Word |
English & Tamil Meaning |
---|---|
தாளிக்கம் | tāḷikkam, n. <>தாளு-. (யாழ். அக.) 1. Prosperity; தழைப்பு. 2. Stability; firmness; |
தாளிக்கை 1 | tāḷikkai, n. <>தாளி-. Seasoning and flavouring curry; கறிக்குக் கடுகு முதலியவற்றை வாசனை யுண்டாம்படி யிடுகை. |
தாளிக்கை 2 | tāḷikkai, n. <>தாளு-. High price or value; உயர்ந்த விலை. தாளிக்கையுள்ள நகை. Madr. |
தாளிசபத்திரி | tāḷica. pattiri, n. <>tāliša-patrin. 1. Wild-cinnamon, m.tr., Cinnamomum iners; மரவகை (M. M. 882.) 2. Cassia cinnamon, m. tr., cinnamomum macrocarpum; 3. See தாளிசம். Loc. |
தாளிசம் | tāḷicam, n. <>tālīša. East Indian plum, s. tr., Flacourtia cataphrachta; சிறுமர வகை. (பதார்த்த.1006.) |
தாளித்தநெய் | tāḷitta-ney, n. <>தாளி-+. Ghee mixed with spices and boiled with a view to preserve it; நெடுங்காலம் இருத்தற்கு வேண்டிக் காய்ச்சிவைத்திருக்கும் நெய். (J.) |
தாளித்துக்கொட்டு | tāḷittu-k-koṭṭu-, v. tr. <>id.+. See தாளி-, 1. . |
தாளிதம் | tāḷitam, n. <>id. See தாளிக்கை . |
தாளிநோய் | tāḷi-nōy, n. A kind of cattle disease; ஒருவகை மாட்டு நோய். |
தாளிப்பருத்தி | tāḷi-p-parutti, n. Sea-coast rose mallow. See நீர்ப்பருத்தி. |
தாளிப்பனை | tāḷi-p-paṉai, n. <>tāla+. South Indian talipot-palm, l. tr., Corypha umbraculifera; கூந்தற்பனைவகை. |
தாளிப்பு | tāḷippu, n. <>தாளி-. 1. (T. tālimpu.) See தாளிக்கை. (புறநா. 127, உரை.) 2. Boast; 3. Self-conceit; 4. Severe scolding; |
தாளிம்பம் | tāḷimpam, n. Ornament worn on forehead; நுதலணிவகை. தாளிம்பத் தாமநுதல் சேர்த்தி (பதினொ. திருக்கை. உலா, 121). ஏழொன்றாக அடுத்து விளக்கின தாளிம்பம் (S. I. I. ii, 145). |
தாளியடி - த்தல் | tāḷi-y-aṭi-, v. tr. prob. தாள்+. To draw a harrow over a field to allow of easy weeding; நெருங்கி முளைத்த பயிர்களை விலக்குதற்கும், வருத்தமின்றிக் களைபிடுங்குதற்குமாகக் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துதல். (புறநா.120, குறிப்பு.) |
தாளினி | tāḷiṉi, n. (மலை.) 1. Tinnevelly senna. See நிலவாகை. 2. Indian jalap. |
தாளீசம் | tāḷīcam, n. <>tālīša. See தாளிசம். (தைலவ. தைல. 135.) . |
தாளு - தல் | tāḷu-, 5 v. (T. K. tāḷu, Tu. tāḷuni.) tr. To bear, suffer, tolerate; பொறுத்தல். இந்தச் சங்கடத்தை அவர் மனந் தாளவில்லை. - intr. 1. To be worth; 2. To be possible, practicable; |
தாளுருவி | tāḷ-uruvi, n. <>தாள்+. Small ear-ornament; ஒருவகைக் காதணி. (பெரும்பாண்.161, உரை.) |
தாற்கரியம் | tāṟkariyam, n. <>tāskarya. Stealing; களவு. (யாழ். அக.) |
தாற்காலிகம் | tāṟkālikam, n. <>tātkālika. That which is temporary, occasional; தற்காலத்துக்குற்றது. |
தாற்பர்யம் | tāṟparyam, n. See தாற்பரியம். தாற்பர்ய மற்றுழல் பாவியை (திருப்பு. 266). . |
தாற்பரியம் | tāṟpariyam, n. <>tātparya. 1. Import, purport, meaning; பொருள். (குறள், 509, உரை.) 2. Opinion, sentiment; 3. Explanation; 4. Object, purpose; 5. Intense desire; 6. Dwelling on the merits of a person or thing; |
தாற்பரியம்பண்ணு - தல் | tāṟpariyam-paṇṇu-, v. tr. <>தாற்பரியம்+. 1. To explain, expound; விவரித்துச் சொல்லுதல். (யாழ். அக.) 2. To applaud, as performances; to magnify, as one's talents; |
தாற்பரியமானவன் | tāṟpariyam-āṉavan, n. <>id.+. Person held in high esteem; மதிப்புள்ளவன். (W.) |
தாற்பருவம் | tāṟ-paruvam, n. <>தால்+. A section of piḷḷai-t-tamiḻ which describes the hero being lulled to sleep wih cradle songs when eight months old; பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் பாட்டுடைத்தலைவனை எட்டாம் மாதத்தில் தாலாட்டுவதாகக் கூறும் பகுதி. |
தாற்று - தல் | tāṟṟu-, 5 v. tr. 1. cf. தாட்டு-. To sift, winnow in a particular manner and separate large particles from small; கொழித்தல். Loc. 2. To bear; |
தாற்று | tāṟṟu, n. <>தாற்று-. Winnowing, sifting; கொழிப்பு. Loc. |