Word |
English & Tamil Meaning |
---|---|
திமிரம் | timiram, n. <>timira. 1. Darkness, obscurity, gloom; இருள்.விலகியது திமிரம் (கம்பரா.மூலபல.161); 2. Night; 3. Blackness, dark colour; 4. Hell; 5. See திமிரகாசம். (w.) |
திமிரன் | timiraṉ, n. <>திமிர். Dull, slow, inactive person or beast; மந்தன். |
திமிராகரன் | timirākaraṉ, n. <>timira + ākara. Fool, idiot, as being a mine of darkness and delusion; [இருளுக்கு இருப்பிடமானவன்] அறிவிலி. ஒருகாலு நினையாத திமிராகரனை வேவென்று (திருப்பு.189). |
திமிராரி | timirāri, n. <>id. + ari. Sun, as the foe of darkness; [இருளின் பகைவன்] சூரியன். (சூடா.) |
திமிராளி | timir-āḷi, n. <>திமிர் + ஆள்-. 1. Paralytic patient; திமிர்வாதக்காரன். 2. Sluggish person; |
திமில் 1 | timil, n. 1. Catamaran, small boat; மீன்படகு. திண்டிமில் வன்பரதவர் (புறநா.24). 2. Vessel ship; 3. cf. இமில். Hump, as of a bullock; 4. cf. திமிசு. நுயளவ |
திமில் 2 | timil, n. <>tumula. See திமிலம். திமிலிடுகின்ற தொல் சேடிமாருடன் (கந்தபு. உமைவரு.20). . |
திமில்வாழ்நர் | timil-vāḻnar, n. <>¢தமில் +. Fishermen, as boatmen; [படகுகாரர்] செம்படவர். திமில்வாழ்நர் சிறூர்க்கே (சிலப்.7. 11, கக்யலெழுதி). |
திமிலகுமிலம் | timila-kumilam, n. Redupl. of திமிலம். See திமிதகுமுதம். (சது.) |
திமிலம் 1 | timilam, n. <>tumala. Great noise, tumult; பேரொலி. திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாச.29, 4). |
திமிலம் 2 | timilam, n. <>timila. A kind of big fish; பெருமீன்வகை. (பிங்.) |
திமிலர் | timilar, n. <>திமில். Fishermen, inhabitants of the maritime tract; நெய்தனிலமாக்கன். பாய்திமிவர் வலையோடு மீலவாரி (தேவா.532, 2). |
திமிலி | timili, n. of. திம்மலி. Stout, corpulent woman; உடல் தடித்தவள்.Loc. |
திமிலிடு - தல் | timil-iṭu-, v. intr. <>திமில் +. To make a great noise; to clamour, roar; மிதவொலித்தல். (J.) |
திமிலை | timilai, n. 1. [M. timila.] A kind of drum; ஒருவகைப் பறை. (சிலப். 3, 27, உரை.) 2. Electrical ray. 3. Sea-fish. dull reddish oilive, attaining 10 in. in length, Astrape dipterygia; |
திமிறியடி - த்தல் | timiṟi-y-aṭi-, v. <>திமிறு- +. tr. 1. To wrench oneself from another's grip; ஒருவன் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்ளுதல். 2. To contradict or oppose with vehemence; To be voilent, as the quaking due to ague; |
திமிறு - தல் | timiṟu-, 5 v. tr. 1. To wriggle out of another's grip; வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல்.---intr. 2. To grow tall and big; 3. To be scattered, spilled as flour in pounding; |
திமுதிமுவெனல் | timu-timu-v-eṉal, n. Onom. expr. of repeated thumping or beating sound; ஓர் ஒலிக்குறிப்பு. |
திமை - த்தல் | timai-, 11 v. tr. To raise up, lift, as stones; கிளப்புதல். (சது.) |
தியக்கடி | tiyakkaṭi, n. <>தியங்கு-+. Faintness, exhaustion; சோர்வு. (w.) |
தியக்கம் | tiyakkam, n. <>id. 1. Faintness, exhaustion, drooping, as from hunger or heat; சோர்வு. தியக்கமற வின்ப்சுகஞ் சேர்வ தென்றோ (தாயு.பெற்றவட். 5). 2. Swoon, loss of the senses, syncope; 3. [T. tikka.] Bewilderment, delusion; 4. Melancholy; dejection, pensiveness; |
தியக்கு | tiyakku, n. See தியக்கம். (சது.) . |
தியக்கு - தல் | tiyakku-, 5 v. tr. caus. of தியங்கு-. To cause confusion; to confound; மயங்கச்செய்தல். சிறியனேனைநீர் தியக்குத லழகோ (அருட்பா, ii, நாடகவிண்.10). |
தியங்கு - தல் | tiyaṅku-, 5 v. intr. 1. To faint, droop, languish; சோர்தல. 2. To be dejected, pensive, sad; 3. To be confounded, deluded; |