Word |
English & Tamil Meaning |
---|---|
திரைவிழு - தல் | tirai-viḻu-, v. intr. திரை4 +. To become wrinkled, as skin by age; தோல் சுருக்குவிழுதல். |
திரைவு | tiraivu, n. <>திரை1-. (w.) 1. Wrinkling, as by age; தோல் சுருங்குகை. 2. Rolling, as of waves; |
திரோகிதம் | tirōkitam, n. <>tirōhita. 1. That which is obscured, hidden; மறைக்கப்பட்டது. (சி. சி. 2, 91, சிவாக்.) 2. Obscuration; |
திரோதகம் | tirōtakam, n. <>tirōdhaka. 1. That which causes obscurity; மறைத்தலைச்செய்வது. அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துக் கொடுநிற்றலான் (சி. போ. பா.4, 2). |
திரோதசத்தி | tirōta-catti, n. <>tirōdha+. See திரோதானசத்தி. நவ்வாகிய திரோதசத்தியும் (சிவப்பிர. உண்மை. 42, உரை). . |
திரோதம் | tirōtam, n. <>tirōdha. 1. Concealment, obscuration; மறைக்கை. இருட்டிரோதம் புரிந்தாங்கு (திருப்போ. சந். மாலை, 69). 2. See திரோதானசத்தி. (சிவப்பிர. உண்மை. 42.) |
திரோதயம் | tirōtayam, n. See திரோதம். (சங். அக.) . |
திரோதாயகம் | tirōtāyakam, n. <>tirō-dhāyaka. That which obscures, conceals; மறைப்பது. பத்தசேதனருடைய ஞானானந்தங்களுக்குத் திரோதாயகமாய் (அஷ்டாதச. தத்துவத். 9). |
திரோதாயி | tirōtāyi, n. <>tirōdhāyin. See திரோதானசத்தி. திரோதாயி மன்னி (சி. சி. 2, 88). . |
திரோதானகரி | tirōtāṉakari, n. <>tirō-dhāṉa-karī. See திரோதானசத்தி. தூயவன் றனதோர் சத்தி திரோதான கரிய தென்று (சி. சி. 2, 87). . |
திரோதானசத்தி | tirōtāṉa-catti, n. <>tirō-dhāna-. (šaiva.) šiva's energy which provides worldly experiences for the souls, hiding spiritual truths from view, one of paca-catti, q. v.; சிவபெருமானுடைய பஞ்சசத்திகளுள் ஆன்மாக்களுக்கு உலகானுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் ஒரு சத்தி. (தத்துவப். 37, உரை.) |
திரோதானம் | tirōtāṉam, n. <>tirōdhāna. 1. See திரோதம். . 2. Disappearance; 3. See திரோபவம். (சி. போ. 2, 2, பக். 118, சிற்.) 4. A hell; |
திரோதி - த்தல் | tirōti-, v. tr. <>tirō-dha. See திரோபவி-. சென்மித் துழலத் திரோ தித்து (குமர. பிர. கந்தர். 16). . |
திரோதை | tirōtai, n. <>id. See திரோதானசத்தி. அம்மை திரோதை யகலுநாள் (தாயு. எந்நாட். தத்துவ. 24). . |
திரோபவம் | tirōpavam, n. <>tirō-bhava. 1. (šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out, one of paca-kirut-tiyam, q. v.; பஞ்சகிருத்தியங்களுளொன்றாய் ஆன்மா தன்கன்மம் முடியும்வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல். 2. Vanishing, dis-appearance; |
திரோபவி - த்தல் | tirōpavi-, 11 v. tr. <>id. 1. To cover, conceal, obscure; மறைத்தல். 2. (šaiva.) To darken the understanding, hide spiritual truths from view; |
திரோபாவம் | tirōpāvam, n. <>tirōbhāva. See திரோபவம். (சி. சி. 1, 37, ஞானப்.) . |
திரௌபதர் | tiraupatar, n. <>draupadēya. See திரௌபதீயர். துரக்கும் வெம்பரித் திரௌபத னரவரும் (பாரத. படையெழுச். 5). . |
திரௌபதி | tiraupati, n. <>Draupadī. The wife of the five Pāṇdava brothers, as daughter of Drupada, king of Pācāla country; [துருபதனுடைய மகள்] பஞ்சபாண்டவர் மனைவி. திரௌபதி மாலையிட்ட சருக்கம். (பாரத.) |
திரௌபதீயர் | tiraupatīyar, n. <>draupa-dēya. Sons of Draupadī; திரௌபதியின் புதல்வர். பஞ்சத் திரௌபதீயரும் (பாரத. பதினெட். 218). |
தில் | til, part. Expletive signifying a desire, time or a suggestion; விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓரிடைச்சொல். (தொல். சொல். 255.) |
தில்பசந்து | til-pacantu, n. <>U. dilpasand. A kind of superior mango; ஒருயர்ந்த ஒட்டு மாம்பழச்சாதி. (G. Sm. D. I, i, 235.) |
தில்ல | tilla, part. See தில். தீயேன் றில்ல மலைகிழவோற்கே (ஐங்குறு. 204). . |
தில்லகம் | tillakam, n. <>tilvaka. Wood-apple. See விளா. (தைலவ. தைல. 74.) . |
தில்லம் | tillam, n. Forest, jungle; காடு. (சூடா.) தில்லமும் பலதேசமுங் கடந்து (சேதுபு. மங்கல. 73). |
தில்லானா | tillāṉā, n. [K. Tu. tillāṇa.] A kind of musical composition ending with the expression tillā or tillāṉā; தில்லா அல்லது தில்லானா என்று முடியும் இசைப்பாட்டுவகை. |