Word |
English & Tamil Meaning |
---|---|
தாலவ்வியம் | tālavviyam, n. <>tālavya. (Gram.) Palatal; இடையண்ணத்தில் இடைநாவின் முயற்சியாற் பிறக்கும் எழுத்து. |
தாலவட்டம் 1 | tāla-vaṭṭam, n. <>tāla+vṟnta. 1. Fan; விசிறி. (யாழ். அக.) 2. Elephant's ear; 3. Elephant's tail; |
தாலவட்டம் 2 | tāla-vaṭṭam, n. <>தலம்+. Earth; பூமி. (W.) |
தாலவிருந்தம் | tāla-viruntam, n. <>tālavṟnta. 1. Large fan; பேராலவட்டம். (பிங்.) 2. Fan; |
தாலாங்கன் | tālāṅkaṉ, n. <>tālāṅka. See தாலகேதனன், 1, 2. . |
தாலாட்டு 1 - தல் | tālāṭṭu-, v. tr. <>தாலு+ ஆட்டு-. To rock a child in a cradle with lullabies; குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்கச் செய்யப்பாட்டுப்பாடுதல். அஞ்சனவண்ணணை யாய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் (திவ்.ன பெரியாழ். 1, 3, 10). |
தாலாட்டு 2 | tālāṭṭu, n. <>id.+. 1. Lulling a child to sleep with songs; குழந்தைகளை உறங்கச் செய்யப் பாட்டுப்பாடுகை. தாலாட்டு நலம்பல பாராட்டினார் (பெரியபு. திருஞா. 44). 2. Lullaby, usually ending in tālālō; 3. A lullaby poem dealing with the exploits of a hero; |
தாலாப்பு | tālāppu, n. <>persn. tālāb. Tank; குளம். (W.) |
தாலாலம் | tālālam, n. perh. தாலம் + ஆலம். Scandal, aspersion, calumny; பழிமொழி. (யாழ். அக.) |
தாலி 1 | tāli, [T. K. M. Tu. tāli.] 1. Tāli, central piece of a neck ornament solemnly tied by the bridegroom around the bride's neck as marriage-badge; கணவன் மணந்ததற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு. தாலி..நல்லார் கழுத்தணிந்து (சீவக.2697). 2. A child's necklet. 3. Amulet tied on a child's neck; 4. Turtle-shaped tāli. 5. Cowry, cypraca moneta; |
தாலி 2 | tāli, n. <>tālī. A small plant. See கீழாநெல்லி. (மலை.) . |
தாலி 3 | tāli, n. <>sthālī. Earthen vessel; மட்பாத்திரம். ஆரழற் றாலி யொன்று தனையவன் பாணி நல்கி (சேதுபு.சாத்தி.38). |
தாலிக்கட்டு | tāli-k-kaṭṭu, n. <>தாலி+. Marriage, as tying the tāli; கலியாணம். Loc. |
தாலிக்கயிறு | tāli-k-kayiru, n. <>id.+.. Twisted thread on which is hung the tāli; மாங்கலியச் சரடு. Colloq. |
தாலிக்காரி | tāli-k-kāri, n. <>id. +. Married woman, as wearing a tāli; சுமங்கலி. |
தாலிக்கொடி | tāli-k-koṭi, n. <>id.+. Braided gold string on which is hung the tāli; தாலி கோப்பதற்கான பொற்சரடு. Colloq. |
தாலிக்கொழுந்து 1 | tāli-k-koḻuntu, n. <>தாலி+. Turtle-shaped tāli; ஆமைத்தாலி. (திவ்.பெரியாழ்.2, 6, 1, வ்யா.) |
தாலிக்கொழுந்து 2 | tāli-k-koḻuntu, n. <>tālī+. An ornament made of tender leaves of palm-tree; பனைவெண்குருத்தால் இயன்ற ஆபரணம். தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு (திவ்.பெரியாழ், 2, 6, 1) |
தாலிக்கோவை | tāli-k-kōvai, n. <>தாலி +. String of beads to which the wedding badge is attached; தாலியுருவோடு கோப்பதற்கான பல்கை.உருக்கள். (W.) |
தாலிகட்டு - தல் | tāli-kaṭṭu-, v. tr. <>id. +. To marry, as tying tāli; மணம்புரிதல். தாலிகட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே கிடத்துமட்டும் (தனிப்பா.i,195, 10). |
தாலிகட்டுக்கலியாணம் | tāli-kaṭṭu-k-kali-yāṇam, n. <>தாலிகட்டு-+. A nominal marriage in which a tāli is tied round the neck of a girl, but the person tying is not entitled to the rights of a husband; உண்மையிற் கணவனாகாது பேர்மாத்திரையில் ஒருத்திக்கு ஒருவன் தாலிகட்டும் ஒருவகைச் சடங்கு. Loc. |
தாலிச்சரடு | tāli-c-caraṭu, n. <>தாலி+. See தாலிக்கொடி . |
தாலிப்பிச்சை | tāli-p-piccai, n. <>id. +. Saving the life of a woman's husband, as enabling her to wear tāli; சுமங்கலியாய் ஒருத்தி வாழும்படி அவளது கணவனுயிரைப் பாதுகாக்கை. |
தாலிப்பெட்டி | tāli-p-peṭṭi, n. <>id. +. The basket in which the wedding badge is kept; தாலிவைக்கும் பொன்னத்துப் பெட்டி. (யாழ்.அக.) |
தாலிப்பொட்டு | tāli-p-poṭṭu, n. <>id.+. Disc-shaped tāli; வட்டமாகச் செய்த தாலியுரு. |