Word |
English & Tamil Meaning |
---|---|
தனார்ச்சனம் | taṉārccaṉam, n. <> id. + ārjana. Acquisition of wealth; பொருள் சம்பாதிக்கை. (W.) |
தனி | taṉi, n. <> தான். [M. tani.] 1. Singleness; ஒற்றை. தனிக்கலக் கம்பளச்செட்டி (மணி. 29, 6). 2. Seclusion, solitude; 3. Uniqueness, matchlessness; 4. Independence; 5. Purity, genuineness; 6. Helplessness, loneliniess, condition of being forsaken or forlorn; 7. Single-handed winning of all the cards in card-game; |
தனி - த்தல் | taṉi-, 11 v. intr. <> தனி1. 1. To be alone, single, solitary; ஒன்றியாதல். (w.) 2. To be separate, detached from company; 3. To have no equal or match; 4. To be deserted, forsaken, helpless, as by the departure or death of friends; |
தனி | taṉi, n. Lever beam for starting a temple-car; தேர்நெம்புந் தடி. தனிபோட்டுக் கிளப்பி (ஈடு, 3, 10, 2, அரும்.). |
தனிக்கடவுள் | taṉi-k-kaṭavuḷ, n. <> தனி1+. The Absolute Being, the One without a second; ஒப்புயர்வற்ற இறைவன். (w.) |
தனிக்காட்டுராசா | taṉi-k-kāṭṭu-rācā, n. <> id. +. 1. Sole ruler in a jungle; காட்டுத்தலைவன். (w.) 2. One who submits to no rule or order; |
தனிக்காப்பு | taṉi-k-kāppu, n. <> id. +. Invocation in a single verse; ஒற்றைப் பாவாலாகிய காப்பு. (w.) |
தனிக்காவல் | taṉi-k-kāval, n. <> id. +. Solitary confinement; தனியனாக இருக்கும்படி அடைக்குஞ் சிறை. |
தனிக்கி | taṉikki, n. <> U. tanqīh. See தனிக்கை. . |
தனிக்குடி | taṉi-k-kuṭi, n. <> தனி1+. 1. Divided family; வேறாகப்பிரிந்து வாழுங் குடும்பம். இப்போது மகன் தனிக்குடியாயிருக்கிறான். 2. Single family of a caste living among others; 3. Sole tenant, sole tenancy; |
தனிக்குடை | taṉi-k-kuṭai, n. <> id. +. Lit., sole umbrella. Absolute sovereignty; [தனியாகக்கொண்ட குடை] தனியரசாட்சி. (w.) |
தனிக்கை | taṉikkai, n. <> U. tanqīh. Audit, investigation; கணக்குச் சோதனை |
தனிக்கோல் | taṉi-k-kōl, n. <> தனி1+. Sole, absolute sovereignty; ஏகாதிபத்தியம். ஏழுலகுந் தனிக்கோல் செல்ல (திவ். திருவாய். 4, 5, 1). |
தனிகம் | taṉikam, n. <> dhanikā. See தனிகா. (மலை.) . |
தனிகன் | taṉikaṉ, n. <> dhanika. Rich man; செல்வன். Colloq. |
தனிகா | taṉikā, n. <> dhanikā. Coriander. See கொத்தமல்லி. (மலை.) |
தனிகி | taṉiki, n. <> U. tanqīh. See தனிக்கை. . |
தனிகை | taṉikai, n. prob. தனி1. (யாழ். அக.) 1. Girl, young woman; இளம்பெண். 2. Chaste woman; |
தனிச்சி | taṉicci, n. <> தனி-. A woman separated from her husband; கணவனைப்பிரிந்து தனித்திருப்பவள். காரென்செய்யாது தனிச்சியையே (இலக். வி. 558, உதா.). |
தனிச்சித்தம் | taṉi-c-cittam, n. <> தனி1 + citta. Concentrated mind; ஏகாக்கிரமான மனம். தனிச்சித்தம் வைத்த றேற்றாம் (சீவக. 2939). |
தனிச்சீர் | taṉi-c-cīr, n. <> id. +. Detached foot at the end of the second line of nēr-icai-veṇpā and kali-veṇpā, rhyming with initial foot of the first two lines; நேரிசைவெண்பா கலிவெண்பாக்களின் இரண்டாமடியிறுதியில் எதுகை பெற்றுவரும் சீர். |
தனிச்செய்கை | taṉi-c-ceykai, n. <> id. +. Single-handed cultivation of land, not jointly with others; பிறருடன்சேராது தானே செய்யும் விவசாயம். தென்னாட்டுக்கோனாயின சடையன் தனிச்செய்கை (T. A. S. i, 7). |
தனிச்சொல் | taṉi-c-col, n. <> id. +. Detached word like āṅku in kali verse; கலிப்பா முதலியவற்றில் 'ஆங்கு' என்பதுபோலத் தனித்துவருஞ் சொல். (தொல். பொ. 447, உரை.) |
தனிசர் | taṉicar, n. <> தனிசு. 1. Debtors; கடன் வாங்கினோர். 2. Petty chiefs, as always in debt to the overlord; |
தனிசு | taṉicu, n. Debt; கடன். பெரும் பொருட் டனிசுமின்றே . . . போக்குவல் (திருவாலவா. 27, 83). |
தனிட்டை | taṉiṭṭai, n. <> dhaniṣṭhā. 1. The 23rd nakṣatra. See அவிட்டம். (W.) See தனிஷ்டாபஞ்சமி. |