Word |
English & Tamil Meaning |
---|---|
திருகுமுகம் | tiruku-mukam, n. <>திருகு-+. Indifference, as indicated by averted face; பராமுகம். (w.) |
திருகுமூலம் | tiruku-mūlam, n. of. திரகமூலம். Balloon vine. See முடக்கொற்றான். |
திருகுவட்டம் | tiruku-vaṭṭam, n. <>திருகு-+. Small wedge-shaped reel with a handle for winding yarn; நூல்சுற்றுங் கருவிவகை. (w.) |
திருகுவில்லை | tiruku-villai, n. <>id. +. See திருகுப்பூ. Colloq. . |
திருகுளி | tirukuḷi, n. <>id. + உளி. 1. Carpenter's plane; உளிவகை. 2. Turnscrew, screwdriver; 3. See திருகூசி, 1. (C. G.) |
திருகூசி | tirukūci, n. <>id. +. (w.) 1. Drill to bore holes in an ola book; ஓலையில் துளையிடுங் கருவிவகை. 2. Cross-beam in a well-sweep; |
திருச்சந்தவிருத்தம் | tiru-c-canta-virut-tam, n. <>திரு +. A poem in Nālāyira-p-pira-pantam by Tirumaḻicai-y-āḻvār; திருமழிசையாழ்வார் இயற்றியதும் நாலாயிரப்பிரபந்தத்துள் அடங்கியதுமான நூல். |
திருச்சபை | tiru-c-capai, n. <>id. +. 1. The sacred shrine of Naṭarāja, as at Chidambaram; நடராஜசபை. 2. Church, assemblage or congregation of Christians, select society of believers; |
திருச்சாந்தாடல் | tiru-c-cāntāṭal, n. <>id. +. Besmearing an idol with sandal paste; கோயிலில் தெய்வத்திற்கிடும் சந்தனக்காப்பு. (I. M. P. Cg. 1000.) |
திருச்சாயல் | tīru-c-cāyal, n. <>id. +. Divine image, the likeness of God; தெய்வப் படிவம். Chr. |
திருச்சித்தம் | tiru-c-cittam, n. <>id. +. Divine will, will of great men; திருவுள்ளம். தேவரீர் திருச்சித்தப்படியே நடக்கிறேன். |
திருச்சியம் | tirucciyam, n. <>dršya. See திருசியம். (சி. சி. 3, 3, ஞானப்.) . |
திருச்சிராப்பள்ளி | tiru-c-cirā-p-paḷḷi, n. Trichinopoly. See திருச்சிராப்பள்ளி. . |
திருச்சிற்றம்பலக்கோவை | tiru-c-ciṟ-ṟampala-k-kōvai, n. <>திரு +. A kōvai poem on Chidambaram by Māṇikkavācakar; மாணிக்கவாசகர் இயற்றியதும் திருச்சிற்றம்பலத்தைப்பற்றியதுமான அகப்பொருட்கோவை. |
திருச்சிற்றம்பலம் | tiru-c-ciṟṟampalam, n. <>id. +. 1. The sacred shrine of Naṭarāja at Chidambaram; சிதம்பரத்திலுள்ள சிற்சபை. 2. An invocatory expression of šaivaites used when reciting Tēvāram hymns or writing letter, document, etc.; |
திருச்சிற்று | tiru-c-ciṟṟu, n. <>id. + சிற்றாள். Sweeper-woman of a temple; கோயில் பெருக்குபவள். Loc. |
திருச்சின்னம் | tiru-c-ciṉṉam, n. <>id. +. A kind of trumpet, usually blown in pairs before a deity, king, etc.; தெய்வம் அரசன் முதலானாரின் முன்பு சேவிக்கும் ஊதுகுழலுள்ள விருதுவகை. |
திருச்சீரலைவாய் | tiru-c-cīr-alaivāy, n. <>id. +. See திருச்செந்தூர். (திருமுரு.125.) . |
திருச்சுற்றாலயம் | tiru-c-cuṟṟālayam, n. <>id. + சுற்று +. Temples of minor deities in temple enclosure; பிராகாரத்திலுள்ள பரிவாரத் தேவைகளினாலயம். (I. M. P. Tj. 450.) |
திருச்சுற்றாலை | tiru-c-cuṟṟālai, n. <>id. +. 1. See திருச்சுற்றாலயம். மஹாதேவர் ஸ்ரீகோயிலுக்குந் திருச்சுற்றாலைக்கும் (S. I. I. iii, 23). . See திருச்சுற்றுமாளிகை. |
திருச்சுற்று | tiru-c-cuṟṟu, n. <>id. +. Temple enclosure; பிரகாரம். சேனைமுதலியார் திருச்சுற்றான ராஜமகேந்திரன் திருவீதியில் (கோயிலொ.13). |
திருச்சுற்றுமண்டபம் | tiru-c-cuṟṟu-maṇ-ṭapam, n. <>id. +. See திருச்சுற்றுமாளிகை.திருச்சுற்றுமண்டபத்துக் கோயிற் கருமமாராயாவிருந்து (S. I. I. iii, 137). . |
திருச்சுற்றுமாளிகை | tiru-c-cuṟṟu-mā-ḷikai, n. <>id. +. Porches surrounding the inner shrine of a temple; maṇṭpam enclosing a temple; திருமாளிகைப்பத்தி. ராஜராஜதேவர் திருவாய்மொழிந்தருள இத்திருச்சுற்றுமாளிகை எடுப்பித்தான் (S. I. I. ii, 139). |
திருச்சூரணபரிபாலனம் | tiru-c-curaṇa-paripālaṉam, n. <>திருச்சூரணம்+. Ceremony of preparing and distributting saffron paste before removing a dead body from a house; பிணத்தை வீட்டினின்று வெளியேற்றுவதற்குமுன் ஸ்ரீசூர்ணம் இடித்துப் பரிமாறுஞ் சடங்கு. Vaiṣṇ. |
திருச்சூரணம் | tiru-c-cūraṇam, n. <>திரு+cūrṇa. Saffron paste used for the central mark on the forehead; வைணவர்கள் நெற்றியிலணியும் ஸ்ரீசூர்ணம். Vaiṣṇ. |
திருச்சூலக்கல் | tiru-c-cūla-k-kal, n. <>திருசூலம்+. See திருசூலக்கல். நான்கெல்லையும் திருச்சூலக்கல்லு நாட்டிக்கொள்க. (S. I. I. ii, 247). . |
திருச்செந்தில் | tiru-c-centil, n. <>திரு +. See திருச்செந்தூர். . |