Word |
English & Tamil Meaning |
---|---|
தியசம் | tiyacam, n. cf. தியாசம். Tree turmeric. See மரமஞ்சள். (மலை.) |
தியதி | tiyati, n. <>tithi. [M. tiyyati.] Date; தேதி. கற்கடக ஞாயிற்று அந்சாந்தியதியும் (T. A. s. i, 252). |
தியந்தி | tiyanti, n. <>trāyantī. See திராய். (மலை.) . |
தியம்பகன் | tiyampakaṉ, n. <>Tryambaka. See தியம்பகன். தியம்பகன் திரிசூலத்தன்ன கையன் (தேவா.30. 8). . |
தியரடி | tiyaraṭi n. <>திகரடி. See தியக்கடி. . |
தியாகப்பள்ளு | tiyāka-p-paḷḷu, n. <>தியாகர் +. See திருவாரூர்ப்பள்ளு. . |
தியாகம் | tiyākam, n. <>tyāga. 1. Abandoment, desertion; கைவிடுகை. பந்துக்களைத் தியாகம் செய்துவிட்டான். 2. Offering, gift, donation, present; 3. Spirit of self sacrifice; |
தியாகமாவினோதன் | tiyāka-mā-viṉōtaṉ, n. <>id. +. One whose chief delight is in bestowing gifts; கொடுத்தலே பொழுதுபோக்காக உடையோன். தியாகமா வினோதன் றெய்வப் பொன்னி நாட்டுவமை வைப்பை (கம்பரா. மருத்து. 58). |
தியாகமுரசு | tiyāka-muracu, n. <>id. +. Trumpet sounded on occasions of royal bounty, one of mummuracu, q.v.; அரசர்க்குரிய மும்முரசுகளுள் கொடையளித்தலைக் குறித்தற்கு முழங்கும் முரசம். இடிபோலுந் தியாகமுரசு முழங்கப்புண்களை வரையாமற் கொடுத்து (சீவக. 2599, உரை). |
தியாகர் | tiyākar, n. <>id. See தியாகராசர். . |
தியாகராசர் | tiyāka-rācar, n. <>Tyāga-rāja. šiva, as worshipped in Tiruvārūr; திருவாரூர்ச்சிவபிரான். தியாகராசல¦லை. |
தியாகவான் | tiyākavāṉ, n. <>tyāga-vān nom. sing. of tyāga-vat. See தியாகி. சீதாராமப் பிரபலத் தியாகவானே (தனிப்பா. i, 279, 23). . |
தியாகி | tiyāki, n. <>tyāgin. 1. Liberal giver, donor; கொடையாளி. (பிங்.) 2. One who sacrifices his self-interest; |
தியாகையர் | tiyākaiyar, n. <>tyājya. A great musical composer in telugu, native of Tiruvādi; தெலுங்கில் கீர்த்தனங்கள் இயற்றியவரும் திருவையாற்றில் வாழ்ந்தவருமான ஒரு பெரியார். |
தியாச்சியம் | tiyācciyam, n. <>tyājya. 1. That which ought to be given up; விடத்தக்கது. 2. Duration of an hour and a half in an asterism which is deemed unsuited for auspicious deeds; |
தியாசம் | tiyācam, n. cf. nišāhva. Tree turmeric. See மரமஞ்சள். (மலை) |
தியாதன் | tiyātaṉ, n. <>dhyāta. He who is thought of or meditated upon; நினைக்கப்பட்டவன். தனக்கு நாயகனின்மையால் தியாதநாயகனாக மானதத்தான் நோக்கி (சிலப். 8, 24, உரை). |
தியாமம் | tiyāmam, n. (மலை.) 1. Harialli grass. See அறுகு. 2. Cuscus grass, Anatherium muricatum; |
தியாலம் | tiyālam, n. <>dēša-kāla. Time; காலம். ஒருமணித் தியாலம். (யாழ்.அக.) |
தியானச்சுலோகம் | tiyāṉa-c-culōkam, n. <>dhyāna +. Sanskrit verse describing the form etc., of the deity contemplated in a mantra; கியானஞ் செய்யுந் தேவதையின் ரூபமுதலியவற்றைப் பற்றிக் கூறும் வடமொழிச்செய்யுள். |
தியானபாரமிதை | tiyāṉa-pāramitai, id. +. (Buddh.) Perfection of meditation, one of taca-pāramitai, q.v. ; தசபாரமிதையுள் ஒன்றான தியானம் நிறைகை. |
தியானம் | tiyāṉam, n. <>dhyāna. 1. Meditation; சிந்தனை. (பிங்.) 2. See தியானபாரமிதை. ஊனமிஃ றியானமே யுணர்ச்சியோ டுபாயமும் (மணி.26, 45, உரை). 3. (Yōga.) Steady, uninterrupted contemplation of an object, one of aṣṭāṅkayōkam, q. v.; |
தியானயாகம் | tiyāṉa-yākam, n. <>id. +. Religious meditation, considered as a form of sacrifice, one of ai-vakai-yākam, q. v.; ஐவகை யாகத்துள் தியானந்செய்தலாகிய வேள்வி. (சிவ.தரு.ஐவகை. 1, உரை.) |
தியானவான் | tiyāṉavāṉ, n. <>dhyān-avān. nom. sing. of dhyānavat. See தியானி. . |
தியானவிந்து | tiyāṉa-vintu, n. <>Dhyānabindu. An Upanishad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
தியானவேள்வி | tiyāṉa-vēḷvi, n. <>dhyāna +. See தீயானயாகம். (சி. சி. 8, 23, சிவஞா.) . |
தியானி | tiyāṉi, n. <>dhyānin. One engaged in uninterrupted religious meditation; விடாது சித்நிப்போன். |
தியானி - த்தல் | tiyāṉi-, 11 v. tr. <>dhyāna. To meditate, contemplate, to give undivided attention to a deity an object, etc.; ஒன்றைவிடாது நினைத்தல். அமுதலிங்கத்தைத் தியானித்து (திருவானைக்.வரங்.2). |