Word |
English & Tamil Meaning |
---|---|
அன்னக்கொடி | aṉṉa-k-koṭi n. <>id.+. Flag hoisted on a choultry or other public building to indicate that food is distributed gratuitously therein; அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுந் துவசம். |
அன்னக்கொப்பு | aṉṉa-k-koppu n. <>அன்னம்2+. Ear ornament with design of swan worn at the top of the helix; காதணிவகை. |
அன்னசத்திரம் | aṉṉa-cattiram n. <>anna+satra. Choultry where cooked rice is distributed gratuitously; அன்னமிடுஞ்சாலை. அன்ன சத்திரங்கட்டி (குற்றா.குற.90, 1). |
அன்னசாரம் | aṉṉa-cāram n. <>id.+. sāra. Rice gruel; கஞ்சி. |
அன்னசிராத்தம் | aṉṉa-cirāttam n. <>id.+. Offering of cooked articles of food to Brāhmans in honour of the manes, dist. fr. ஆமசிராத்தம் and இரணியசிராத்தம். பாகம் பண்ணிய உணவுகொண்டு செய்யும் சிராத்தம். |
அன்னசுத்தி | aṉṉa-cutti n. <>id.+. Pouring a small quantity of ghee over food to purify it; அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய்யிடுகை. |
அன்னணம் | aṉṉaṇam adv. <>அன்ன+வண்ணம். In that manner; அவ்விதம். (சூளா.கல்.147.) |
அன்னத்துரோகம் | aṉṉa-t-turōkam n. <>anna+. Treachery to the house by one where one has been fed; உண்டவீட்டுக்கிரண்டகம் பண்ணுகை. |
அன்னத்துவேஷம் | aṉṉa-t-tuvēṣam n. <>id.+. Want of appetite, dislike for food, anorexia; உணவில் வெறுப்பு. |
அன்னத்தூவி | aṉṉa-t-tūvi n. <>அன்னம்2+தூவி3. Swan's down; அன்னப் புள்ளின் இறகு. |
அன்னதாதா | aṉṉa-tātā n. <>anna+dātā. One who gives food, a charitable person; உணவுகொடுத்து ஆதரிப்போன். அன்னதாதாவு முதலானதயாவினோர் (உத்தரரா.திக்குவி.51). |
அன்னதாழை | aṉṉa-tāḻai n. Port. ananas+. Pine-apple. See அன்னாசி. (W.) |
அன்னதானக்குறுவை | aṉṉa-tāṉa-k-kuṟuvai n. <>anna+dāna+. A kind of paddy that matures in three months; மூன்று மாசத்தில் விளையும் நெல்வகை. Loc. |
அன்னதானச்சம்பா | aṉṉa-tāṉa-c-campā n. <>id.+id.+. Variety of campā paddy; சம்பாநெல்வகை. (ஏரெழு.உரை.) |
அன்னதானம் | aṉṉa-tāṉam n. <>id.+. 1. Giving away food in charity; உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி). 2. Kind of paddy. See அன்னதானக்குறுவை. |
அன்னதீபம் | aṉṉa-tīpam n. <>அன்னம்2+. Kind of temple lamp having the shape of a swan; கோயில்விளக்குவகை (பரத.ஒழிபி.41.) |
அன்னப்பால் | aṉṉa-p-pāl n. <>anna+. Water strained from boiling rice, used as a very mild diet in sickness; அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி. |
அன்னப்பிராசனம் | aṉṉa-p-pirācaṉam n. <>id.+prāsana. First feeding of an infant with boiled rice, a rite usu. performed during the sixth or the eighth month for the male and the fifth or the seventh month for female children, one of cōṭaca-camskāram, q.v.; குழந்தைகளுக்கு முதலிற் சோறூட்டுங் கிரியை. (திருவானைக் கோச்.14.) |
அன்னபம் | aṉṉapam n. Banyan tree. See ஆல். (மூ.அ.) |
அன்னபானம் | aṉṉa-pāṉam n. <>anna+. Food and drink; சோறும் நீரும். அபேஷிதம் அன்னபானாதிகள் (அஷ்டாதச.முமுக்ஷு.1, 38). |
அன்னபூரணி | aṉṉa-pūraṇi n. <>Anna-pūrṇā. Goddess of plenty, a beneficent form of Durgā; துர்க்கையின் அவசரபேதம். |
அன்னபூரணை | aṉṉa-pūraṇai n. <>id. An Upaniṣad; நூற்றெட்டுபநுடதங்களுள் ஒன்று. |
அன்னபேதி | aṉṉa-pēti n. <>anna-bhēdin. Green vitriol, ferri sulphas, so called as it liquefies boiled rice; மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1116.) |
அன்னம் 1 | aṉṉam n. <>anna. Food, victuals, esp. boiled rice; சோறு. |
அன்னம் 2 | aṉṉam n. <>hamsa. Species of swan, celebrated for its gait - poets credit it with power to separate milk when mixed with water - vehicle of God Brahmā; புள்வகை. |
அன்னம் 3 | aṉṉam n. Yak. See கவரிமா. (திவா.) |
அன்னம்பாறு - தல் | aṉṉam-pāṟu- 5 v.intr. To lament, utter repeated expressions of regret or sorrow; புலம்புதல். (W.) |
அன்னமயகோசம் | aṉṉa-maya-kōcam n. <>anna+. (Phil.) Material of physical body, 'the sheath of food', one of paca-kōcam, q.v.; பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8, உரை.) |