Word |
English & Tamil Meaning |
---|---|
திங்ஙு | tiṅṅu, n. <>tiṅ. Terminations of the finite verb; வினைமுற்றுவிகுதிகள். திங்ஙுப்படலம். (பி.வி.) |
திஙந்தம் | tiṅantam, n. <>tiṅ-anta. Finite verb; வினைமுற்று. வினையெல்லாந் திஙந்தம் (பி. வி. 42). |
திசமிதன் | ti-camitaṉ, n. prob. dhī+šamita. One who has subdued his mind; மனத்தை அடக்கியவன். (யாழ். அக.) |
திசாதிசை | ticā-ticai, n. Redupl. of திசை. Different directions; வேறுபட்ட திசைகள். |
திசாநாதன் | ticā-nātaṉ, n. <>dašā+. The reigning planet. See தசாநாதன். Colloq. |
திசாபலன் | ticā-palaṉ, n. <>id.+. Influence of the reigning planet. See தசாபலன். (விதான. கால. 19.) |
திசாமுகம் | ticā-mukam, n. <>dišā+. See திசை, 1. எண்டிசாமுக மிருண்டன (கம்பரா. அகலிகை. 14). . |
திசாயம் | ticāyam, n. cf. nišāṭaka. Bdellium; குங்கிலியம் (யாழ். அக.) |
திசாலம் | ticālam, adv <>dēša-kāla. Time; பொழுது. (யாழ். அக.) |
திசி | tici, n. <>diši loc. sing. of diš. See திசை, 1. (யாழ். அக.) . |
திசிலன் | ticilaṉ, n. perh. niši-cara. (யாழ். அக.) 1. Rākṣhasa; இராக்கதன். 2. Moon; |
திசை - த்தல் | ticai-, 11 v. intr. <>திகை-. See திகை-, 1. இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே (திவ். திருவாய். 4, 6, 1). . |
திசை 1 | ticai, n. <>dišā. 1. Cardinal points, region, quarter, direction; திக்கு. வளிதிரிதருதிசையும் (புறநா. 30). 2. Principality, jurisdiction, dominion; 3. Word used as inflexional suffix of the seventh case; |
திசை 2 | ticai, n. See தசை. Colloq. . |
திசைக்கல் | ticai-k-kal, n. <>திசை+. Boundary stone; எல்லைக்கல். Colloq. |
திசைகட்டு - தல் | ticai-kaṭṭu-, v. intr. <>id.+. See திக்குக்கட்டு-. (W.) . |
திசைகாவல் | ticai-kāval, n. <>id.+. Rd. 1. Watchman, whose chief duty is keep the peace of a country; நாட்டின் அமைதியைக் காப்போன். 2. Watch-fee levied by a Poligar for wider guardianship than village kāval; |
திசைச்சொல் | ticai-c-col, n. <>id.+. Word borrowed in Tamil from the twelve countries bordering the ancient Tamil land; செந்தமிழ்நிலத்தைச் சேர்ந்த பன்னிருநிலத்தினின்றும் தமிழில்வந்து வழங்கும் மொழி. (தொல். சொல். 397.) |
திசைதப்பு - தல் | ticai-tappu-, v. intr. <>id.+. To miss the road, lose one's way, as a vessel; வழி தவறுதல். (W.) |
திசைநா | ticainā, n. perh. dahana. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) |
திசைநாற்கோணம் | ticai-nāṟ-kōṇam, n. <>திசை+. The four intermediate directions. கோணத்திக்குக்கள். (பிங்.) |
திசைப்பாலர் | ticai-p-pālar, n. <>id + See திக்குப்பாலகர். (பிங்.) . |
திசைப்பு | ticaippu, n. <>திசை-. See திகைப்பு. திசைப்புறுத லுறுஞ் சீவர்க்கு (வேதா. சூ. 110). . |
திசைப்புரட்டன் | ticai-p-puraṭṭaṉ, n. <>திசை+. Consummate cheat, liar, as capable of changing the cardinal points; (திசைகளை மாற்றுவோன்) பெரும்பொய்யன். திசைப்புரட்டன் புளுகுக்குத் தாழ்ச்சியில்லை. |
திசைபிலம் | ticaipilam, n. Emetic nut. See மருக்காரை. (மலை.) |
திசைபோ - தல் | ticai-pō-, v. intr. <>திசை+. To spread far and wide; எங்கும் வியாபித்தல். இசையாற் றிசைபோயதுண்டே (சீவக. 31). |
திசைபோக்கிரி | ticai-pōkkiri, n. <>id.+. Consummate villain, notorious rogue; பேர்பெற்ற போக்கிரி. Loc. |
திசைமுகன் | ticai-mukaṉ n. <>id.+. Brahmā, as having four faces; (நான்முகன்) பிரமன். கமலத் திருமலரின் . . . திசைமுகனைத் தந்தாய். (திவ். இயற். 2, 37). |
திசைமொழி | ticai-moḻi, n. <>id.+. See திசைச்சொல். (யாழ். அக.) . |
திசையடித்தல் | ticai-y-aṭittal, n. <>திசை +. Being in fortunate circumstances; நல்யோகமுறுகை. Colloq. |