Word |
English & Tamil Meaning |
---|---|
தார்க்காட்டு - தல் | tār-k-kāṭṭu-,. v. tr. <>தாழ்-+. 1. To give excuses, evade by diverting attention or by misleading; போக்குக்காட்டுதல். Madr. 2. To postpone, delay; |
தார்க்காணித்தல் | tār-k-kāṇi-, 11 v. tr. See தார்க்கணி-. Loc. . |
தார்க்கிகன் | tārkkikaṉ, n. <>tārkkika. Logician, sophist; தர்க்கசாஸ்திரம் வல்லவன். |
தார்க்கியன் | tārkkiyaṉ, n. <>tārkṣya. The sacred kite; கருடன். கத்துருவினைத் தெரிபு தார்க்கியன் கனன்றே (சேதுபு.கத்துரு.86). |
தார்க்குச்சு | tār-k-kuccu, n. <>தார் +. Bobbin; நெய்வதற்கு உண்டைநூல் சுற்றிய சிறுநாணல் கொறுக்கை முதலியவற்றின் குற்றி. |
தார்க்குச்சூ | tār-k-kuccu, n. <>தாறு+. Goad; நுனியில் இருப்புமுள் பதிக்கப்பட்ட மாட்டோட்டுங் கழி. |
தார்க்குழல் | tār-k-kuḷal, n. <>தார் +. See தார்க்குச்சு. Loc. . |
தார்க்கெண்டை | tār-k-keṇṭai, n. <>id.+ கெண்டை. See தார்க்குச்சு. Loc. . |
தார்சா | tārcā, n. <> E. terrace. Terraced roof; மொட்டைமச்சு. |
தார்சு | tārcu, n. See தார்சா. Loc. . |
தார்சுக்கட்டிடம் | tārcu-k-kaṭṭiṭam, n. <>தார்சு+. Storied house; மெத்தைவீடு. Tj. |
தார்ட்டியம் | tārṭṭiyam, n. <>dārdhya. Firmness, strength; வலிமை. காயதார்ட்டியமும் (கோயிலொ.29). |
தார்த்தயிலம் | tār-tayilam, n. <>தார்+. Creosote, oily fluid distilled from wood-tar; கீலெண்ணெய். Mod. |
தார்த்தரட்டி | tārttaraṭṭi, n. See தார்த்தராட்டிரர். தார்த்தரட்டி சேனை (பாரதவெண்.782). . |
தார்த்தராட்டிரர் | tārttarāṭṭirar, n. <>Dhārtarāṣṭra. Kaurava princes, the sons of Dhṟtarāṣṭra. திருதராட்டிரன் புத்திரர்களான துரியோதனாதியர். வெம்பரித்தேர்த் தார்த்தராட்டிரர் (பாரத.திரௌ.98). |
தார்தாராய் | tār-tār-āy, adv. Redupl. of தார். In pieces, in shreds; துண்டுதுண்டாக. Loc. |
தார்நிலை | tār-nilai, n. <>தார் +. 1. (Puṟap.) Theme describing the attack of captains and commanders in rescuing their king when he is surrounded by enemies; தம்மரசனைச்சூழ்ந்து மொய்த்த பகைவரை வேற்றிடத்துப் பொருதுநின்ற அவன் தானத்தலைவர்முதலியோர் விரைந்து வந்து எறிதலைக் கூறும் புறத்துறை. வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை (தொல்.பொ.72). 2. (Puṟap.) Theme describing the boast of a warrior to his king about his ability to destroy the enemy 's front; |
தார்நூல் | tār-nūl, n. <>id.+. Cotton thread prepared for bobbins; உண்டை நெய்வதற்குச் செம்மை செய்யப்பட்ட நூல். Loc. |
தார்ப்பாய்ச்சல் | tār-p-pāyccal, n. <>தாறு+. A mode of wearing cloth round the loins in the fashion of the divided skirt; மூலைக்கச்சம். Loc. |
தார்ப்பாய்ச்சு - தல் | tār-p-pāyccu,. v. tr. <>id.+. To wear a cloth in the mode of the divided skirt; மூலைக்கச்சங் கட்டுதல். |
தார்ப்பிடம் | tārppiṭam, n. prob. dāru-pītā. Tree turmeric; See மரமஞ்சள். (சங்.அக.) |
தார்ப்பூ | tār-p-pū, n. <>தார்+. The flower adopted by a king as his symbol; அரசர்க்குரிய அடையாளபூ. (தொல்.பொ.626, உரை.) |
தார்மபத்தனம் | tārmapattaṉam, n. <>dhārmapattana. Black pepper; மிளகு. (மூ.அ.) |
தார்மரம் | tār-maram, n. <>E. tar+. Scotch pine, 1.tr., Pinus sylvestris; மரவகை. (M. M. 294.) |
தார்மிகன் | tārmikaṉ, n. <>dhārmika. Charitable person, generous man; தர்மசிந்தனையுள்ளவன். சில தார்மிகர் அவவளவிலே சொல்லுகிறார்கள் (திவ்.திருப்பா.அவ.பக்.16). |
தார்யம் | tāryam, n. <>dhārya. That which is borne, sustained; தாங்கப்படுவது. (அஷ்டாதச.தத்வத்ர.1. 39.) |
தார்ஷ்டாந்திகம் | tārṣṭāntikam, n. <>dārṣṭāntika. See தாட்டாந்திகம். திருஷ்டாந்தத்திற் சொன்னதைத் தார்ஷ்டாந்திகத்திலேயும் காட்டுகிறார். (ஈடு, 6, 1, 1 அரும்.). . |
தாரக்கம் | tārakkam., n. perh. dhāraka. Diet. See தாரகம், 2. (W.) |
தாரகத்தான் | tārakattāṉ,. n. <>dāraka+perh.danta. Boar's tusk; பன்றிக்கொம்பு. (யாழ்.அக.) |
தாரகப்பிரமம் | tāraka-p-piramam, n. <>tāraka+. The mystic syllable ōm, as symbolic of the supreme Being; பிரணவசொரூபமான பரப்பிரமம். ஆசில் தாரகப்பிரமமா மதன்பயனாய்ந்தான். (கந்தபு.அயனைச்சிறைபுரி.11). |