Word |
English & Tamil Meaning |
---|---|
திரிமூலம் | tiri-mūlam, n. <>id. +. The three kinds of roots or plants, viz., tippali, cittiram, kaṇṭu-mūlam; திப்பலி, சித்திரம், கண்டு மூலம் என்ற மூவகை வேர்கள். (சங். அக.) |
திரிய | tiriya, adv. திரி1-. [T. tirigi, K. tirugi, M. tiriya.] Again; திரும்ப. திரியப் பிரளயம் வர (ஈடு, 8, 1, 5). |
திரியக்கதி | tiriyak-kati, n. <>tiryak +. (Jaina.) The animal stage in transmigration. See விலங்குகதி. |
திரியக்கி | tiriyakki, n. See திரியட்சி. (சங். அக.) . |
திரியக்கு | tiriyakku, n. <>tiryak nom. sin. of tiryac. 1. That which is cross-wise or transverse; குறுக்கானது. கரந் திரியக்கேயாக (சிவதரு. சிவயோ. 47). 2. Beast and birds; |
திரியக்கோடல் | tiriya-k-kōṭal, n. <>திரி1- +. Fallacy of mistaking one object for another, one of eight piramāṇāpācam, q.v.; பிரமாணாபாசம் எட்டனுள் ஒன்றை மற்றொன்றக மாறிக்கருதுகை. திரியக்கோட லொன்றை யொன்றென்றல் (மணி. 27, 63). |
திரியங்முகம் | tiriyaṅ-mukam, n. <>tiryaṅmukha. (Astrol.) Transverse aspect, as of planets; கிரகங்களின் குறுக்குப்பார்வை. |
திரியட்சி | tiri-y-aṭci, n. perh. tryakṣī. Coconut, as three-eyed; [முக்கண்ணுள்ளது] தேங்காய். (தைலவ. தைல.) |
திரியட்டும் | tiriyaṭṭum, adv. See திரிய. திரியட்டும் ஸம்சாரிகளோடே இருக்கையன்றியே (ஈடு, 2, 3, 10). . |
திரியம் | tiriyam, n. Purple yam. See செவள்ளி. (மலை.) . |
திரியம்பகம் | tiriyampakam, n. <>tryam-baka. šiva's bow; சிவன்வில். சுடர்க்கடவுடன் பல்லிறுத்தவன் வலிக்கமை திரியம்பகமெனும் வில் (கம்பரா. நட்புக். 7) |
திரியம்பகன் | tiriyampakaṉ, n. <>Tryam-baka. šiva; சிவன். (திவா.) |
திரியம்பகி | tiriyampaki, n. <>Tryambakī. Sakti, as consort of Tiriyampakaṉ; [திரியம்பகன் மனைவி] சத்தி. புராந்தகி திரியம்பகி (தாயு. மலைவளர். 5). |
திரியமுகம் | tiriya-mukam, n. See திரியங்முகம். (w.) . |
திரியவிடு - தல் | tiriya-vitu, n. <>திரி1- +. To transfer, as one's property; சொத்து முதலியவற்றைப் பிறர்பேரால் மாற்றுதல். உன் க்ஷேத்ரத்தையும் என்பேரிலே திரியவிட்டுவை என்னும் (ஈடு, 4, 9, 6) |
திரியவும் | tiriyavum, adv. <>id. See திரிய. ஐந்தலையொடு திரியவும் வந்து (பாரத. பதினேழாம். 226). . |
திரியாகிகசுரம் | tiriyākika-curam, n. <>tryaha +. Intermittent fever coming once in three days; மூன்று நாளுக் கொருமுறை வரும் காய்ச்சல். (சீவரட்.) |
திரியாங்கம் | tiriyāṅkam, n. <>tryaṅga. See திரயாங்கம். . |
திரியாமை | tiriyāmai, n. <>tri-yāmā. (யாழ். அக.) 1. Night; இரவு. 2. The jamna; 3. A kind of black stone; |
திரியாயுடம் | tiriyāyuṭam, n. <>tryāyuṣa. A mantra believed to grant long life; ஆயுளை நீடிக்கச் செய்யும் மந்திரவகை. பின்னருந் திரியாயுடந் திரியம்பக மனுவால் (காஞ்சிப்பு. சனற்.15). |
திரியாவரம் | tiriyāvaram, n. perh. திரி1-. Deceit, fraud, mischievousness; வஞ்சனை. Colloq. |
திரியிடு - தல் | tiri-y-iṭu, v. intr. <>திரி3 +. To insert a roll of cloth in the perforation of the ear to enlarge it; காதுவளர்க்கத் துணித்திரி இட்டு வைத்தல். திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (திவ். பெரியாழ். 2, 3, 8). |
திரியுச்சம் | tiriyuccam, n. (Mus.) See திரிபுச்சம். (பரத. இராக. 24, உரை.) . |
திரியெடுத்தாடு - தல் | tiri-y-eṭuttāṭu-, v. intr. <>திரி3 +. To dance with a burning torch on festive occasion in fulfilment of a vow; திருவிழாக்காலங்களில் பிரார்த்தனையின் பொருட்டுத் தீப்பந்தம் பிடித்தாடுதல். Madu. |
திரியேகக்கடவுள் | tiri-y-ēka-k-kaṭavuḷ, n. <>tryēka +. Triune God, as Father, Son and Holy Spirit; பிதா புத்திர ஆவிகளாகிய முத்திறக் கடவுள். Chr. |
திரியேகத்துவம் | tiriyēkattuvam, n. <>tryēka-tva. See திரியேகம். Chr. . |
திரியேகம் | tiriyēkam, n. <>tryēka. The Trinity; கடவுளின் முத்திறத் தன்மை. Chr. |
திரியேகன் | tiriyēkaṉ, n. <>id. See திரியேகக்கடவுள். Chr. . |
திரியேற்று - தல் | tiri-y-ēṟṟu-, v. intr. <>திரி3 +. 1. To introduce a seton into an issue or abscess; புண் முதலியவற்றிற் காரச்சீலையிடுதல். 2. See திரியிடு-. |
திரியோடல் | tiri-y-ōṭal, n. <>id. +. Forming of a kink or twist in a rope; கொடி முறுக்கு விழுகை. (w.) |