Word |
English & Tamil Meaning |
---|---|
தனதுபற்று | taṉatu-paṟṟu, n. <> id. +. Debit in personal account; சொந்தப்பணப்பற்று. |
தனதுருவம் | taṉa-turuvam, n. <> தன் + dhruva. (Astron.) Epoch longitude of a planet or its apsis which is to be added in calculations; பின்னர்ச் சென்ற நாட்களுக்குரிய கதியுடன் கூட்டப்பெறும் கணனாரம்ப மூலதின கிரகநிலை. (w.) |
தனந்தயன் | taṉantayaṉ, n. <> stanan-dhaya. Sucking child; பாலுண்குழவி. மாதா மகவுக்குவந்த வியாதிநிமித்தம் மருந்துதின்னக் கண்டது தனந்தயனுக்கொழிய வேறில்லை (சித். மரபு. கண்.19). |
தனநிக்ஷேபம் | taṉa-nikṣēpam, n. <> dhana +. Storing treasure under earth, one of capta-canāṉam, q.v.; சப்தசந்தானங்களுள் பூமியின் கீழ் நிதியைப் புதைக்கை. |
தனபதி | taṉa-pati, n. <> id. + pati. God of wealth; குபேரன். தோழன் தனபதி (திருவிசை. கரு. பதி. 8, 6). |
தனபதித்துவம் | taṉapatittuvam n. <> id. +. (w.) 1. Opulent condition; செல்வநிலை. 2. Beneficence, liberality; |
தனபாரம் | taṉapāram, n. <> stana + bhāra. Breast-weight, well-developed breast; கொங்கைச் சுமை. அதிபார தனபார வதிரூப மலர்மானை யனையாய் (அரிச். பு. விவாக. 218). |
தனபோகம் | taṉa-pōkam, n. <> id. +. Coition; சையோகம். (W.) |
தனம் 1 | taṉam, n. <> Pkt. tanam <> tva. Affix added to many nouns giving them an abstract meaning; பண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல். வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி (பெருங். நரவாண. 8, 6). |
தனம் 2 | taṉam, n. <> dhana. 1. Wealth, substance, property; செல்வம். (W.) 2. Gold; 3. Seal; 4. Beam across roofing; 5. See தனஸ்தானம். (விதான. மரபிய. 4.) 6. (Arith.) Addition; |
தனம் 3 | taṉam, n. <> stana. Woman's breast; முலை. அரும்பெருந் தனத்தை வேட்டாண் டினவளை . . . விற்பான் வந்தோன் (திருவாலவா. 23, 15). |
தனம் 4 | taṉam, n. <> tarṇa. Calf; பசுக்கன்று. (பிங்.) |
தனம் 5 | taṉam, n. <> candana. Sandal; சந்தனம். (பிங்.) |
தனம் 6 | taṉam, n. prob. vēdana. Affliction; வருத்தம். (அக. நி.) |
தனமதம் | taṉa-matam, n. <> dhana + mada. Pride of wealth; பணச்செருக்கு. Colloq. |
தனயன் | taṉayaṉ, n. <> tanaya. Son; மகன். தானுந் தேருமே யாயின னிராவணன் றனயன் (கம்பரா. பிரமாத். 59). |
தனரேகை | taṉa-rēkai, n. <> dhana + rēkhā. (Palmistry.) Lines in the palm indicating wealth; செல்வத்தைக் குறிப்பிடும் கைரேகை. (w.) |
தனலக்ஷ்மி | taṉa-lakṣmi, n. <> id. +. Goddess of Wealth; செல்வமாகிய திரு. |
தனவந்தன் | taṉavantaṉ, n. <> dhana-vantah masc. nom. pl. of dhanavat. See தனவான். . |
தனவனா | taṉavaṉā, n. <> dhanvana. Sal. See ஆச்சா. (மலை.) . |
தனவான் | taṉavāṉ, n. <> dhana-vān masc. nom. sing. of dhana-vat. Wealthy man; செல்வன். நெடிய தனவானாத லரிது (அறப். சத.1). |
தனவை | taṉavai, n. <> dhanvayāsa. See தனவையாதம். (மலை.) . |
தனவைசியர் | taṉa-vaiciyar, n. <> dhana +. Traders, merchants, one of three vaiciyar, q.v.; பொன்வாணிகர். (பிங்.) |
தனவையாதம் | taṉavaiyātam, n. <> dhanvayāsa. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (மலை.) |
தனன் | taṉaṉ, n. <> dhana. Title of the Vaišya caste; வைசியர் பட்டப்பெயர். சருமன் வருமன் றனன்றாசன் சார்த்திவழங்கு மியற்பெயர்கள் (திருவானைக். கோச்செங். 69). |
தனஸ்தானம் | taṉa-stāṉam, n. <> id. + sthāna. (Astrol.) Second house from the ascendant, as indicating wealth; [செல்வத்தைக் குறிக்குமிடம்] சாதகத்தில் சென்மலக்கினத்திலிருந்து இரண்டாம் வீடு. |
தனாசி | taṉāci, n. <> dhanāšrī. (Mus.) A melody-type; ஓர் இராகம். (பிங்.) புணரிசைத் தனாசிபாடும் பூவையர் (சேதுபு. திருநாட். 90). |
தனாட்டி | taṉāṭṭi, n. <> dhana + ādhyā. Fem. of தனாட்டியன். Rich woman; செல்வமுடையவள். (W.) |
தனாட்டியன் | taṉāṭṭiyaṉ, n. <> id. + ādhya. See தனவான். (W.) . |
தனாதிபன் | taṉātipaṉ, n. <> id. + adhi-pa. See தனபதி. (W.) . |