Word |
English & Tamil Meaning |
---|---|
திரி 3 | tiri, n. <>திரி2 [T.K.M. tiri.] 1. Twisting; turning; முறுக்குகை. திரிபுரி நரம்பின் (பட்டினப், 254). 2. Roll or twist of cloth or thread for a wick; 3. Torch of twisted cloth; 4. Match; 5. Candle; 6. Lint; 7. Garlic. |
திரி 4 | tiri, n. <>tri. Three, used in compounds; மூன்று. திரிவிதகரணத்தால் (கைவல். சந். 80). |
திரி 5 | tiri, n. <>strī. Woman; பெண். (யாழ். அக.) |
திரிக்கால் | tiri-k-kāl, n. <>திரி4 +. Three-quarters, a mercantile slang; முக்கால் கருந்தலை செந்தலை தங்கான் றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171). |
திரிக்குழாய் | tiri-k-kuḻāy, n. <>திரி3 +. Oil can with a long narrow spout for feeding a torch; தீவட்டிக்கு எண்ணெய் வார்க்குங் கருவி. (பதிற்றுப். 47, உரை) |
திரிகடுகம் | tiri-kaṭukam, n. திரி4 +. 1. Medicinal stuffs, numbering three, viz., cukku, miḷaku, tippil; சுக்கு, மிளகு, திப்பலி ஆகிய மூவகை மருந்துச்சரக்குகள். (திவா.) 2. An ancient didactic work by Nallātaṉār, mentioning three points in each of the 100 stanzas, one of patiṉ-eṇ-kīl-k-kaṇakku, q.v.; |
திரிகடுகு | tiri-kaṭuku, n. See திரிகடுகம்1, (பதார்த்த. 959.) . |
திரிகண் | tiri-kaṇ, n. திரி4 +. Bamboo. See மூங்கில். (பிங்.) |
திரிகண்டகம் | tiri-kaṇṭakam, n. <>tri-kaṇṭaka. See திரிகண்டம். (w). . |
திரிகண்டகி | tiri-kaṇṭaki, n. <>id. See திரிகண்டம். (தைலவ.) . |
திரிகண்டகை | tiri-kaṇṭakai, n. <>id. See திரிகண்டம். (தைலவ. தைல.135.) . |
திரிகண்டம் | tiri-kaṇṭam, n. <>id. A small prostrate herb. See நெருஞ்சி. (மலை.) |
திரிகந்தம் | tiri-kantam, n. <>tri-gandha. The three aromatic substances, viz., kirāmpu, nāvaṟpū, caṇpakappū, or cantaṉam, ceṉcantaṉam, akil; கிராம்பு, நாவற்பூ சண்பகப்பூ, அல்லது சந்தனம், செஞ்சந்தனம், அகில் ஆகிய மூவகை வாசனைப்பண்டங்கள். |
திரிகர்த்தம் | tirikarttam, n. <>trigarta. An arid country between the Sutlej and the Sarasvati rivers, containing Ludhiana and Patiala on the north and some portion of the desert on the south, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் வடக்கில் லூடியானா, பாதியாலா பிரதேசங்களையும், தெற்கில் பாலைவனப் பகுதியையும் கொண்டதும், சத்ல¦ஜ் ஸரஸ்வதி நதிகளுக்கு இடையிலுள்ளதுமான நாடு. (பாரத.இராச.51). |
திரிகரணம் | tiri-karaṇam, n. <>tri-karaṇa. The three organs, viz., maṉam, vākku, kāyam; மனம், வாக்கு, காயம், என்ற மூன்று கருவிகள். திரிகரணமாக வருமிச்சை யறிவியற்றலால் (குமர. பிர. கந்தர். 9). |
திரிகல் | tiri-kal, n. <>திரி1-+. Handmill; ஏந்திரம். திரிகலொப்புடைத்தாய ... தொண்டகம் (கல்லா. 24,13). |
திரிகஸ்தானவெலும்பு | tirika-stāṉa-v-elumpu, n. <>trika +. Sacrum, end of spine; பிருட்ட எலும்பு. |
திரிகாலசந்தி | tiri-kāla-canti, n. tri-kāla +. The three parts of the day, morning, moon and evening; காலை பகல் மாலைகளாகிய மூன்று சந்தியாகாலங்கள். |
திரிகாலசுரம் | tiri-kāla-curam, n. <>id. +. A kind of fever; காலை நண்பகல் மாலையென்னும் மூன்று காலங்களிலும் மாறாது வரும் காய்ச்சல்நோய். (சீவரட். 50.) |
திரிகாலஞானம் | tiri-kāla-āṉam, n. <>id. +. Knowledge of the past, the present and the future; முக்காலவுணர்ச்சி. (சிலப்.10, 167, அரும்.) |
திரிகாலம் | tiri-kālam, n. <>tri-kāla. 1. The three parts of the day, viz., kālai, ucci, mālai; காலை, உச்சி, மாலை என்ற முப்பகுதி நாட்காலம். (S. I. I. i, 78.) 2. (Gram.) Time, of three kinds, viz., iṟappu, nikaḻvu, etirvu; |
திரிகாலவர்த்தமானம் | tiri-kāla-vartta-māṉam, n. <>id. +. Occurrence in the past, present and future; முக்காலநிகழ்ச்சி. (யாழ். அக.) |
திரிகாலோசிதம் | tirikālōcitam, n. prob. id. + ucita. Darbha grass. See தருப்பை. (மலை.) |
திரிகினநோய் | tirikiṉa-nōy, n. <>திரிகினம் +. Disease produced by the presence of trichina in the muscles and intestinal tract, Trichinosis; திரிகினக்கிருமியால் உடலிற் பிறக்கும் நோய்வகை. |