Word |
English & Tamil Meaning |
---|---|
திணிப்பு | tiṇippu, n. <>திணிம்பு. Strength; force; வலிமை. திணிப்புற வரற்றின சினைக்கரியமாரி (இரகு. தேனு. 9). |
திணிம்பு | tiṇimpu, n. <>திணி-. (K. tiṇimpu.) Denseness; செறிவு. இருளின் கருந்திணிம்பை (திவ். இயற். திருலிருத். 72). |
திணிமூங்கில் | tiṇi-mūṅkil, n. <>id.+. Solid hard bamboo; கெட்டி மூங்கில் (அகநா. 27, உரை.) |
திணியன் | tiṇiyaṉ, n. <>திண்-மை. 1. Fat, indolent man; clumsy beast or thing; பயனற்றுப்பருத்த-வன்-து. (J.) 2. Tree or cane slightly hollow; |
திணிவு | tiṇivu, n. <>திணி-. (யாழ். அக.) 1. Hardness; வன்மை. 2. Denseness; |
திணுக்கம் | tiṇukkam, n. <>திணுங்கு-. 1. Closeness, compactness; செறிவு. 2. Thick consistency, solidity; |
திணுங்கு - தல் | tiṇuṅku-, 5 v. intr. <>திண்-மை. 1. To become close, thick, dense, crowded; செறிதல். திணுங்கின விருள் (திவ். திருவாய். 2, 1, 7, பன்னீ.) 2. To congeal, solidify; |
திணை | tiṇai, n. perh. id. 1. Earth, land; பூமி. (பிங்.) 2. Place, region, situation, site; 3. House; 4. Tribe, caste, race, family; 5. Conduct, custom; 6. Conventional rules of conduct laid down in the Tamil works, of two classes, viz., aka-t-tiṇai and puṟattiṇai; 7. (Gram.) Class, as of nouns, of two kinds, viz., uyartiṇai and aḵṟiṇai; |
திணைக்களம் | tiṇai-k-kaḷam, n. <>திணை+. Department; இலாகா. புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன் (S. I. I. ii, 412). |
திணைகள் | tiṇaikaḷ, n.<>id. People; சனங்கள். கணக்கருந் திணைகளும் (பெருங். வத்தவ. 2, 45). |
திணைநிலைப்பெயர் | tiṇai-nilai-p-peyar, n. <>id.+. 1. (Gram.) Noun denoting class or caste; சாதி குறிக்கும் பெயர். பல்லோர்க் குறித்த திணைநிலைப்பெயரே (தொல். சொல். 167, சேனா.). 2. See திணைப்பெயர். (தொல். சொல். 167.) 3. Name of the chieftains of aintṇai; |
திணைநிலைவரி | tiṇai-nilai-vari, n. <>id.+. A kind of erotic composition dealing with the incidents and events peculiar to aintiṇai; ஐந்திணைச் செய்திகளை காமக்குறிப்புத் தோன்றப் பாடும் பாவகை. (சிலப். 10, கட்டுரை.) |
திணைப்பாட்டு | tiṇai-p-pāṭṭu, n. <>id.+. A poem dealing in general terms with a particular tiṇai; எடுத்த திணைக்குரிய தொழிலைப் பொதுப்படக்கூறும் பாடல் (இலக். வி. 603, உரை.) |
திணைப்பெயர் | tiṇai-p-peyar, n.<>id.+. Names of the people occupying aintiṇai; ஐந்திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர். (தொல். பொ. 21.) |
திணைமயக்கம் | tiṇai-mayakkam, n.<>id.+. 1. (Poet.) Harmonious blending of the features of one tiṇai with those of another; ஒரு நிலத்துக்கு உரிய காலம் உரிப்பொருள் கருப்பொருள்கள் மற்ற நிலத்துக்குரிய அப்பொருளுடன் கலந்துவரப்பாடலமைக்கை. 2. Blending of akattiṇai and puṟattiṇai; |
திணைமயக்கு | tiṇai-mayakku, n. <>id.+. See திணைமயக்கம். அகத்திணையின்கட் கைக்கிளை வருதல் திணைமயக்காம் பிறவெனின் (திருக்கோ. 4, உரை). . |
திணைமாலைநூற்றைம்பது | tiṇai-mālai-nūṟṟaimpatu, n. <>id.+. An ancient lovepoem of 150 stanzas by Kaṇi-mētāviyār, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q. v.; பதினெண்கீழ்க்கணக்கினுளொன்றும் கணிமேதாவியாரியற்றியதும் 150 செய்யுளில் ஐந்திணையொழுக்கங்களைக் கூறுவதுமான நூல். |
திணைமொழியைம்பது | tiṇai-moḻi-y-aimpatu, n. <>id.+. An ancient love-poem of 50 stanzas by Kaṇṇaṉ-cēntaṉār, one of patiṉcṇ-kīḻ-k-kaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்கினுளோன்றும் கண்ணஞ்சேந்தனாரியற்றியதும் 50 செய்யுட்களில் ஐந்திணையொழுக்கங்களைக் கூறுவதுமான நூல். |
திணைவழு | tiṇai-vaḻu, n. <>id.+. (Gram.) Incorrect use of a noun in a tiṇai which to it does not belong; ஒரு திணைச்சொல்லை மற்றொரு திணைப்பொருளிற் சொல்லுவதாகிய வழுவகை. (தொல். சொல். 11, சேனா.) |
திணைவழுவமைதி | tiṇai-vaḻu-v-amaiti, n. <>id.+. (Gram.) Tiṇai-vaḻu sanctioned by usage; மரபுபற்றி ஆன்றோரால் அமைத்துக் கொள்ளப்பட்ட திணைவழு. (தொல். சொல். 57, சேனா.) |