Word |
English & Tamil Meaning |
---|---|
திரிகினம் | tirikiṉam, n. <>E. trichina. Nematoid worm produced from eating meat insufficiently cooked, Trichina spiralis; அரைப்பதமான மாமிசத்தை உட்கொள்வதால் உடலில் உண்டாகும் கிருமிவகை. |
திரிகுணம் | tiri-kuṇam, n. <>tri-guṇa. The three fundamental qualities, viz., cattuvam, irācatam, tāmatam; சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்கள். |
திரிகூடம் | tiri-kūṭam, n. <>tri-kūṭa. 1. A sacred mountain; ஒரு மலை. திரிகூடமென்னுந் துங்கவெங்கிரியின் (இரகு. திக். 224). 2. The mountain at Kuṟṟālam in Tinnevelly District, as having three peaks; |
திரிகூடராசப்பகவிராயர் | tiri-kūṭa-rācappa-kavi-rāyar, n. The author of Kuṟṟālat-tala-purāṇam, Kuṟṟāla-k-kuṟavaci and other poems, 18th c.; 18 ம் நூற்றாண்டில் குற்றாலத்தல புராணம் குற்றாலக்குறவஞ்சி முதலிய நூல்கள் இயற்றிய புலவர். |
திரிகை 1 | tirikai, n. திரி1-. [K. tirike.] 1. Roaming, wandering; அலைகை. 2. Hand-mill; 3. Potter's wheel; 4. Musical instrument; 5. (Nāṭya.) A particular gesture in dance; |
திரிகை 2 | tirikai, n. <>முந்திரிகை. Cashew nut. See முந்திரி. (மலை.) Common grape vine. |
திரிகைக்கோல் | tirikai-k-kōl, n. <>திரிகை1 +. The stick used in turning the potter's wheel; குயவன் சக்கரஞ்சுழற்ற உபயோகிக்கும் கோல். Loc. |
திரிகோணகுண்டலி | tiri-kōṇa-kuṇṭali, n. <>trikōṇa +. Pineal gland; மூளையின் ஒரு பகுதி. |
திரிகோணசாஸ்திரம் | tiri-kōṇa-cāsti-ram, n. <>id. +. Trigonometry; திரிகோணத்தின் கோணங்கட்கும் பக்கங்கட்குமுள்ள சம்பந்தங்களைக் கூறும் கணிதநூல்வகை. Mod. |
திரிகோணப்பாலை | tiri-kōṇa-p-pālai, n. <>id. +. (Mus.) One of the four modes of the ancient Tamil music; பாலைப்பண்வகை. (சிலப்.17, எடுத்துக்காட்டு, 8, உரை, பக்.453) |
திரிகோணம் | tiri-kōṇam, n. <>tri-kōṇam. Triangle; முக்கோணம். |
திரிகோணமலை | tiri-kōṇa-malai, n. <>id. +. Trincomalee, an ancient hill-shrine of šiva on the N. E. coast of Ceylon; இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிவதலம். |
திரிங்கேத்துபாய்மரம் | tiriṅkēttu-pāy-maram, n. Foremast; கப்பலுறுப்புவகை. Naut. |
திரிச்சிராப்பள்ளி | tiri-c-cirā-p-palli, n. <>tri-širas +. Trichinopoly, a šaiva shrine believed to have been constructed by the giant Tiriciracu; திரிசிரசு அமைத்ததாகக் கருதப்படும் ஒரு சோணாட்டுச் சிவதலம். (தேவா 369, 3.) |
திரிச்சீலை | tiri-c-cīlai, n. <>திரி3 +. Twisted rag used a a wick or as seton for sores; புண்ணிலும் விளக்கிலும் இடும் திரி. Colloq. |
திரிசங்கு | tiricaṇku, n. <>Tri-šaṅku. A prince of Oudh of the solar line, who was bodily elevated to a new heaven by the sage Višvāmitra; சூரியகுலத்துதித்த அயோத்தி வேந்தனும் மனிதசரீரத்துடன் விசுவாமித்திர முனிவரால் சுவர்க்கத்துக்கு விடுக்கப்பெற்றவனுமான அரசன். மீதுபோந் திரிசங்கை (கந்தபு. ஆற்றுப். 22). |
திரிசங்குசுவர்க்கம் | tiricaṅku-cuvarkkam, n. <>திரிசங்கு+. 1. A new heaven created by Višvāmitra for Tiricaṅku; திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் சிருட்டித்த துறக்கம். 2. Perplexity due to an unsettled condition; |
திரிசங்குமண்டலம் | tiricaṅku-maṇṭalam, n. <>id. +. Region of the Southern Cross, as the world of Tiricaṅku; [திரிசங்குவின் உலகு] தெற்குத் திசையிலுள்ள வானமண்டலம். |
திரிசடை | tiricaṭai, n. <>Tri-jaṭā. The daughter of Vibhīṣaṇa and companion of Sītā during her captivity in Laṅkā; விபீடணன் மகளாய் இலங்கையிற் சீதைக்குத் துணையாயிருந்து உதவியவள். (கம்பரா. காட்சிப். 31.) |
திரிசந்தி | tiri-canti, n. <>tri-sandhyā. See திரிகாலசந்தி. . |
திரிசமஞ்சரி | tiricamacari, n. <>tri-daša-majarī. Sacred basil; துளசி. (சங். அக.) |
திரிசமம் | tiri-camam, n. prob. திரி1- + சமம். Mischievousness; விஷமம். (w). |
திரிசமன் | tiri-camaṉ, n. See திரிசமம். Colloq. . |
திரிசரேணூ | tiricarēṇu, n. <>trasa-rēṇu. Mote or dust moving in a sunbeam, considered as an ideal weight of the lowest denomination; காணக்கூடிய நிறையளவில் மிக நுண்ணியதெனக் கருதப்படுவதும் சாளரவாசலில் சூரிய கிரணத்திற்றோன்றும் துகள்வடிவானதும் ஆகிய அணு. (சிவதரு. கோபுரவி. 3, உரை.) |