Word |
English & Tamil Meaning |
---|---|
திரிவுக்காட்சி | tirivu-k-kāṭci, n. <>திரிவு +. See திரிபுக்காட்சி. . |
திரிவேணி | tiri-vēṇi, n. <>tri-vēṇī. See திரிவேணிசங்கமம். . |
திரிவேணிசங்கமம் | tirivēni-caṅkamam, n. <>tri-vēṇī +. Confluence of the Ganges with the Jamna and the subterranean Sarasvatī near Allahabad; பிரயாகையில் கங்கை யமுனை அந்தர் வாகினியான சரசுவதி என்னும் மூன்று நதிகள் கூடுமிடம். (யாழ். அக.). |
திரிவை | tirivai, n. <>திரி1-. Constant recitation of selected Vēdic hymns with a view to fix them in memory; சந்தைசொல்லப்பட்ட வேதப்பகுதியை நெட்டுருவாகும்படி பலதடவை திருப்பிச்சொல்லுகை. |
திரீ | tirī, n. <>strī. Woman; பெண். (யாழ். அக.). |
திரீலிங்கம் | tirī-liṅkam, n. <>strī-liṅga. (Gram.) Feminine gender; பெண்பால். ஆண்பால் பெண்பால் அலிப்பால் என்னுமிம்மூன்றும் புல்லிங்கம், திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம் எனவாம் (பி. வி. 44). |
திரு | tiru, n. prob. šrī. [T. K. M. tiru.] 1. Lakshmi, the Goddess of Wealth and Prosperity; இலக்குமி. திருவுக்குந் திருவாகிய செல்வா (திவ். பெரியதி. 7, 7, 1). 2. Wealth, riches, affluence; 3. Distinction, eminence; 4. Beauty; 5. Brilliance; 6. Fertility; 7. Blessing, fortune; 8. Holiness; sacred-ness; 9. Good karma; 10. Astrologer; 11. Wedding badge; 12. An ancient head-ornament; 13. A deity supposed to be seated on women's breasts; |
திருக்கடன்மல்லை | tiru-k-kaṭaṉ-mallai, n. <>id. + கடல் +. Mahabalipuram; மாமல்லபுரம். (S. I. I. i, 68.) |
திருக்கடைக்காப்பு | tiru-k-kaṭai-k-kāppu, n. <>id.+. (šaiva.) Last benedictory stanza in a patikam of the sacred hymns containing the name of the author; தேவாரம் முதலியவற்றின் பதிகத்தில் பாடியோர் பெயரும் படிப்போர் பெறும் பலனுங் கூறும் இறுதிச்செய்யுள். திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி (பெரியபு. திருஞான. 80). |
திருக்கடைக்காப்புச்சாத்து - தல் | tiru-k-kaṭai-k-kāppu-c-cāttu-, v. intr. <>திருக்கடைக்காப்பு+. (šaiva.) To close a poem with tiru-k-kaṭai-k-kāppu; பதிகத்தினிறுதியில் திருக்கடைக்காப்புச் செய்யுள் கூறுதல். (பெரியபு. திருநான. 80.) |
திருக்கண் | tirukkaṇ, n. <>திரு+. 1. The divine eye, gracious look; அருட்பார்வை. 2. Halting place for the idol in a festive procession; |
திருக்கண்சாத்து - தல் | tirukkaṇ-cāttu-, v. tr. <>id.+. 1. To bestow a look of grace, as a deity; அருணோக்கம் வைத்தல். 2. To carry a deity to a halting place during procession; 3. To look into, inspect; |
திருக்கண்ணப்பதேவர்திருமறம் | tiru-k-kaṇṇappatēvar-tirumaṟam, n. <>id.+. A poem on Kaṇṇappa-nāyaṉār by Kallāṭa-tēva-nāyaṉār; கண்ணப்பநாயனார் மீது கல்லாடதேவ நாயனார் இயற்றிய நூல் (பதினொ.) |
திருக்கண்ணமுது | tiru-k-kaṇṇamutu, n. prob. id. + கன்னல் +. Sweet milk-pudding; பாயசம். Vaiṣṇ. |
திருக்கண்ணாமடை | tiru-k-kaṇṇā-maṭai, n. prob. id. + id. +. A sweet preparation with rice, ghee, sugar and plantain fruit; அரிசி சர்க்கரை வாழைப்பழங்களால் ஆக்கப்பட்ட ஒருவகை இனிய உணவு. திருக்கண்ணாமடைக்கு அரிசி இருநாழியும் (S. I. I. iii, 188). |
திருக்கண்மலர் | tiru-k-kaṇ-malar, n. <>id.+. Metallic eyes for an idol; சுவாமி திருமேனியில் சாத்தும் மலர்போன்ற கண்ணுரு. திருக்கண்மலர் இரண்டு (S. I. I. ii, 340). |
திருக்கம் | tirukkam, n. <>திருகு-. Crooked-ness; வஞ்சகம். சிந்தையிற் றிருக்க மின்மை. (கம்பரா. திருவடி. 76). |
திருக்கம்பி | tiru-k-kampi, n. <>திரு+. A kind of ear-ring; காதுக்கம்பி. திருக்கம்பியொன்று பொன் முக்காலேமஞ்சாடியுங் குன்றி (S. I. I. ii, 157). |
திருக்கரணம் | tiru-k-karaṇam, n. Snake; பாம்பு. (யாழ். அக.) |
திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி | tirukkaruvai-p-patiṟṟu-p-pattantāti, n. <>திரு+. Antāti poem in 100 stanzas in ten different metres, each ten being in one metre, on the šiva shrine of Karivalam-vanta-nallūr by Ativīra-rāma-pāṇṭiyaṉ; அதிவீரராம பாண்டியனால் கரிவலம் வந்த நல்லூர்ச் சிவபிரான்மேல் பாடப்பட்ட பதிற்றுப்பத்தந்தாதி நூல். |