Word |
English & Tamil Meaning |
---|---|
திலகற்கம் | tila-kaṟkam, n. <>tila + kalka. See திலகடம். (யாழ். அக.) . |
திலகன் | tilakaṉ, n. <>tilaka. Beloved or excellent person; சிறந்தவன். திலகனைத் திருந்தவைத்தாள் (சீவக. 305). |
திலகாதுகன் | tila-kātukaṉ, n. <>tila-ghātuka. Oilmonger; எண்ணெய்வாணியன். (சங். அக.) |
திலகாலகரோகம் | tila-kālaka-rōkam, n. <>id. + kālaka +. A kind of small eruption in the penis; ஆண்குறியில் தோன்றும் புண்வகை. (சீவரட். 317.) |
திலகை | tilakai, n. <>tilakā. Musk, black like seasme, one of five kinds of kastūri, q. v.; எள்ளுப்போற் கருநிறமுள்ள கஸ்தூரிவகை. (பதார்த்த.1081.) |
திலச்சாரம் | tila-c-cāram, n. <>tila + kṣāra. Salt extracted from sesame seed; எள்ளிலெடுக்கும் இலவணம். (w.) |
திலச்செக்கு | tila-c-cekku, n. <>id. +. A hell believed to crush lives like an oil-mill; உயிர்களை எள்ளையிட்டு ஆட்டுஞ் செக்குப்போலவருத்தம் ஒருவகை நரகம். (சிவதரு. சுவர்க்க. 122.) |
திலதக்கலித்துறை | tilata-k-kalittuṟai, n. <>திலதம் +. A kind of kaṭṭaḷai-k-kalittuṟai verse; கட்டளைக்கலித்துறைவகை. (தஞ்சைவா. 1, உரை.) |
திலதண்டுலம் | tila-taṇṭulam, n. <>tila +. 1. Mixture of sesame and rice; எள்ளுடன் கலந்த அரிசி. 2. A mode of sexual embrace, one of eṇ-vakai-y-āliṇkaṉam, q. v.; |
திலதம் | tilatam, n. <>tilaka. See திலகம். தெரிமுத்தஞ் சேர்ந்த திலதம் (கலித். 92). . |
திலதர்ப்பணம் | tila-tarppaṇam, n. <>tila +. Libations of sesame and water offered to the manes; பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் கலந்திறைக்கும் நீர்க்கடன். |
திலதவசீகரம் | tilata-vacīkaram, n. <>திலகம்+. Power of fascinating persons by wearing a magic tilka on one's forehead; மந்திர சக்தியையுடைய திலகத்தால் விரும்பியவர்களை வசப்படுத்திக்கொள்ளுகை. திலதவசீகரஞ் செய்வேன் (குற்றா. குற. 116, 2). |
திலதானம் | tila-tāṉam, n. <>tila + dāna. Gift of sesame seeds to propitiate Saturn; முக்கியமாகச் சனிப்பிரீதியின் பொருட்டுச்செய்யும் எள்ளுத்தானம். |
திலதேனு | tila-tēṉu, n. <>id. + dhēnu. A cow-like figure of sesame, made for purposes of gift; தானத்தின்பொருட்டு எள்ளினாற் செய்யப்படும் பசு. (யாழ். அக.) |
திலதைலம் | tila-tailam, n. <>id. +. Gingili oil; நல்லெண்ணெய். |
திலப்பொறி | tila-p-poṟi, n. <>id. +. Oil-press; எள்ளிட்டாட்டும் செக்கு. திலப்பொறியி லிட்டனர் திரிப்பவும் (யசோதர. 5, 33). |
திலபருணி | tila-paruṇi, n. <>tila-parṇī. See திலபருணிகை. (மலை.) . |
திலபருணிகை | tila-paruṇikai, n. <>tila-parṇikā. Sandal wood. See சந்தனம். (மலை.) . |
திலபவம் | tila-pavam, n. <>tila + bhava. See திலரசம். (தைலவ. தைல. 25.) . |
திலம் 1 | tilam, n. <>tila. Seasame, s. sh., Sesamum indicum; எள்ளு. (பிங்.) |
திலம் 2 | tilam, n. prob. tilaka. Barbadoes pride; மஞ்சாடி. (பிங்.) |
திலரசம் | tila-racam, n. <>tila +. Gingili oil; நல்லெண்ணெய். (தைலவ. தைல. 41.) |
திலவகம் | tilavakam, n. <>tilvaka. Wood-apple. See விளா. (சங். அக.) . |
திலாசா | tilācā, n. <>U. dilāsā. Encouragement; உற்சாகம். திலாசாப் பண்ணிவருகிறேன். |
திலாட்சாரம் | tilāṭcāram, n. See திலச்சாரம். (w.) . |
திலு | tilu, n. prob. tri. Three, a slang term; மூன்றினைக் குறிக்க வழங்கும் குழூஉக்குறி. (யாழ். அக.) |
திலுப்புலு | tilu-p-pulu, n. <>திலு +. Thirty, a slang term; முப்பது என்றதனைக்குறிக்கும் குழூஉக்குறி. (J.) |
திலோத்தமை | tilōttamai, n. <>Tilōttamā. A celestial nymph; தெய்வமகளிருள் ஒருத்தி. செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல (கம்பரா. நிந்தனை. 2). |
திலோதகம் | tilōtakam, n. <>tila + udaka. See திலதர்ப்பணம். . |
திவ்விய | tivviya, adj. <>தீவிய. Sweet; இனிய. தேன்றரு மாரிபோன்று திவ்விய கிளவி தம்மால் (சீவக. 581). |
திவ்வியகந்தம் | tivviya-kantam, n. <>divya-gandha. Cloves; கிராம்பு. (யாழ். அக.) |
திவ்வியகவி | tivviya-kavi, n. <>divya +. A divinely inspired poet; தெய்வப்புலவன். திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார். |