Word |
English & Tamil Meaning |
---|---|
திருக்கருவைக்கலித்துறையந்தாதி | tirukkaruvai-k-kalittuṟai-y-antāti, n. <>id.+. Antāti poem consisting of 100 kalittuṟai stanzas on the šiva shrine of Karivalam-vanta-nallūr by Ativīra-rāma-pāṇṭiyaṉ; அதிவீரராம பாண்டியனால் கரிவலம் வந்தநல்லூர்ச் சிவபிரான்மேல் நூறு கலித்துறையிற் பாடப்பட்ட அந்தாரி நூல். |
திருக்கருவைவெண்பாவந்தாதி | tiru-k-karuvai-veṇpā-v-antāti, n. <>id. +. Antāti poem of 100 stanzas in veṇpā metre on the šiva shrine of Karivalam-vanda-nallūr by Ativīra-rāma-pāṇṭiyan; அதிவீரராம பாண்டியனால் கரிவலம் வந்த நல்லூர்ச் சிவபிரான்மேல் நூறு வெண்பாவிற் பாடப்பட்ட அந்தாதி நூல். |
திருக்கலசமுடி - த்தல் | tiru-k-kalaca-muṭi-, v. tr. <>id. +. To consecrate a newly-built temple; கும்பாபிசேகஞ் செய்தல். பணிசெய்விச்சு திருக்கலச முடிச்சருளிய (T. A. S. i. 290). |
திருக்கலியாணம் | tiru-k-kaliyāṇam, n. <>id. +. Marriage festival of a god and a goddess in a temple; கோயிற்றிருமணவிழா. |
திருக்கள்ளி | tiru-k-kaḷḷi, n. <>திருகு- + . See திருகுகள்ளி. . |
திருக்களிற்றுப்படி | tiru-k-kaḷiṟṟu-p-paṭi, n. <>திரு+களிறு+படி. Door-step with sculptured elephants at the Naṭarāja shrine of Chidambaram; சிதம்பரம் கனகசபையில் யானையுருவமைந்த படி.சென்ற தாழ்ந்தெழுந்தான் றிருக்களிற்றுப்படி மருங்கு (பெரியபு. தடுத்தாட்.105). |
திருக்களிற்றுப்படியார் | tiru-k-kaḷiṟṟu-p-paṭiyār, n. <>id. +. A šaiva Siddhanta treatise by Tirukkaṭavūr Uyyavanta-tēva-nāyaṉār, traditionally believed to have been placed on the tiru-k-kaḷiṟṟu-p-paṭi of Chidambaram shrine by the author and returned to him by the sculptured elephants, one of திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் இயற்றியதும் திருக்களிற்றுப்படியில் வைக்கப்பற்று அக்களிற்றால் எடுத்துக் கொடுக்கப்பட்டதும் மெய்கண்ட சாத்திரம் பதினான்கனுள் ஒன்றுமாகிய சைவசமய நூல். |
திருக்கற்றளி | tiru-k-kaṟṟaḷi, n. <>id. + கல் + தளி. Stone temple; கருங்கல்லால் அமைக்கப்பட்ட கோயில். திருக்கற்றளி தேவர்க்கு (S. I. I. i, 113). |
திருக்காட்சி | tiru-k-kāṭci, n. <>id. +. Divine meditation; தெய்வத்தியானம். (w.) |
திருக்காப்பிடு - தல் | tiru-k-kāppiṭu-, v. tr. <>திருக்காப்பு +. To close the door of a temple; கோயிற்கதவு மூடுதல். |
திருக்காப்பு | tiru-k-kāppu, n. <>திரு+. 1. Divine protection; தெய்வக்காவல். உன் சேவடி செவ்வித் திருக்காப்பு (திவ். பெரியாழ். திருப்பல்). 2. Ceremonies performed in the evening for protecting a child from the evil eye; 3. Door of a temple; 4. Tying of the sacred hymnal work with a string; |
திருக்காப்புச்சாத்து - தல் | tiru-k-kāppu-c-cāttu-, v. tr. <>திருக்காப்பு +. See திருக்காப்பிடு-. . |
திருக்காப்புச்சேர்த்து - தல் | tiru-k-kāppu-c-cērttu-, v. tr. <>id.+. See திருக்காப்பிடு-. . |
திருக்காப்புநீக்கு - தல் | tiru-k-kāppu-nīkku-, v. tr. <>id. +. To open the door of a temple; கோயிற்கதவைத் திறத்தல். (திவ். திருப்பா. 18, 172, அரும்.) |
திருக்கார்த்திகை | tiru-k-kārttikai, n. <>திரு +. A festival celebrated in the month of Kārttikai on the day when the moon is in conjunction with Pleiades; கார்த்திகைமாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் விளகேற்றிக் கொண்டாடுந் திருவிழா. |
திருக்காரோணம் | tiru-k-kārōṇam, n .<>id. + kāyārōhaṇa. A šiva shrine at Negapatam; நாகபட்டினத்துச் சிவதலம். |
திருக்காவேரி | tiri-k-kāvēri, n. <>id. +. A vessel used for keeping water for worship; பூசைவட்டிலில் தீர்த்தஞ்சேர்த்தற்குரிய செம்பு. Vaiṣṇ. |
திருக்காளத்திப்புராணம் | tiru-k-kāḷatti-p-purāṇam, n. <>id. +. A Purāṇa in Tamil on the šiva shrine at šri Kālahasti by āṉanta-k-kūttar, 16th c.; ஸ்ரீ காளஹஸ்தித் தலத்தைப்பற்றி 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தக்கூத்தர் பாடிய தமிழ்ப்புராணம். |
திருக்கானப்பேர் | tiru-k-kāṉappēr, n. <>id. +. Kāḷaiyār-kōyil, a šiva shrine in Ramnad District; இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள காளையார்கோயில் என்ற சிவதலம். (தேவா.) |
திருக்கிடு - தல் | tirukkiṭu-, v. tr. <>திருகு-+. To twist, as a long rope; நீளமுறுக்கிடுதல். இருடிருக்கிட்டு (சீவக.164). |