Word |
English & Tamil Meaning |
---|---|
திதிநாடி | titi-nāṭi, n. <>திதி+. Duration of an eclipse in nāḻikai; கிரகண நாழிகைக்காலம். (W.) |
திதிநிச்சயம் | titi-niccayam, n. <>id.+. Determination of the correct titi for any ceremony; சடங்குசெய்தற்குரிய திதியைத் தீர்மானிக்கை. (W.) |
திதிநியாதம் | titi-niyātam, n. <>id.+nyāsa. See திதிநிச்சயம். (W.) . |
திதிநிர்ணயம் | titi-nirṇayam, n. <>id.+. See திதிநிச்சயம். . |
திதிப்பிரகரணம் | titi-p-pirakaraṇam, n. <>sthiti+. The stage or period of preservation of the created beings; உயிரினங்கள் காக்கப்படும் நிலை. (W.) |
திதிப்பிரணி | titi-p-piraṇi, n. <>tithi-praṇī. Moon; சந்திரன். (யாழ். அக.) |
திதிப்பு | titippu, n. <>திதி-. See தித்திப்பு. Loc. . |
திதிபண்ணு - தல் | titi-paṇṇu-, v. intr. <>திதி+. See திதிகொடு-. . |
திதிபத்திரம் | titi-pattiram, n. <>id.+patra. Hindu almanac; பஞ்சாங்கம். Loc. |
திதிபரன் | titi-paraṉ, n. <>sthiti+. See திதிகர்த்தா. (W.) . |
திதிபுதல்வர் | titi-putalvar, n. <>திதி+. See திதிசர். திதிபுதல்வர் (திருவாலவா. கடவுள்வா. 12). . |
திதிமைந்தர் | titi-maintar, n. <>id.+. See திதிசர். (சூடா.) . |
திதியர்த்தம் | titi-y-arttam, n. <>tithi+ardha. Half the duration of an eclipse; கிரகணத்தின் பாதிக்காலம். (W.) |
திதிவிருத்தி | titi-virutti, n. <>id.+. The occasion when the total duration of a titi is more than sixty nāḻikai; திதியின் ஆத்தியந்த வியாபகம் அறுபது நாழிகைக்கு மேற்படுங்காலம். (பஞ்.) |
திதீக்கதை | titīkkatai, n. <>titikṣā. Patience, forbearance; பொறுக்குந் தன்மை. சாந்தி நற்றாந்தி திதீக்கதை (திருக்காளத். பு. 20, 21). |
திதீக்கை | titīkkai, n. <>titikṣā. See திதிட்சை. சமைதமையே திதீக்கை (வேதா. சூ. 11). . |
திதீட்சை | titīṭcai, n. <>id. See திதிட்சை. (வேதா. சூ. 11, உரை.) . |
திதை - தல் | titai-, 4 v. intr. <>ததை-. To spread; பரவுதல். திதையுந்தாதுந் தேனுஞ் ஞிமிறும் (தேவா. 395, 5). |
திந்திடம் | tintiṭam, n. <>tintida. See புளி. (மலை.) . |
திந்திடீகம் | tintiṭīkam, n. <>tintidīka. See புளி. (சூடா.) . |
திந்திருணி | tintiruṇi, n. <>tintriṇī. Tamarind. See புளி. (திவா.) |
திந்நாகம் | tinnākam, n. <>diṇ-nāga. Elephants of the eight quarters. See அஷ்டதிக்கஜம். திந்நாகமாவிற் செறிகீட்டிசைக்காவல் செய்யும் (கம்பரா. கடறாவு. 40). |
திநாரம் | tināram, n. <>dīnāra<>Gr. denarius. A gold coin; பொன்னாணய வகை. நூறு திநாரந் தண்டப்படுவது (T. A. S. ii, 13). |
திப்பம் | tippam, n. See திப்பபலி. (சங். அக.) . |
திப்பலி | tippali, n. <>pippaī. Long pepper, m. cl., Piper longum; மருந்துக்கொடி வகை. (பதார்த்த. 954.) |
திப்பலிக்கட்டை | tippali-k-kaṭṭai, n. <>திப்பலி+. Long pepper vine, used for medicinal purposes; கண்டதிப்பலி. (W.) |
திப்பலிக்கொச்சிக்காய் | tippali-k-kocci-k-kāy, n. perh. id.+. A kind of small chillies; ஒருவகைச் சிறுமிளகாய். (யாழ். அக.) |
திப்பலிமூலம் | tippali-mūlam, n. <>id. +. Long pepper root, used for medicinal purpose; திப்பலிவேர். (பதார்த்த. 957.) |
திப்பலியரிசி | tippali-y-arici, n. <>id.+. Long pepper; திப்பலிக்காய். (W.) |
திப்பி 1 | tippi, n. (T. cippa.) Loc. 1. Shallow earthen vessel with a wide mouth; வாயகன்ற சிறு மண்சட்டி. 2. Piece of a coconut shell, used as a ladle; |
திப்பி 2 | tippi, n. <>T. pippi. Dregs, refuse of anything from which the juice has been squeezed out; கோது. |
திப்பிதை - த்தல் | tippi-tai-, v. tr. perh. திருப்பு-+. To stitch back; திருப்பித் தையலிடுதல். Loc. |
திப்பியம் 1 | tippiyam, n. <>divya. 1. That which is divine, sacred; தெய்வத்தன்மையுடைய பொருள். தெய்வங்கொல்லோ திப்பியங்கொல்லோ (மணி. 18, 84). 2. Heaven; 3. That which is admirable; 4. That which is excellent ; 5. A kind of paddy; |