ச்சி வரைவினீட்டம் (இறை. 32). 2. Interruption, cessation, break; |
தவிர்த்துவினைசெயல் | tavirttu-viṉai-ceyal, n. <> தவிர்2-. Warding off hostile arrows and shooting arrows in return, one of paca-kiruttiyam, q. v.; பஞ்சகிருத்தியங்களுள் பகைவரெய்யும் அம்பினைத்தடுத்து அவர்மேல் அம்பெய்யுஞ் செயல். தொடையும் . . . தவிர்த்துவினைசெயலும் என ஐவினையாம் (சீவக.1676, உரை). |
தவிர | tavira, <> தவிர்1-. v. pple. Except; Unless; நீங்க. அது ஒன்றுதவிர எல்லாம் உண்டு.- Conj. ஒழிய. நீ வந்தால்தவிர நடவாது. |
தவில் | tavil, n. <> U. tabl. A kind of two-headed drum; மேளவகை. செந்தவில் சங்குடனே (திருப்பு. 550). |
தவிலை | tavilai, n. See தவலை. (யாழ். அக.) . |
தவிவு | tavivu, n. <> தவிர்1-. Obstruction; இடையீடு. தவிவில்சீர் (திவ். திருவாய். 3, 4, 4). |
தவீசம் | tavīcam, n. See தவிசம். (யாழ். அக.) . |
தவு - தல் | tavu-, prob. 11 & 4 v. intr. <> தபு-. cf. dabh. [K. tavu.] To shrink; to be reduced; to be ruined; குன்றுதல். எஞ்ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள், 361). |
தவுக்கார் | tavukkār, n. 1. Pounded lime; சுண்ணச்சாந்து (யாழ். அக.) 2. Curves of a cornice; 3. Interstices between the bricks of a wall; |