Word |
English & Tamil Meaning |
---|---|
திருக்கு 1 | tirukku, n. <>id. 1. Twist; முறுக்கு. 2. Bend, curve, as of a fort; 3. Tiny screw in jewels; 4. A garment; 5. Perverseness; crookedness of mind; 6. Fraud, deceit; |
திருக்கு 2 | tirukku, n. <>drk nom. sing. of drs. 1. Eye; கண். (சூடா.) 2. (Phil.) Seer, perceiving agent; |
திருக்குக்காட்டாளி | tirukku-k-kāṭṭāḷi, n. <>திருக்கு1 +. Cheat, deceiver; வஞ்சகன். (w.) |
திருக்குகம் | tirukkukam, n. (அக. நி.) 1. Courtyard; முற்றம். 2. Saree; |
திருக்குகை | tiru-k-kukai, n. <>திரு +. Monastery; துறவிகள்வாழிடம். (I. M. P. Tj. 1083.) |
திருக்குடந்தை | tiru-k-kuṭantai, n. <>id. +. Kumbakonam; கும்பகோணம். திருக்குடந்தை யேரார்கோலந் திகழக்கிடந்தாய் (திவ். திருவாய். 5, 8, 1). |
திருக்குதம்பை | tiru-k-kutampai, n. <>id. +. A kind of ear-rings; காதணிவகை. (S. I. I. ii, 156.) |
திருக்குருகூர் | tiru-k-kurukūr, n. <>id. +. See திருக்குருகை. திருக்குருகூர்தனுள் நின்ற ஆதிப்பிரான். (திவ். திருவாய். 4, 10,1). . |
திருக்குருகை | tiru-k-kurukai, n. <>id. +. The birth-place of Saint Caṭakōpar }, now called āḻvār-tiru-nakari; சடகோபர் அவதாரஸ்தலமான ஆழ்வார்திருநகரி. |
திருக்குருகைப்பிரான்பிள்ளான் | tiru-k-kurukai-p-pirāṉ, n. <>திருக்குருகை+. A disciple of Rāmānujācārya and the author of āṟāyirappaṭi, the first commentary on Tiruvāymoḻi; இராமாநுஜாசாரியரின் சிஷ்யருள் ஒருவரும் திருவாய் மொழியின் முதல்வியாக்கியானமாகிய ஆறாயிரப்படி இயற்றியவருமான ஆசிரியர். (உபதேசரத். 41.) |
திருக்குருகைப்பெருமாட்கவிராயர் | tiru-k-kurukāi-p-perumāṭ-kavirāyar, n. <>id. +. A native of āḻvār-tiru-nakari and the author of Māṟaṉ-alaṅkāram, Māṟaṉ-akapporuḷ, Tiru-k-kurukāmāṉmiyam and other works, 16th c.; மாறனலங்காரம், மாறனகப்பொருள், திருக்குருகாமான் மியம் முதலிய நூல்களியற்றியவரும் 16 ம் நூற்றாண்டினரும் ஆழ்வார்திருநகரியூரினருமாகிய ஆசிரியர். |
திருக்குவலிப்பன் | tirukku-valippaṉ, n. <>திருகு- +. A kind of cattle disease; மாட்டு நோய்வகை. (மாட்டுவா.147.) |
திருக்குளம் | tiru-k-kuḷam, n. <>திரு +. Sacred tank of a temple; கோயிலைச்சார்ந்த தடாகம். Colloq. |
திருக்குற்றாலத்தலபுராணம் | tiru-k-kuṟ-ṟāla-t-tala-purāṇam, n. <>திருக்குற்றாலம்+. A Purāṇa on the šiva shrine at Kuṟṟālam by Tirikūṭarācappa-kavirāyar, 18th c.; 18 ம் நூற்றாண்டில் திரிகூடராசப்பகவிராயர் இயற்றியதும் குற்றாலத்தலமான்மியங் கூறுவதுமான நூல். |
திருக்குற்றாலம் | tiru-k-kuṟṟālam, n. <>திரு +. A šiva shrine in the Tinnevelly District; திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். |
திருக்குறணுண்பொருண்மாலை | tiru-k-kuṟaṇuṇporuṇ-mālai, n. <>திருக்குறள்+நுண்மை+பொருள்+. Critical notes on Parimēl-aḻakar's commentary on Tiru-k-kuṟaḷ by Tiru-mēṉi Irattiṉa-kavirāyar of āḻvār-tiru-nakari; திருக்குறட் பரிமேலழகருரைக்கு ஆழ்வார் திருநகரித் திருமேனி இரத்தினகவிராயர் எழுதிய குறிப்புரை. |
திருக்குறள் | tiru-k-kuṟal, n. <>திரு +. The sacred Kuṟal, a classic work treating of Virtue, Wealth and Love in 133 chapters of ten distichs each, by Tiru-vaḷḷuvar, one of patiṉeṇ-kīḻkkaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றும் அதிகாரத்துக்குப் பத்துக்குறள் கொண்ட 133 அதிகாரங்களில் அறம் பொருளின்பங்களைப்பற்றிக் கூறுவதும் திருவள்ளுவர் இயற்றியதுமான நூல். |
திருக்குறிப்பு | tiru-k-kuṟippu, n. <>id. +. Will, as of God or a great person; திருவுள்ளக் கருத்து. திருக்குறிப்பன்னதாயிற் செப்புவல் (சீவக.1853). |
திருக்குறிப்புத்தொண்டநாயனார் | tiru-k-kuṟippu-t-toṇṭa-nāyaṉār, n. <>திருக்குறிப்பு+. A canonized šaiva saint, one of 63; நாயான்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
திருக்குறுந்தாண்டகம் | tiru-k-kuṟu-n-tāṇṭakam, n. <>திரு +. 1. A poem in Nālāyira-p-pirapantam by Tirumaṅkai-y-āḻvār; திருமங்கையாழ்வார் இயற்றியதும் நாலாயிரப்பிரபந்தத்தில் அடங்கியதுமான பிரபந்தம். 2. Tēvāram decads in tāṇṭakam metre of six cīrs; |
திருக்கூட்டம் | tiru-k-kūṭṭam, n. <>id. +. Fraternity of devotees; பத்தர்குழாம். நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் பெரும்பேறு (காஞ்சிப்பு. கடவு.16). |
திருக்கூத்து | tiru-k-kūttu, n. <>id. +. 1. Sacred dance of šiva; சிவபிரானது நடனம். திருக்கூத்தை மேவின இறைவனுக்கு (பு. வெ. 9, 48, உரை). 2. Divine sport; |