Word |
English & Tamil Meaning |
---|---|
திகிரிமன்னவர் | tikiri-maṉṉavar, n. <>id.+. The six famous emperors, viz., Ariccantiraṉ, Naḻaṉ, Mucukuntaṉ, Purukuccaṉ, Purūravā, Kārttavīriyaṉ; அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவா, கார்த்தவீரியன். என்ற புகழ்பெற்ற சக்கரவர்த்திகள் அறுவர். (சூடா.) |
திகிரியான் | tikiriyāṉ, n. <>id. Viṣṇu, as holding a discus; (சக்கராயுதந் தரித்தவன்) திருமால்.தொல்கதிர்த் திகிரியாற் பரவுதும் (கலித். 104, 77). |
திகிரிஜில்லா | tikiri-jillā, n. <>திகிரி+. Another or a different district; இதர ஜில்லா. (C. G. 57.) |
திகில் | tikil, n. (T. digulu, K. digil.) Fright, terror, sudden fear, panic, alarm; பீதி. |
திகில்படு - தல் | tikil-paṭu-, v. intr. <>திகில்+. To start with sudden fright; to be struck with fear; மிகுபயங்கொள்ளுதல். |
திகில்பிடித்தல் | tikil-piṭittal, n. <>id.+. Being taken with sudden fright; மிகுபயம் கொள்ளுகை. Loc. |
திகிலடி | tikil-aṭi, n. <>id.+. See திகில். . |
திகிலெனல் | tikil-eṉal, n. <>id.+. Expr. signifying unexpected terror; திடுக்கிடுதற்குறிப்பு. எரியுந் தூமமுந் திகிலென . . . மூண்டெழுந்தவே (அரிச். பு. விவா. 82). |
திகுதிகெனல் | tiku-tikeṉal, n. (W.) Expr. signifying (a) Rapid kindling of fire; நெருப்புப் பற்றியெரியுங் குறிப்பு: (b) Smarting of a sore; (c) Getting excited with anger; (d) Coming on in rapid succession; (e) Bubbling of water; (f) Trembling with fear; |
திகை - த்தல் | tikai-, 11 v. intr. 1. To be taken aback, confused, perplexed, bewildered; மயங்குதல். இருளிற் றிகைத்த கரி (தேவா.1156, 5). 2. To be astonished, amazed; 3. cf. தகை-. To subside; 4. cf. தகை-. To be exhausted; |
திகை - தல் | tikai-, 4 v. intr. cf. தகை-. 1. To complete; to come to an end; முடிவுறுதல். மாதந் திகைந்த சூலி. Tinn. 2. To be settled; |
திகை 1 | tikai, n. <>திகை-. 1. Amazement; பிரமிப்பு. 2. Asthma; 3. cf. வசந்திகை. Spreading spots on the skin induced by hot humours; |
திகை 2 | tikai, n. <>dišā. See திசை. திசையெலாந் தொழச்செல்வாய் (தேவா. 308, 1). . |
திகைதி | tikaiti, n. perh. tithi. Date; தேதி. இஷபஞாயிற்று இருபதாந் திகைதியும். (T. A. S. i, 254). |
திகைப்பு | tikaippu, n. <>திகை-. See திகை, 1, 2. . |
திகைப்பூடு | tikai-p-pūṭu, n. <>திகை+. A plant that bewilders persons trampling on it; மிதித்தவர்களை மயங்கச்செய்யும் பூண்டு. திகைப்பூடு மிதித்தாற்போல (ஈடு). |
திகைப்பூண்டு | tikai-p-pūṇṭu, n. See திகைப்பூடு. (W.) . |
திங்கட்கண்ணியன் | tiṅkaṭ-kaṇṇiyaṉ, n. <>திங்கள்+. šiva, as having moon on his head; (சந்திரனை முடியிற்கொண்டவன்) சிவன். புதுத்திங்கட்கண்ணியான் பொற்பூண் ஞான்றன்ன (கலித். 150, 17). |
திங்கட்காசு | tiṅkaṭ-kācu, n. <>id.+. An ancient monthly tax; மாதந்தோறும் தண்டிவந்த ஒரு பழைய வரி. இலைவாணியப் பாட்டமுந் திங்கட்காசும் (T. A. S. i,165). |
திங்கட்கிழமை | tiṅkaṭ-kiḻamai, n. <>id.+. Monday; சந்திரனுக்குரியதும் வாரத்தில் இரண்டாவதுமான நாள். |
திங்கட்குடையோன் | tiṅkat-kuṭaiyōṉ, n. <>id.+. The Hindu god of love, as having the moon for his umbrella; (சந்திரனைக் குடையாகக் கொண்டவன்) மன்மதன். (சூடா.) |
திங்கட்குலன் | tiṅkaṭ-kulaṉ, n. <>id.+. Pāṇṭiyaṉ, as belonging to the lunar race; (சந்திரகுலத்தோன்) பாண்டியன். திங்கட்குலனறியச் செப்புங்கள் (தனிப்பா. i, 178, 4). |
திங்கட்குழவி | tiṅkaṭ-kuḻavi, n. <>id.+. The crescent; பிறைச்சந்திரன். திங்கட்குழவி வருக (கலித்.80, 18). |
திங்கண்மணி | tiṅkaṇ-maṇi, n. <>id.+. Moonstone; சந்திரகாந்தக்கல். நீர்தங்கு திங்கண்மணி நீணிலந் தன்னு ளோங்கி (சீவக. 1960). |
திங்கண்முக்குடையான் | tiṅkaṇ-muk-kuṭaiyāṉ, n. <>id.+. Arhat; அருகன். திங்கண் முக்குடையான் செழுமாநகர் (சீவக. 139). |
திங்கணாள் | tiṅkaṇāḻ, n. <>id.+நாள். The fifth nakṣatra, as having the moon for its presiding deity; (சந்திரனை அதிதேவதையாகக் கொண்ட நாள்) மிருகச்சீரிடம். (சூடா.) |
திங்கள் | tiṅkaḷ, n. (K. tiṅgaḷ, M. tiṅkaḷ.) 1. Moon; சந்திரன். பன்மீனாப்பட் டிங்கள்போலவும் (புறநா. 13). 2. Month, lunar month; 3. See திங்கட்கிழமை. 4. The number 12; |