Word |
English & Tamil Meaning |
---|---|
தில்லி 1 | tilli, n. See டில்லி. Colloq. . |
தில்லி 2 | tilli, n. A very small plot of land; மிகச்சிறிய நிலப்பகுதி. ஒரு தில்லிமட்டும் நீர்பாயவில்லை. Nā. |
தில்லியம் 1 | tilliyam, n. <>tilya. Gingili oil; நல்லெண்ணெய். (தைலவ. தைல.) |
தில்லியம் 2 | tilliyam, n. prob. தில்லம். Land newly brought under cultivation; புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். (பிங்.) |
தில்லியம்பில்லியம் | tilliyam-pilliyam, n. prob. redupl. of தில்லியம்1. See தில்லுமுல்லு. அவன் தில்லியம்பில்லியந் திரியாவரக்காரன். (பழ.) . |
தில்லுப்பில்லு | tilly-p-pillu, n. See தில்லுமுல்லு. Colloq. . |
தில்லும்பில்லும் | tillum-pillum, n. See தில்லுமுல்லு. தில்லும்பில்லுஞ் திருவாதிரை. (பழ.) . |
தில்லுமல்லு | tillu-mallu, n. See தில்லுமுல்லு. Colloq. . |
தில்லுமுல்லு | tillu-mullu, n. Deceit, trick, deceitful words, lies; பொய்புரட்டு. தில்லுமுல்லும்பேசி (இராமநா. ஆரணி. 8). |
தில்லெரி | tilleri, n. <>E. Artillery; ஆயுதசாலை. Loc. |
தில்லேலம் | tillēlam, n. A kind of song ending in tillēla; தில்லேல என்று முடியும் பாட்டு வகை. |
தில்லை 1 | tillai, n. 1. Blinding tree, s. tr., Excoecaria agallocha; மரவகை. தில்லையன்ன புல்லென் சடையோடு (புறநா. 252). 2. Mountain slender tiger's milk, s. tr., Excoecaria crenu-lata; 3. Town of Chidambaram; 4. See தில்லைநாயகம். Loc. |
தில்லை 2 | tillai, n. See தில். (தொல். சொல். 397, சேனா.) . |
தில்லைகட்டி | tillai-kaṭṭi, n. <>தில்லை1 +. A kind of campā paddy; ஒருவகைச் சம்பாநெல். Loc. |
தில்லைத்திருச்சித்திரகூடம் | tillai-t-tiru-c-cittira-kūṭam, n. <>id. +. The Viṣṇu shrine at Chidambaram; சிதம்பரத்திலுள்ள திருமால் கோயில். (திவ். பெரியதி. 3, 3, 1.) |
தில்லைநண்டு | tillai-naṇṭu, n. <>id. +. A black lobster, as found under the tillai tree; [தில்லைமரத்தடியிற் காணப்படுவது] ஒருவகைக் கரியநண்டு. Loc. |
தில்லைநாயகம் | tillai-nāyakam, n. <>id. +. A variety of campā paddy; ஒருவகைச் சம்பாநெல். Loc. |
தில்லைநாயகன் | tillai-nāyakaṉ, n. <>id. +. šiva, the Lord of Chidambaram; சிதம்பரத்துச் சிவபிரான். (w.) |
தில்லைநெல் | tillai-nel, n. <>id. +. See தில்லைநாயகம். Loc. . |
தில்லைமூவாயிரவர் | tillai-mū-v-āyiravar, n. <>id. +. See தில்லைவாழந்தணர். . |
தில்லையம்பலம் | tillai-y-ampalam, n. <>id. +. The shrine of Naṭarāja at Chidambaram; சிதம்பரத்திலுள்ள நடராசரது கனகசபை. தில்லையம்பலத்தே யாடுகின்ற சிலம்பாடல் (திருவாச. 11, 20). |
தில்லையெண்ணெய் | tillai-y-eṇṇey, n. <>id. +. Black oil from the green bark of the tillai tree; தில்லைமரப்பட்டையினின்று எடுக்கும் எண்ணெய். (w.) |
தில்லைவனம் | tillai-vaṉam, n. <>id. +. Chidambaram, as formerly a tillai grove; [தில்லைமரக்காடு] சிதம்பரம். தில்லைவனத் தண்டாதிப னாமமதே துணையா (கோயிற்பு. வியாக்கிர.10). |
தில்லைவாழந்தணர் | tillai-vāḻ-antaṇar, n. <>id. +. The class of officiating Brahmins at the Chidambaram temple, one class of tikai-y-aṭiyār, q. v.; தொகையடியார்களுள் ஒருசாராரான சிதம்பரதலத்திற்குரிய பிராமணர். தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன் (தேவா. 736, 1). |
திலகடம் | tila-kaṭam, n. <>tila-kaṭa. Sesame oil-cake; எள்ளுப்பிண்ணாக்கு. (யாழ். அக.) |
திலகம் | tilakam, n. <>tilaka. 1. Tilka, a small circular mark on forehead; நெற்றிப்பொட்டு. திலலந் தைஇய ... திருநுதல் (நற். 62). 2. That which is excellent, eminent; any cherished object; 3. Barbadoes pride; 4. See திலதக்கலித்துறை. (இலக். அக.) |
திலகரோகம் | tilaka-rōkam, n. <>id. +. Boil between the toes, red like tilakam; கால் விரற்சந்துகளில் உண்டாகும் திலகம் போன்ற சிவப்புக் கொப்புளம். (சீவரட். 312.) |
திலகவதியார் | tilakavatiyār, n. The sister of Tiru-nāvukkaracar; திருநாவுக்கரசரின் உடன்பிறந்தாள். (பெரியபு. திருநாவுக்.17.) |