Word |
English & Tamil Meaning |
---|---|
தாமரையிலை | tāmarai-y-ilai, n. <>id. +. A Vaiṣdṇava caste mark, as resembling a lotus leaf; ஒருசார் வைணவர் அணியும் தாமரையிலை போன்ற நெற்றிக்குறி. |
தாமரைவளையம் | tāmarai-vaḷaiyam. n. <>id. +. Lotus stalk; தாமரைத்தண்டு. வார்செய் தண்டாமரை வளையம் (சீவக.1671). |
தாமரைவற்றல் | tāmarai-vaṟṟal, n. <>id. +. Dried root of the lotus, used for food; வற்றலாகச் செய்த தாமரைக்கிழங்கு. (W.) |
தாமரைவாசி | tāmarai-vāci, n. <>id. + vāsinī. See தாமரையாள். (யாழ். அக.) . |
தாமலகி | tāmalaki, n. <>tāmālakī. Niruri. See கீழாநெல்லி. (மலை.) |
தாமலகிதளம் | tāmalaki-taḷam, n. prob. id.+. East Indian plum. See தாளிசபத்திரி. (மூ.அ.) |
தாமளை | tāmatai, n. Mast-wood See புன்னை (மலை.) . |
தாமன் | tāmaṉ, n. <>dhāman. Sun; சூரியன். தாமன் மேல்வரவர (பாரத.முதற்போர்.42). |
தாமனி | tāmaṉi, n. <>dāmanī. Tethering rope for cattle; See தாமணி. (சூடா.) |
தாமாசாகி | tāmācāki, n. (G. N. A. D. I, 279.) 1. The equitable division of the effects of an insolvent amongst his creditors; கடனிறுக்க வழியற்றவனுடைய சொத்துக்களைக் கடன்காரருக்குச் சமமாகப் பகிர்கை. 2. A money allowance paid to monigars and karnams in lieu of service inams resumed; |
தாமாவிருவர் | tāmā-v-iruvar, n. <>தாவு-+மா+. Asvins, the twin gods, as born of a mare; (குதிரையினின்று பிறந்த இரட்டையர்] அசுவினிதேவர்கள். தாமா விருவருந் தருமனு மடங்கலும் (பரிபா.3, 8). |
தாமான் | tāmāṉ, n. cf. dāman. [T. damān, M. temmān.] Lower back rope of a dhoney sail, back clew line; கப்பற் பின்பக்கத்துக் கயிறு. Naut. |
தாமான்பாள் | tāmāṉ-pāḷ, n. <>தாமான்+. Sheet; கப்பற்கயிறு. Naut. |
தாமானிலேவா - தல் [தாமானிலேவருதல்) | tāmāṉilē-vā-, v. intr. <>id.+. To let a vessel drive before the wind; காற்றுப் போக்கிற் கப்பலோட்டுதல். Naut. |
தாமாஷ் | tāmāṣ, n. <>U.dāmāsāhi. Fair and equitable distribution (R. F.); சரியாகப் பகிர்ந்து கொடுக்கை. (W. G.) |
தாமாஷா 1 | tāmāṣā, n.<>U. dāmāsāli. Average; சராசரி. (W.) |
தாமாஷா 2 | tāmāṣā, n. See தமாஷ். Loc. . |
தாமிச்சிரம் | tāmicciram, n. <>tāmisra. 1. Profound darkness; பேரிருள். (இலக். அக.) 2. A hell; 3. Illusion; |
தாமிரகருணி | tāmira-karuṇi, n. <>tāmrakarṇī. Female elephant of the west; மேற்றிசைப் பெண்யானை. |
தாமிரசாசனம் | tāmira-cācaṉam, n. <>tāmra+. Copper-plate grant நிலம் முதலியன தானம் கொடுத்ததைக் குறிக்கும் தாமிரப்பட்டயம். |
தாமிரசிகி | tāmira-ciki, n. <>tāmra-šikhin. Cock, as having red crest; [செந்நிறக் கொண்டையுள்ளது] சேவல். (சங்.அக.) |
தாமிரசிந்தூரம் | tāmira-cintūram, n. <>tāmra+. Calcinated red powder of copper; செம்பைக்கொண்டு செய்த சிந்தூரம். (யாழ். அக.) |
தாமிரநோவு | tāmira-nōvu, n. <>id.+. A disease of ground-nut plants which makes the leaves turn yellow; நிலக்கடலைச்செடியின் இலைகளை மஞ்சணிறமாக்கும் நோய்வகை. |
தாமிரபருணி 1 | tāmira-paruṇi, n. <>tāmra.parṇī. Chief river or Tinnevelly district; திருநெல்வேலி சில்லாவில் ஓடும் முக்கிய நதி. |
தாமிரபருணி 2 | tāmira-paruṇi, n. See தாமிரகருணி. (சது.) . |
தாமிரபல்லவம் | tāmira-pallavam, n. <>tāmra-pallava. Asoka. See அசோகம், |
தாமிரபற்பம் | tāmira-paṟpam, n. <>tāmra+. Calcinated white powder of copper; செம்பினாலான பஸ்மம். |
தாமிரபீசம் | tāmira-pīcam, n. <>id._bīja. Horse gram. See கொள் |
தாமிரம் | tāmiram, n. <>tāmra. Copper; செம்பு. (பிங்.) |
தாமிரவருணம் | tāmira-varuṇam n. <>id. +. Copper colour; செந்நிறம். |
தாமிரிகை | tāmirikai, n. <>tāmrikā. Crabseye. See குன்றி. (மூ.அ.) |
தாமிரை | tāmirai, n. See தாமிரம். (சங். அக.) . |
தாமீகன் | tāmikaṉ, n. <>dāmbhika. Fop. See தாம்பீகன். புகழிலாத தாமீகன் (திருப்பு.530). |