Word |
English & Tamil Meaning |
---|---|
திருக்கூவப்புராணம் | tiru-k-kūva-p-purāṇam, n. <>id. +. A Purāṇa on Tiruk-kūam by Civappirakāca-muṉivar; சிவப்பிரகாச முனிவர் இயற்றியதும் திருக்கூவத்தலமான்மியங் கூறுவதுமான புராணம். |
திருக்கை | tirukkai, n. 1. Ray-fish, Trygon seption; கடல்மீன்வகை. 2. Electrical ray, reddish brown, attaining 18 in. in length, Nareinetimilei; |
திருக்கைக்காறை | tiru-k-kai-k-kāṟai, n. <>திரு+கை +. A kind of armlet worn on idols; கடவுளர்க்குச் சாத்தும் கையாபரணவகை. (S. I.I. ii, 144.) |
திருக்கைக்கோட்டி | tiru-k-kai-k-kōṭṭi, n. <>id. +. 1. Sacred hall in temples where the sacred hymns are sung; திருமுறை யோதுதற்குரிய கோயில்மண்டபம். (I. M. P. Tj. 855.) 2. See திருக்கைக்கோட்டியோதுவார். (Insc.) |
திருக்கைக்கோட்டியோதுவார் | tiru-k-kai-k-kōṭṭi-y-ōtuvār, n. <>id. +. Reciters of the sacred hymns in a temple; கோயிலில் திருமுறைப்பாசுரம் ஓதுவோர். (I. M. P. Tj. 1113.) |
திருக்கைச்சிறப்பு | tiru-k-kai-c-ciṟappu, n. <>id. +. Signet-ring given as badge of the title ēṉāti; ஏனாதிப்பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம். அருளொடுந் திருக்கைச் சிறப்புமிட்டுப் போவென்று விடைகொடுப்ப (திருவாலவா. 39, 4). |
திருக்கைத்தலம் | tiru-k-kai-t-talam, n. <>id. +. The procession in which an idol is carried on hand; கைத்தலமூலம் கடவுள் திருமேனியை எழுந்தருளப்பண்ணுகை. Loc. |
திருக்கைத்தோல் | tirukkai-t-tōl, n. <>திருக்கை +. Ray skin, used in polishing; மெருகிடுதற்குதவும் திருக்கைமீனின் தோலு. (w.) |
திருக்கைபுலியன் | tirukkai-puliyaṉ, n. <>id. +. A kind of fish; மீன்வகை. திருக்கைபுலியன் திருக்கையாரல் (பறாளை. பள்ளு.16). |
திருக்கையாரல் | tirukkai-y-āral, n. <>id. +. A kind of fish; மீன்வகை. திருக்கைபுலியன் திருக்கையாரல். (பறாளை.பள்ளு.16). |
திருக்கைலாயஞானவுலா | tiru-k-kailāya-āṉa-v-ulā, n. <>திரு +. A poem in patiṉorān-tirumuṟai by Cēramān-perumāṇāyaṉār; சேரமான் பெருமாணாயனார் இயற்றியதும் பதினொராந்திரு முறையின் பகுதியுமான உலா. |
திருக்கைவழக்கம் | tirukkai-vaḻakkam, n. <>id. +. 1. Distribution to worshippers of offerings in a temple on special occasions; கோயிலில் விசேடகாலங்களிலே தெய்வப் பிரசாதம் வழங்குகை. (Insc.) 2. A poem on the liberality of the Vēḷāḷa chiefs; |
திருக்கைவால் | tirukkai-vāl, n. <>திருக்கை +. The tail of ray-fish, used as whip; திருக்கை மீனின் வாலாலாகிய சவுக்கு. (w.) |
திருக்கைவெட்டியான் | tirukkai-veṭṭi-yāṉ, n. <>id. +. A kind of fish; மீன்வகை. சீருந்திருக்கைவெட்டியான் (பராளை. பள்ளு.16). |
திருக்கொட்டாரம் | tiru-k-koṭṭāram, n. <>திரு +. Store-room; store-house in a temple; கோயிலுக்கிராணம். (கோயிலொ. 62.) |
திருக்கோட்டியூர்நம்பி | tiru-k-kōṭṭiyūr, n. <>id. +. The guru of Rāmānujā-cārya, native of Tirukkōṭṭiyūr in Ramnad District; இராமநாதபுரம் ஜில்லாவில் திருக்கோட்டி யூர்த்தலத்தினரும் இராமாநுஜாசாரியரின் குருவுமான வைணவாசாரியர். |
திருக்கோணமரம் | tiru-k-kōṇa-maram, n. <>id. +. Trincomali wood, l. tr., Berryaammonilla; மரவகை. |
திருக்கோணமலை | tiru-k-kōṇa-malai, n. <>id. +. See திரிகோணமலை. . |
திருக்கோணாமரம் | tiri-k-kōṇa-maram, n. See திரிக்கோணமரம். . |
திருக்கோலம் | tiru-k-kōlam, n. <>திரு +. 1. Decoration of the idol; கடவுட்குச் செய்யும் அலங்காரம். 2. Posture of the idol, especially in Viṣṇu temples, of three varieties, viz., ninṟa-tiru-k-kōlam, kiṭanta-tiru-k-kōlam, irunta-tiru-k-kōlam; |
திருக்கோவை | tiru-k-kōvai, n. <>id. +. Row of people chanting the sacred hymns in presence of an idol; சுவாமிக்குமுன் வரிசையாக நின்று வேதம் பிரபந்தம் முதலியன ஓதுங் கோஷ்டி. திருக்கோவைக்குப்பின்னே கைகட்டிக்கொண்டு பின்னடி ஸேவிக்கிறதும் (கோயிலொ. 88). |
திருக்கோவையார் | tiru-k-kōvaiyār, n. <>id. +. See திருச்சிற்றம்பலக்கோவை. . |
திருகணி | tirukaṇi, n. <>திருகு-+. (J.) 1. [K. tirugaṇi] See திருகாணி. 2. [M. tirukaṇi.] Spiral formation of a conch; |
திருகணை | tirukaṇai, n. <>id. +. Plaited ring of straw or rattan for setting a pot on; புரிமணை. (J.) |