Word |
English & Tamil Meaning |
---|---|
திரிதரவுள்ளவிருக்கை | tiritaravuḷḷa-v-irukkai, n. <>id. + உள்ள +. Posture of the moving kind, mentioned in the science of painting, one of two irukkai, q.v.; சலிக்கும் இருக்கைவகை. (சிலப். 8, 25, உரை.) |
திரிதல் | tirital, n. <>திரி1-. 1. (Gram.) Change of one letter into another, one of three vikāram, q.v.; மூவகை விகாரங்களுள் ஒரெழுத்து மற்றொன்றாக மாறுவது. (நன்.154). 2. Mistaking one object for another; |
திரிதலை | tiritalai, n. A kind of shrub; பூடுவகை. (யாழ். அக.) |
திரிதிகை | tiritikai, n. See திரிதியை. (யாழ். அக.) . |
திரிதியம் | tiritiyam, n. Purple yam. See செவ்வள்ளி. (w). |
திரிதியை | tiritiyai, n. <>tritīyā. Third titi in the bright or the dark fortnight; கிருஷ்ண சுக்கிலபட்சங்களில் வரும் மூன்றாந்திதி. |
திரிதிரிப்பொம்மை | tiritiri-p-pommai, n. <>perb. திரி3 +. A chilldren's game in which an object such as a wick is hidden in sand and is required to be found out; மணற்குவியலில் திரிபோன்ற பொருளை மறைத்தும் எடுத்தும் விளையாடும் விளையாட்டுவகை. (w). |
திரிதிவம் | tiritivam, n. <>tri-diva. Heaven; சுவர்க்கம். (யாழ். அக.) |
திரிதினஸ்பிருக்கு | tiriti-ṉaspirukku, n. <>tridina + sprc. Titi which occurs in three consecutive days; அடுத்த மூன்று நாளிற் சம்பந்தப்பட்டுத் தோன்றும் ஒரே திதி. (பஞ்). |
திரிதீயம் | tiritīyam, n. <>trtīya 1. Third; மூன்றாவது. 2. Quicklime, as the third ingredient with betel and areca; |
திரிதீர்க்கம | tiri-tīrkkam, n. <>strī-dīrgha. A kind of agreement between the nakṣatras of the bridegroom and bride, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப்பொருத்தம் பத்தனுள் மணமக்கள் நட்சத்திரங்களின் பொருத்தவகை. (விதான. கடிமண. 9.) |
திரிதூளி | tiri-tūḷi, n. perh. திரி1-+. Pellmell; medley; சின்னாபின்னம். (J.) |
திரிதேகி | tiritēki, n. perh. tridēhi Fever plant. See பற்படகம். (சங். அக.) |
திரிதோஷசன்னி | tiri-tōṣa-caṉṉi, n. <>திரிதோஷம்+. Convulsions from tiri-tōṣam; சன்னிநோய்வகை. |
திரிதோஷம் | tiri-tōṣam, n. <>tri-dōṣa. (w.) 1. The three humours of the body; முப்பிணிக்கூறு. 2. Vitiation of the three humours, as the cause of disease; |
திரிநேத்திரன் | tiri-nēttiraṉ, n. <>tri-nētra. šiva, as three-eyed; [முக்கண்ணன்] சிவன். |
திரிப்பழம் | tiri-p-paḻam, n. <>திரி3+. Burning wick; நன்றாக எரியும் திரி. Loc. |
திரிப்பு | tirippu, n. Red cedar of the Nilgiri planters. See மதகரிவேம்பு. Kāṭar. |
திரிபங்கம் | tiri-paṅkam, n. <>tri-bhaṅga. A kind of graceful posture in images with three bendings; முத்திறமாக உடம்பை வளைத்துநிற்கும் பிம்பங்களின் நிலை. |
திரிபங்கி | tiri-paṅki, n. <>tri-bhaṅgin. 1. A stanza curiously wrought so that it may be divided into three stanzas, each with a different meaning, one of cittira-kavi; ஒரு செய்யுளாய் நின்றே ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து முடிந்து வெவேறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடும் சித்திரகவிவகை. (தண்டி. 95, உரை.) 2. See திரிபங்கம். வெள்கிய திரிபங்கி காரம். (அழகர்கலம். 1). |
திரிபணி | tiripaṇi, n. <>திரிபு+அணி. (Rhet.) A figure of speech. See பரிணாமாலங்காரம். (அணியி. 6.) |
திரிபதகை | tiri-patakai, n. <>tri-patha-gā. The ganges; கங்கை. (திவா.) இதழி திரிபதகை தலைபொதிசடையர் (திருவாலவா. கடவுள்.12). |
திரிபதாகம் | tiripatākam, n. See திரிபதாகை. (சிலப். பக். 92.) . |
திரிபதாகை | tiripatākai, n. <>tri-patākā. (Nāṭya.) Gesture with one hand in which the thumb and the ring-finger are bent while the rest are held upright, one of 33 iṇaiyā-viṉa-k-kai, q.v.; அணிவிரலும் பெருவிரலுங் குஞ்சித்து நிற்ப ஏனைவிரல்களை நிமிரநிறுத்தும் இணையாவினைக் கைவகை. (சிலப். 3, 18, உரை.) |
திரிபதார்த்தம் | tiri-patārttam, n. <>tri-padārtha (šaiva.) The three eternal verities in the universe, viz., pali, pacu, pācam; பதி, பசு, பாசம் என்ற மூவகை நித்தியப்பொருள்கள். (சி. சி. 8, 27, ஞானப்). |