Word |
English & Tamil Meaning |
---|---|
திவ்வியசட்சு | tivviya-caṭcu, n. <>id. +. See திவ்வியதிருஷ்டி, 2, 3. (w.) . |
திவ்வியத்தொனி | tivviya-t-toṉi, n. <>id. + dhvani. (Jaina.) Shouts of celestials in the presence of Arhat; தேவர்கள் அருகக்கடவுள் முன்பு செய்யும் ஆரவாரத்தொனி. (சீவக. 3013, உரை.) |
திவ்வியதிருஷ்டி | tivviya-tiruṣṭi, n. <>id. +. 1. Gracious look of a deity or guru by which sin is dispelled and grace conferred; தெய்வம் குரு முதலாயினாரின் அருள்நோக்கம். 2. Supernatural vision; spiritual insight; 3. Prophet, seer; |
திவ்வியதீர்த்தம் | tivviya-tīrttam, n. <>id. +. See திவ்வியஸ்நானம். முகில்வெங் கதி ரெறிக்குங் காலைப்பெய்யு நீராடல் ... திவ்விய தீர்த்தம் (கூர்மபு. உத்தர. 18, 4). . |
திவ்வியதேசம் | tivviya-tēcam, n. <>id. +. Viṣṇu shrines sung by āḻvars; ஆழ்வார்களாற் பாடப்பட்ட திருப்பதிகள். Vaiṣṇ. |
திவ்வியநாமசங்கீர்த்தனம் | tivviya-nāma-caṅkīrttaṉam, n. <>id. +. Praising and singing a god's name while dancing around a lamp placed in the middle of a hall; பாகவதர் பலர் விளக்கைச்சுற்றி நடனம் செய்து கடவுளின் திருநாமங்களைச் சொல்லிப் புகழ்ந்து பாடுகை. |
திவ்வியப்பிரபந்தம் | tivviya-p-pirapan-tam, n. <>id. +. Collection of 4000 stanzas composed by 12 Vaiṣṇava saints; ஆழ்வார் பன்னிருவரும் அருளிச்செய்ததும் நாலாயிரஞ் செய்யுள் கொண்டதுமான தொகுதி. |
திவ்வியபுதுமை | tivviya-putumai, n. <>id. +. A miracle; அற்புதம். (w.) |
திவ்வியபோதனை | tivviya-pōtaṉai, n. <>id. +. Sacred teaching; ஞானோபதேசம். (w.) |
திவ்வியம் | tivviyam, n. <>divya. 1. Divinity, anything celestial or god-like; தெய்வத்தன்மையுள்ளது. 2. That which is excellent, supreme; 3. A kind of sandal; |
திவ்வியமங்களமூர்த்தி | tivviya-maṅkaḷa-mūrtti, n. <>id. +. See திவ்வியமங்களவிக்கிரகம். . |
திவ்வியமங்களவிக்கிரகம் | tivviya-maṅ-kaḷa-vikkirakam, n. <>id. +. The image of a deity, used as a sacred object of worship; அர்ச்சைத்திருமேனி. Vaiṣṇ. |
திவ்வியமாக | tivviyam-āka, adv. <>id. +. Excellently; நன்றாக. திவ்வியமாகச் செய்தான். |
திவ்வியமுத்திரை | tivviya-muttirai, n. <>id. +. A finger-pose in which the ring-finger and the thumb are joined; கட்டைவிரலும் மோதிரவிரலுஞ்சேர்ந்த முத்திரை. (செந். x, 426.) |
திவ்வியரத்தினம் | tivviya-rattiṉam, n. <>id. +. Celestial gem, as cintāamaṇi; சிந்தாமணி முதலிய தெய்வமணி. (யாழ். அக.) |
திவ்வியலிங்கம் | tivviya-liṅkam, n. <>id. +. (šaiva.) The great pillar-like liṅga in cānti-kalai; சாந்திகலையில் தூணாகாரமாயுள்ள லிங்கம். (சதாசிவ.12.) |
திவ்வியவராடி | tivviya-varāṭi, n. <>id. +. (Mus.) A melody-type of the kuṟici class; குறிஞ்சிப்பண்வகை. (பிங்.) |
திவ்வியவருஷம் | tivviya-varuṣam, n. <>id. +. Year of the gods; தேவவருஷம். |
திவ்வியஸ்நானம் | tivviya-snāṉam, n. <>id. +. Bathing in the rain during sunshine, one of seven snāṉam, q. v.; ஸ்நானம் ஏழனுள் வெயிற்காயும்போது பெய்யும் மழையில் செய்யும் ஸ்நானம். (w.) |
திவ்வியாத்திரம் | tivviyāttiram, n. <>id. + astra. Divine weapons; தெய்வப்படைகள். திவ்வியாத்திரமோட்டியே (வரத. பாகவத. நாரசிங்க. 157). |
திவ்வியாதிவ்வியம் | tivviyātivviyam, n. <>id. + a-divya. That which partakers of both human and divine elements; தெய்வத்தன்மையும் மானுடத்தன்மையுஞ் சேர்ந்துள்ளது. (w.) |
திவ்வியாபரணம் | tivviyāparaṇam, n. <>id. + ābharaṇa. Superior ornaments worn by a sacred or royal personage; அரசர்முதலியோர் அணியும் சிறந்த அணிகலன். (w.) |
திவ்வியாஸ்திரம் | tivviyāstiram, n. See திவ்வியாத்திரம். . |
திவசம் | tivacam, n. <>divasa. 1. Day-time; பகல். (பிங்.) 2. Day; 3. Anniversary commemorative of a person's death; |
திவதாட்சி | tivatāṭci, n. See திவிதிராட்சம். Loc. . |
திவம் 1 | tivam, n. <>div. 1. Heaven; பரமபதம். திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி (திவ். திருவாய். 10, 3, 10). 2. Sky; |
திவம் 2 | tivam, n. <>divā. See திவா, 1. (சங். அக.) . |