Word |
English & Tamil Meaning |
---|---|
தாளப்பிராணம் | tāḷa-p-pirāṇam, n. <>id.+. (Mus.) Elements of time-measure, ten in number, viz., kālam, mārkkam, kiriyai, aṅkam, kirakam, cāti, kaḷai, ilayai, yati, pirattāram; காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், சாதி, களை, இலயை, யதி, பிரத்தாரம் என்ற தாளத்துக்குரிய உறுப்புக்கள். (சது.) |
தாளம் | tāḷam, n. <>tāla. 1. (Mus.) Time-measure; பாடுகையிற் காலத்தை அறுதியிடும் அளவு. இத்தாளங்களின் வழிவரும்... ஏழு தூக்குக்களும் (சிலப்.3, 16, உரை). 2. A small cymbal for keeping time in music; 3. Syllables sung in tune with drum-beats; 4. Palmyra-palm. 5. Jaggery-palm, m. tr., Caryota urens; 6. Yellow orpiment; 7. See தாளிசபத்திரி. (சங். அக.) |
தாளம்பிடி - த்தல் | tāḷam-piṭi-, v. intr. தாளம்+. See தாளம்போடு-, 1. . |
தாளம்போடு - தல் | tāḷam-pōṭu-, v. intr. <>id.+. 1. To keep time, as with the hands or cymbals; தாளமடித்தல். கைத்தாளம் போடு (பணவிடு. 183). 2. To suffer from want; 3. To persist in an improper request; to importune; |
தாளம்மை | tāḷ-ammai, n. <>தாள்+. Mumps; பொன்னுக்குவீங்கி. Loc. |
தாளமானம் | tāḷa-māṉam, <>தாளம்+. (Mus.) Time measured by tāḷam; தாளவளவு. இனித் தாளமானத் திடையே நின்றொலிக்கும் (மலை பது, 9, உரை). |
தாளமுத்திரை | tāḷa-muttirai, n. <>id.+. (šaiva.) A gesticulation in worship in which the left palm is tapped with the right finger; இடது உள்ளங்கையில் வலதுகைவிரலால் தட்டும் முத்திரவகை. (செந். X, 424.) |
தாளவகையோத்து | tāḷa-vakai-y-ōttu, n. <>id. +. (Mus.) A treatise on time-measure; தாளத்தைப்பற்றிக் கூறும் ஒரு பழைய நூல். (சிலப். 3, 26, உரை.) |
தாளவொரியல் | tāḷa-v-or-iyal, n. <>id.+ prob. ஓர்+இயல். A variety of tāḷam; தாள விகற்பங்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) |
தாளவொற்று | tāḷa-v-oṟṟu, n. <>id. +. (Mus.) Agreement of time; சதி. (பிங்.) |
தாளவோத்து | tāḷa-v-ōttu, n. <>id.+. An ancient treatise on tāḷam describing 108 kinds of tāḷas; நூற்றெட்டுவகைத் தாளங்களை விவரிக்கும் ஒரு பழைய நூல். |
தாளன் | tāḷaṉ, n. <>தாள். Good-for-nothing fellow; உபயோகமற்றவன். (W.) |
தாளா 1 | tāḷā, n. <> U. dāḷā. Comparison; ஒப்பு. (C. G.) |
தாளா 2 | tāḷā, n. Paddle for catamaran; கட்டுமரத்தைச் செலுத்த நீரைத்துழாவும் பலகை. Loc. |
தாளாண்மை | tāḷ-āṇmai, n. <>தாள்+ஆள்-. 1. Energy, spirit; ஊக்கம். (சூடா.) 2. Perseverance, application, diligence; |
தாளாரி | tāḷāri, n. Bastard sal, l. tr., Shorca talura; குங்கிலியவகை. (L.) |
தாளாளன் | tāḷ-āḷaṉ, n. <>தாள்+ஆள்-. 1. Person of enterprise, application; ஊக்கமுள்ளவன். தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன் (திரிகடு. 12). 2. Vaišya; |
தாளி 1 - த்தல் | tāḷi-, 11 v. tr. 1. (T.tālintcu, K. tāḷisu.) To season and flavour curry, etc., with spices fried in ghee or oil; கடுகு உளுத்தம் பருப்பு முதலியவற்றை நெய்யில் வறுத்துக் குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக இடுதல். பட்ட நறையாற் றாளித்து (பெரியபு. சிறுத். 66). 2. To flavour medicine, as with ghee, oil; 3. To scold soundly; 4. (T. Tālintcu.) To macerate lime; 5. To exaggerate; 1. To boast; 2. To live beyond one's means with pretentious extravagance; |
தாளி 2 | tāḷi, n. <>sthālī. Earthern lamp-bowl; மண்ணாற்செய்த விளக்கின் அகல். Colloq. |
தாளி 3 | tāḷi, n. <>tāla. 1. Palmyra-palm. See பனை. (சூடா.) 2. Talipot-palm, 1. tr., Corypha umbraculifera; 3. A medicinal plant; 4. The 17th nakṣatra. |
தாளி 4 | tāḷi, n. A species of ray-laurel, m. tr., Actinodaphne hookeri; மரவகை. (L.) |
தாளி 5 | tāḷi, n. prob tālī. Hedge bind-weed, s. cl., Ipomaca sepiaria; கொடிவகை. தாளித்தண்பவர் நாளா மேயும் (குறந். 104). |