Word |
English & Tamil Meaning |
---|---|
தவுக்கார்பண்(ணு) - தல் | tavukkār-paṇ-, v. tr. <> தவுக்கார்+. To plaster roughly; மட்டிக் காரை பூசித்தேய்த்தல்; Loc. |
தவுக்கை | tavukkai, n. <> K. tabaku. A kind of salver; தட்டுவகை. (S. J. I. ii, 15, வரி 7.) |
தவுசயம் | tavucayam, n. See தவுசலம். . |
தவுசலம் | tavucalam, n. cf. damšamūla. Horse-radish tree. See முருங்கை. (மலை.) |
தவுசெலம் | tavucelam, n. See தவுசலம் (யாழ். அக.) . |
தவுட்டை | tavuṭṭai, n. Felted lance-leaved Indian linden, m.sh., Grewia hirsuta; செடி வகை. (w.) |
தவுடு 1 | tavuṭu n. <> U. daur. (w.) 1. Running, galloping; குதிரைப்பாய்ச்சல். 2. Invasion, incursion, military expedition; |
தவுடு 2 | tavuṭu, n. See தவிடு. . |
தவுடு 3 | tavuṭu, n. See தவடை. Loc. . |
தவுடை | tavuṭai, n. See தவடை. Loc. . |
தவுதபடம் | tavuta-paṭam, n. <> dhauta-paṭa. White cloth; வெண்டுகில். (வேதா. சூ. 43, உரை.) |
தவுதம் | tavutam, n. <> dhauta. See தவுதபடம். (வேதா. சூ. 43.) . |
தவுரிதகம் | tavuritakam, n. <> dhauritaka. Trotting pace of a horse; குதிரை நடையுள் ஒன்று. |
தவுரேத்து | tavurēttu, n. <> U. tauret. The Old Testament; விவிலியநூலின் பழைய ஏற்பாடு. Muham. |
தவுல் 1 | tavul, n. <> U. tabl. See தவில் Colloq. . |
தவுல் 2 | tavul, n. <> U. daul. Estimate, especially of probable revenue. See டவுல். |
தவுலத்து | tavulattu, n. <> U. daulat. See தவலத்து. Colloq. . |
தவுஜி | tavuji, n. <> U. taujīh. Allowance made to landholders, pension; உபகாரச் சம்பளம். |
தழங்கல் | taḻaṅkal, n. <> தழங்கு-. (பிங்.) 1. Roaring; ஆரவாரம். 2. Sound of a lute; |
தழங்கு - தல் | taḻaṅku-, 5 v. intr. To sound, roar, resound; முழங்குதல். தழுங்குகுரன் முரசமொடு (அகநா. 24). |
தழங்குரல் | taḻaṅkural, n. <> தழங்கு-+குரல். Rattling sound, as of a drum; ஒலிக்குமோசை. தழங்குரன்முரசிற் சாற்றி (சீவக. 378). |
தழம் | taḻam, n. perh. taila. Ointment; தயிலம். (யாழ். அக.) |
தழல்(லு) - தல் | taḻal, 3 v. intr. 1. To glow; to be very hot; to burn; அழலுதல். தழன்றெரி குண்டம் (திருவிளை. நாக. 6). 2. To shine; |
தழல் | taḻal, n. <> தழல்-. [K. taṇal.] 1. Fire; நெருப்பு. (பிங்.) 2. Live coals of fire, embers; 3. The third nakṣatra. 4. The 18th nakṣatra. 5. Poison; 6. Ceylon leadwort. 7. A mechanism for scaring away parrots; 8. Sling; |
தழல்விழுங்கி | taḻal-viḻuṅki, n. <> தழல்+. Ostrich. See தணல்விழுங்கி. (w.) |
தழலாடி | taḻal-āṭi, n. <> id+ஆடு-. šiva, as dancing with fire; [தீயோடு ஆடுபவன்] சிவன். சடையானே தழலாடீ (திருவாச. 39, 2). |
தழலாடிவீதி | taḻal-āṭi-vīti, n. <> id. + id. + vīthi. Forehead; நெற்றி. தழலாடி வீதிவட்ட மொளி (திருப்பு. 320). |
தழலி | taḻali, n. <> id. Fire; அக்கினி. (பிங்.) தழலியென்பா னூக்கமோ டொருவ னின்றான் (சேதுபு. கத்துரு. 58). |
தழற்கல் | taḻaṟ-kal, n. <> id. +. Kunkar; சுக்கான்கல். (யாழ். அக.) |
தழற்சி | taḻaṟci, n. <> தழல்-. Heat, glow, burning; அழலுகை. (w.) |
தழற்சொல் | taḻaṟ-col, n. <> தழல்+. Threat, warning, as fiery words; [தழலைப் போன்ற சொல்] தண்டத்தைத் தோற்றுவிக்கும் சொல். தண்ணிய சிறிய வெய்ய தழற்சொலாற் சாற்றுகின்றான் (சீவக. 747). |
தழற்பூமி | taḻaṟ-pūmi, n. <> id. +. Brackish soil; உவர்மண். (சங். அக.) |
தழனாள் | taḻaṉāḷ, n. <>id. + நாள். The third nakṣatra as having Agni as the presiding deity; [அக்கினியை அதிதேவதையாக வுடைய நாள்] கார்த்திகை நாள். (திவா.) |
தழாத்தொடர் | taḻā-t-toṭar, n. <> தழுவு- + ஆ neg. +. (Gram.) Phrase in which a word does not qualify or govern the word immediately following it, opp. to taḻuvu-toṭar; ஒரு சொல் அடுத்துவருஞ் சொல்லை நேரே தழுவாது அமையுந் தொடர். (நன்.153, உரை.) |