Word |
English & Tamil Meaning |
---|---|
தாமசபதார்த்தம் | tāmaca-patārttam, n. <>id.+. A variety in food and drink, believed to cause sluggishness, bad disposition, etc.; தாமோகுணத்தைப்பெருக்கும் கள் இறைச்சி முதலியன. (W.) |
தாமசபுராணம் | tāmaca-purāṇam, n. <>id.+. The group of the chief Puraṇas exalting šiva, in whom the predominating guṇa is tamas, viz., Caivam, Iliṅkam, Kāntam, Akkiṉēyam, Maccam, Kūrmam; தமோகுணப்பிரதான ரான சிவபிரானைப்பற்றிய சைவம், இலிங்கம், காந்தம், ஆக்கினேயம், மச்சம், கூர்மம் என்ற புராணத்தொகுதி. (மச்சபு.முகவுரை.பக்.7.) |
தாமசம் | tāmacam, n. <>tāmasa. See தாமதம். தாமச நீ செப்பாதே தசரதேந்திரா (இராமநா.பாலகா.9). |
தாமசவேளை | tāmaca-vēḷai, n. <>id.+. 1. Time when one is in anger or passion; கோபசமயம். (W.) 2. (Astrol.) |
தாமசன் | tāmacaṉ, n. <>id. Slow, inactive person; மந்தன். Colloq. |
தாமசாத்திரம் | tāmacāttiram, n. See தாமதாத்திரம். (சிலப். 6, 11, அரும்.) . |
தாமசி - த்தல் | tāmaci-, 11 v. tr. See தாமதி-. . |
தாமணி | tāmaṇi, n. <>dāmanī. 1. Long line of rope with halters attached for fastening cattle; மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக்கயிறு. Loc. 2. Headstall of a halter; 3. String, rope; 4. Sheet in boat tackle; |
தாமணிச்சுழி | tāmaṇi-c-cuḷi, n. <>தாமணி+. Curly marks of cattle on the two sides of the spinal column; மாடுகளின் முதுகந்தண்டின் இரு பக்கத்துமுள்ள சுழிகள். (அபி.சிந்.787.) |
தாமணிப்பிணையல் | tāmaṇi-p-piṇaiyal, n. <>id.+. Yoking of five or seven bulls in a long rope for threshing corn; சூட்டடிக்கதிர்களைக் கடாவிட்டு ழுக்குவதற்கு 5 அல்லது 7 மாடுகளை ஒரு கயிற்றில் இணைக்கும் பிணைப்பு. Loc. |
தாமத்தர் | tāmattar, n. A commentator on Kuṟal; திருக்குறளுரையாசிரியருள் ஒருவர். தருமர்மணக்குடவர் தாமத்தர் (தொண்டை. சத. 40, மேற்கோள்). |
தாமதப்படு - தல் | tāmata-p-paṭu-, v. intr. <>tāmasa+. See தாமதி-, 1, 2. Colloq. . |
தாமதப்பல்லி | tāmata-p-palli, n. <>id.+. Chirping of lizard believed to indicate delay, obstruction or misfortune; தொட்டகாரியம் விரைவில் முடியாதென்பதைக் குறிக்கும் பல்லிச்சொல். (W.) |
தாமதபுராணம் | tāmata-purāṇam, n. <>id. +. See தாமசபுராணம். (சி. போ. பா. 71.) . |
தாமதம் | tāmatam, n. <>tamasa. 1. See தமோகுணம். . 2. See தாமதாத்திரம். 3. Dilatoriness, tardiness, delay; 4. Slowness, dullness, inactivity; |
தாமதவேளை | tāmata-vēḷai, n. <>id.+. Last part of the day, as unfavourable for enterprise; அசுபசமயமாகிய நாளின் கடைப்பகுதி. (W.) |
தாமதாத்திரம் | tāmatāttiram, n. <>id.+ astra. An arrow of mystic power, believed to cause blindness and darkness; பகைவருடைய கண்ணும் மனமும் இருளடையச்செய்யும் அம்புவகை. (மணி, 1, 19, உரை.) |
தாமதி - த்தல் | tāmati-, 11 v. intr. <>id. 1. To delay; to be tardy; காலந் தாழ்த்தல். அருடாமதிக்க (அஷ்டப்.திருவரங்கத்த.12). 2. To be detained, hindered; 3. To be reluctant, backward; |
தாமநிதி | tāma-niti, n. <>dhāman+. Sun, as the treasure of light; (ஒளியின் பொக்கிஷம்) சூரியன். (யாழ்.அக.) |
தாமநூல் | tāma-nūl, n. perh. dhāman+. Medical science; ஆயுள்வேதம். தாமநூலொரு மருத்துவற ¢றருதிர் (உபதேசகா.சிவத்துரோ.330). |
தாமம் 1 | tāmam, n. <>dāman. 1. Rope, cord, string; கயிறு. (பிங்). 2. Line to tie cattle. 3. Wreath, flower garland, chaplet, especially worn on shoulders; 4. Necklace of beads; string, as of pearls; 5. Woman's waist ornament of 16 or 18 strings of beads; 6. Row, line; 7. Flower; 8. An ornamental part of a crown, one of the five muṭi-y-ṟuppy, q.v.; 9. Senna. |
தாமம் 2 | tāmam, n. cf. sāma-ja. Elephant; யானை (சூடா.) |
தாமம் 3 | tāmam, n. <>dhāman. 1. Place, position; இடம். (அக.நி.) 2. Final bliss; 3. City; 4. Town in marutam tract; 5. Battlefield; 6. Mountain; 7. Light, lustre, brilliancy; 8. Fame, celebrity; 9. Sandal; 10. Body; 11. Birth, transmigration; |