Word |
English & Tamil Meaning |
---|---|
திரிபதை | tiri-patai, n. <>tri-pathā. See திரிபதகை. திரிபதை செறிதாண்மீது (அரிசமய. பத்திசார.100). . A kind of song; |
திரிபந்தாதி | tiripantāti, n. <>திரிபு+. An antāti poem of tiripu stanzas; முதலெழுத்து மட்டுந்திரிய இரண்டு முதலிய பலவெழுத்துக்கள் ஒன்றிப் பொருள்வேறுபடவரும் செய்யுளாலாகிய அந்தாதிப்பிரபந்தம். |
திரிபலம் | tiri-palam, n. <>tri-phalā. See திரிபலை. (தைலவ. தைல. 43.) . |
திரிபலாசம் | tiri-palācam, n. <>tri+palāša. Indian coral-tree. See முருக்கு. (மூ. அ.) |
திரிபலை | tiri-palai, n. <>tri-phalā. Fruits of the three myrobalans, viz., kaṭu, tāṉṟi, nclli; கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம். (திவா.) |
திரிபலையேனாதி | tiri-palai-y-ēṉāti, n. <>திரிபலை +. An electuary compounded of tiripalai and other ingredients; திரிபலை முதலியவற்றாற் செய்த ஒருவகை இலேகியம். (w.) |
திரிபழுகம் | tiri-paḻukam, n. of trimadhura. A preparation made of milk, ghee and honey; பால், நெய், தேன்களால் ஆகிய கூட்டுப்பண்டம். (w.) |
திரிபன்றி | tiri-paṉṟi, n. <>திரி1- +. Whirling target in the shape of a boar, used to test the skill of an archer; வில்லாளியின் திறமையைச் சோதிப்பதற்குப் பன்றிவடிவாயமைக்கப்பட்ட சுழலும் இலக்குவகை. திருமளவட்குப் பாலா னருந்திரிபன்றியெய்த வருமகனாகும் (சீவக. 2177). |
திரிபாகம் | tiri-pākam, n. See திரிபாகவினாம். (C. G.) . |
திரிபாகவினாம் | tiri-pāka-v-iṉām, n. <>tri+ Inam land paying one-third of its revenue of the Government; மூன்றில் ஒருபகுதி அரசிறை செலுத்தற்குரிய இனாம் பூமி. (C. G.) |
திரிபாகி | tiri-pāki, n. <>tri-bhāgin. A stanza having a key-word of three letters, so formed as to give one meaning when taken as a whole, another meaning when the first letter is dropped and a third meaning when the medial letter is dropped, one of cittira-kavi, q.v.; மூவெழுத்துக்களைச் சேர்க்க ஒரு மொழியாகவும், அதன் முதலிறுதியெழுத்துக்களைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் இடை கடை எழுத்துக்களைச் சேர்க்க வேறொரு மொழியாகவும் வந்து வெவ்வேறு பொருள்தரும் சித்திர கவிவகை. (தண்டி. 95, உரை.) |
திரிபாத்விபூதி | tiri-pāt-vipūti, n. <>tripād-vibhūti. (Vaiṣṇ.) Heaven, as three-fourths of the felicity be stowed by God; [இறைவனருளும் இன்பத்தில் முக்காற் கூறுவது] பரமபதம். (ஈடு.) |
திரிபாத்விபூதிமகாநாராயணம் | tiripāt-vipūti-makā-nārāyaṇam, n. <>Tripād-vibhūti-mahānārāyaṇa. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடங்களுள் ஒன்று. |
திரிபாதம் | tiri-pātam, n. <>tri-pāda. A hell; ஒரு நரகம். (சிவதரு. சுவர்க். 125.) |
திரிபாதி | tiri-pāti, n. <>tripādikā. Scabrous ovate unifoliate tick-trefoil. See சிறுபுள்ளடி. (மலை.) |
திரிபாலைத்திறம | tiri-pālai-t-tiṟam, n. (Mus.) Melodies of the pāḻai class; பாலைப்பண் வகை. (பு. வெ. ஒழிபு. 15, உரை.) |
திரிபிடகம் | tiri-piṭakam, n. <>tri-piṭaka. The three collections of Buddhist sacred writings, viz. cūttira-pitakam, viṉaya-piṭakam, apitarma-piṭakam; சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்றுவகைப்பட்ட பௌத்தாகமத்தொகுதி. (மணி. 26, 66, அரும்.) |
திரிபு | tiripu, n. <>திரி1-. 1. Change, alteration; வேறுபாடு. குறிதிரி பறியா வறிவனை (கலித். 39, 46). 2. (Gram.) Change in sandhi, as tōṉṟal, tirital, keṭutal; 3. Perverted understanding, as an obstacle to salvation; 4. Stanza whose initial letters excepting the first are identical in each line, opp. to yamakam; |
திரிபுக்காட்சி | tiripu-k-kātci, n. <>திரிபு +. Optical illusion, erroneous apprehension of objects of sense, as mistaking a post for a thief; ஒன்றனை மற்றொன்றாக மாறியுணர்கை. |
திரிபுச்சம் | tiri-puccam, n. prob. tri. (Mus.) Rapid repetition of notes in threes, one of ten kamakam, q.v.; இசைக்குரிய கமகம் பத்தனுள் மும்மூன்றாக விரைந்தடுக்கிப் பாடுவது (பரத. இராக. 24, உரை.) |
திரிபுசம் | tiripucam, n. <>tri-bhuja. Triangle, as having thee sides; [மூன்று எல்லைக் கோடுகளுடையது] முக்கோணம். (w.) |
திரிபுடகம் | tiri-puṭakam, n. <>tri-puṭaka. See திரிபுசம். (யாழ். அக.) . |
திரிபுடி | tiri-puṭi, n. <>tri-puṭī. The three factors of knowledge viz., ātiru, āṉam, ēyam; அறிவிற்குரிய ஞாதிரு ஞான ஞேயங்கள். திரிபுடி யிடராமென (கைவல். சந். 124). |