Word |
English & Tamil Meaning |
---|---|
தாரகம் 1 | tārakam, n. <>tāraka. 1. That which serves to cross or overcome; கடப்பதற்கு உதவுவது. தாரகமா மத்தன் றாள் (சி.போ.பா.2. 2). 2. The mystic incantation, the monosyllable ōm; 3. Star; 4. Highest voice, high key or note; |
தாரகம் 2 | tārakam, n. <>dhāraka. 1. That which protects or supports; receptacle; vehicle, means; refuge; ஆதாரம். எனக்கு நின்ன ருடாரகம் (தாயு.மௌன.6). 2. Sustenance, light food, diet for convalescents; |
தாரகற்காய்ந்தாள் | tārakaṟ-kāyntāḷ, n. <>தாரகன்+. Kaḷi, as the slayer of the Asura Tārakaṉ; [தாரகாசுரனைக் கொன்றவள்] காளி. (சூடா.) |
தாரகற்செற்றதையல் | tārakaṟ-ceṟṟa-tai-yal, n. <>id. +. See தாரகற்காய்ந்தாள். (சூடா.) . |
தாரகற்செற்றோன் | tārakaṟ-ceṟṟōṉ, n. <>தாரகன்+. Skanda, as the slayer of Tārakaṉ; (தாரகனைக் கொன்றோன்) முருகக்கடவுள். (சூடா.) |
தாரகன் 1 | tārakaṉ, n. <>dhāraka. Protector, preserver; ஆதாரமானவன். |
தாரகன் 2 | tārakaṉ, n. <>tāraka. 1. One who helps in crossing or overcoming; கடப்பிப் போன். தாரகன் தன்னைச் சாதத் தடங்கடாற் றளர்வார் தம்மை (சிவதரு.பாவ.8). 2. An Asura slain by skanda; |
தாரகன் 3 | tārakaṉ, n. See தாருகன். . |
தாரகாகணம் | tārakā-kaṇam, n. <>tārakā+. Star cluster; நட்சத்திரக் கூட்டம். அநேக தாரகாகணமா நவமணி. (பாரத.சிறப்புப்.4). |
தாரகாதேசம் | tārakā-tēcam, n. <>id.+. Starry heavens; நட்சத்திர மண்டலம். தாரகாதேசந் தன்னில் (சிவதரு.சிவதரும.19). |
தாரகாபதி | tārakā-pati, n. <>id.+. 1. Moon, as lord of the stars; (நட்சத்திரங்களுக்கு அதிபன்) சந்திரன். தாரகாபதி புதல்வன் (பாரத. குரு குல. 8). 2. Jupiter; |
தாரகாரி 1 | tārakāri, n. <>தாரகன்+. See தாரகற்செற்றோன் தாரகாரியுந் சளுக்கியர் வேந்தனும் (பிங்). . |
தாரகாரி 2 | tārakāri, n. <>தாரகன்+. Kāḷi; காளி. (சூடா.) |
தாரகை 1 | tārakai, n. <>tārakā. 1. Star; நட்சத்திரம். நாப்பண்வண் டரகைபோல் (திருக்கோ. 116). 2. Apple of the eye; |
தாரகை 2 | tārakai, n. prob. dhārakā. Earth; பூமி. வானவர்தாந் தானவர்தாந் தாரகைதான் (திவ்.இயற்.நான்மு.57). |
தாரகைக்கோவை | tārakai-k-kōvai, n. <>தாரகை+. A kind of necklace; ஏகாவலி என்னும் அணிகலம். தாரகைக் கோவையுஞ் சந்தின் குழம்பும் (சிலப்.13, 19). |
தாரகைமாலை | tārakai-mālai, n. <>id.+. Poem describing the spotless chastity of a woman who equals Arundhati in virtue, a kind of pirapantam, q.v.; அருந்ததிபோன்ற கற்புடை மகளிர்க்குள்ள இயற்கைக்குணங்களைக்கூறும் பிரபந்த வகை. (இலக்.வி.867.) |
தாரசாரம் | tāracāram, n. <>Tārasāra. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று (சங்.அக.) |
தாரண | tāraṇa, n. See தாருண. (பெரிய வரு. 24.) . |
தாரணநட்சத்திரம் | tāraṇa-naṭcattiram, n. <>தாரணம்+. The asterims mūlam, āyiliyam, kēṭṭai and tiruvātirai; மூலம், ஆயிலியம், கேட்டை, திருவாதிரை என்னும் நட்சத்திரங்கள். (விதான. பஞ்சாங், 20, உரை.) |
தாரணம் | tāraṇam, n. <>dhāraṇa. 1. Holding, keeping, sustaining, bearing, investing, wearing; தரிக்கை. நாமதாரணம் பண்ணிக்கொண்டான். 2. Stability, firmness, steadiness, constancy; 3. Enduring, lasting, continuance; 4. See தாரணை 5. See தாரணநட்சத்திரம். குருகரவங் கேட்டையாதிரை தாரணம் (விதான. பஞ்சாங். 20). |
தாரணி 1 | tāraṇi, n. <>dharaṇi. Earth; பூதசரதன் மதலையா வருதுந் தாரணி (கம்பரா. திருவவ. 22). |
தாரணி 2 | tāraṇi, n. prob. dharaṇi-dhara. Mountain; மலை. எழுதாரணிதிகழ் தோளண்ணலே (மருதூ. 45). |
தாரணி 3 | tāraṇi, n. prob. taraṇi-tanaya. Yama; யமன். தாரணியெனத் தனது தண்டுகொடு (பாரத. மணிமான். 42). |
தாரணி - த்தல் | tāraṇi, 11 v. tr. <>தாரணம். To bear; தரித்தல். வானநீரினாற் றாரணித் தங்கொரு மலையிற் றங்கினான் (கம்பரா. அயோமுகி. 93). |
தாரணை 1 | tāraṇai, n. <>dhāraṇā. 1. Wearing, investing, bearing, upholding, sustaining; தரிக்கை. 2. Recollection, retaining in the memory; 3. Stability, steadiness, firmness; 4. Concentrated attention, one of aṣṭāṅka-yōkam, q.v.; 5. Construction, arrangement, order, system, principles, established order of things, natural or artificial; 6. Forms of meditation practised by šiva Yōgis. See நவதாரணை. |