Word |
English & Tamil Meaning |
---|---|
திரிபுடிபலம் | tiripuṭi-palam, n. Castorplant. See ஆமணக்கு. (மூ. அ.) |
திரிபுடை | tiripuṭai, n. <>tri-puṭa. (Mus.) A variety of time-measure, represented thus, one of catta-tāḷam, q.v.; சத்த தாளத்தொன்று. (பரத. தாள. 22.) |
திரிபுண்டரம் | tiri-puṇṭaram, n. <>tri-puṇdra. Saivaite mark in three horizontal lines made on the forehead with holy ashes; சைவர் நெற்றியில் விபூதியால் அணியும் மூவரி கொண்ட குறி. |
திரிபுரசுந்தரி | tiripura-cuntari, n. <>tri-pura +. Parvatī; பார்வதி. (அபிரா.) |
திரிபுரத்தான் | tiripurattāṉ, n. Indian acalypha; குப்பைமேனி. (சங். அக.) |
திரிபுரதகனன் | tiripura-takaṉaṉ, n. <>tri-pura +. šiva, as He who burnt Tiripuram; [திரிபுரத்தை எரித்தவன்] சிவபிரான். |
திரிபுரம் | tiri-puram, n. <>Tri-pura. The three aerial cities of gold, silver and iron burnt by šiva; பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால் எரிக்கப்பட்டனவும் விண்ணிற் சஞ்சரித்தனவுமான மூன்று நகரங்கள். திரிபுர மெரித்த விரிசடைக்கடவுளும் (இறை. பாயி.). |
திரிபுரமல்லிகை | tiripura-mallikai, n. <>id. +. Arabian jasmine, m. sh., Jasminumsambac; மல்லிகைவகை. (யாழ். அக.) |
திரிபுரமெரித்தான் | tiripuram-erittāṉ, n. <>id. +. 1. See திரிபுரதகனன். (பிங்.) . 2. Round berried cuspidate-leaved lingam tree. 3. Stalked leaflet chaste tree. |
திரிபுராதாபினி | tiripurātāpiṉi, n. <>Tri-purā-tāpana. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
திரிபுராந்தகன் | tiripurāntakaṉ, n. <>Tri-purāntaka. See திரிபுரதகனன். (பிங்.) . |
திரிபுராரி | tiri-purāri, n. <>Tri-purāri See திரிபுரதகனன். (சூடா.) . |
திரிபுரி | tiripuri, n. perh. tri-purī. Purslane leaved trianthema. See சாறணை. (பிங்.) |
திரிபுருஷம் | tiri-puruṣam, n. <>tri-puruṣa. Three generations of lineal descent; மூன்று தலைமுறை. Colloq. |
திரிபுரை | tiri-purai, n. <>Tri-purā. 1. Pārvatī; திரிபுரை யிங்கு வந்திருந்தால் (சிவரக. கணபதியு. 13). 2. An Upanishad, one of 108; |
திரிபுவனசக்கரவர்த்தி | tiripuvaṉa-cak-karavartti, n. <>tri-bhuvana +. A title assumed by the Chola kings; சோழர் பட்டப்பெயர். (Insc.) |
திரிபுவனதிலகம் | tiri-puvaṉa-tilakam, n. <>id. +. An ancient matematical treatise; ஒரு பழைய கணித நூல். (கணக்கதி. 5, உரை.) |
திரிபுவனம் | tiri-puvaṉam, n. <>tri +. 1. See திரிலோகம். திரிபுவன முழுதாண்டு (கம்பரா. குலமுறை. 5). . 2. A šiva shrine in Tanjore district; |
திரிமஞ்சள் | tiri-macaḷ, n. <>id. +. The three kinds of turmerics, viz., macal, kattūri-macal, mara-macal; மஞ்சள், கத்தூரி மஞ்சள், மரமஞ்சள் என்ற மூவகை மஞ்சள். (மூ. அ.) |
திரிமண்டலச்சிலந்தி | tiri-maṇṭala-c-cilanti, n. <>id. +. A kind of poisonous spider; விஷச் சிலந்திவகை. (சீவரட். 354.) |
திரிமணி | tiri-maṇi, n. <>id. +. The three objects of veneration in Buddhism, viz., puttaṉ, putta-tarumam, putta-caṅkam; பௌத்தர் வணங்கற்குரிய புத்தன். புத்ததருமம், புத்தசங்கம் என்ற முத்திறப்பொருள்கள். |
திரிமணை | tiri-maṇai, n. <>திரி2- +. Plaited ring of straw or fibre for setting a pot on; புரிமணை. (J.) |
திரிமரம் | tiri-maram, n. <>id. +. Wooden mill for grinding grain; தானியமரைக்குந் திரிகை. களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் (பெரும்பாண்.187). |
திரிமலம் | tiri-malam, n. <>tri +. The three impurities of souls; See மும்மலம். திரிமலங்களறுத்து (சி. சி. 12, 1). |
திரிமாத்திரை | tiri-māttirai, n. <>id. +. (Mus.) A variety of time-measure, one of five upa-tāḷam, q.v.; உபதாளம் ஐந்தனுள் ஒன்று. (பரத. தாள. 3.) |
திரிமார்க்கம் | tiri-mārkkam, n. <>id. +. Junction of three roads; முச்சந்தி. (யாழ். அக.) |
திரிமுண்டம் | tiri-muṇṭam, n. See திரிபுண்டரம். திரிமுண்டஞ் சேர்சங்கந் தகுகுழை (கோயிற்பு. நடராச. 29). . |
திரிமூர்த்தி | tiri-mūrtti, n. <>tri +. The Hindu triad, viz., Brahmā, Viṣṇu, Rudra; பிரமன் விஷ்ணு உருத்திரனென்ற மும்மூர்த்திகள். |