Word |
English & Tamil Meaning |
---|---|
தீத்திறம் | tī-t-tiṟam, n. <> id.+. 1. Murder, heinous deed; கொலைமுதலிய தீச்செயல். தீத்திறம் புரிந்தோன் செய்துயர் நீங்க (சிலப். 15, 71). 2. Fire-sacrifice; |
தீத்தீண்டல் | tī-t-tīṇṭal, n. <> id. +. A marriage ceremony; விவாகச் சடங்குவகை. (w.) |
தீத்தெய்வம் | tī-t-teyvam, n. <> id.+. See தீக்கடவுள். (சூடா.) . |
தீத்தொழில் | tī-t-toḻil, n. <> id. +. 1. Evil deed, sinful deed; பாவச்செய்கை. தீத்தொழிலே கன்றி (நாலடி, 351). 2. Fire-sacrifice; |
தீத்தோபலம் | tīttōpalam, n. <> .dīptōpala. Sunstone; சூரியகாந்தக்கல். (யாழ். அக.) |
தீதாள் | tītāḷ, n. Thimble; அங்குஸ்தான். (J.) |
தீதி | tīti, n. <> dhīti. Thirst; தாகம். (யாழ். அக.) |
தீது | tītu, n. <> தீமை. 1. Evil, vice; தீமை. நன்றிது தீதென (திருவாச. 49, 2). 2. Fault, blemish, defect; 3. Sinful deed; 4. Suffering, distress; 5. Difficulty, hindrance; 6. Death; 7. Ruin; 8. Body; |
தீதை | tītai, n. <> dhī-dā. (யாழ். அக.) 1. Girl; கன்னி. 2. Intelligence; |
தீந்தமிழ் | tīn-tamiḻ, n. <>தீம்+. Sweet elegant Tamil; இனிய தமிழ். தீந்தமிழ் வேந்த னரிகேசரி (இறை. 3, பக் 47). |
தீந்தா | tīntā, n. <> Fr. teinte. Ink; எழுதற்குரிய மசி. Pond. |
தீந்தாக்கூடு | tīntā-k-kūṭu, n. <> தீந்தா+. Ink-bottle; மசிக்கூடு. Loc. |
தீந்தொடை | tīn-toṭai, n. <> தீம்+. 1. String of a lute; யாழ் நரம்பு. தீந்தொடை மகரவீணை (சீவக. 608). 2. Lute; 3. Beehive; |
தீநட்பு | tī-naṭpu, n. <> தீ4+. Evil associations; தீயாரொடு உளதாகிய சினேகம். (குறள், அதி. 82.) |
தீநா | tī-nā, n. <> id.+. 1. A large lamp lighted on an earthen vessel and mounted on palmyra trunks, used in ancient days as a signal for mariners; கப்பல்கள் திசை தப்பாமலிருத்தற்காகப் பனைகளைக் காலாகநாட்டி அதன்மீதே மண்ணிட்டு எரிக்கும் விளக்கு (சிலப். 6, 143, உரை.) 2. Lighted torch kept either on ships or on shore, as a signal; |
தீநாக்கு | tī-nākku, n. <> id.+. 1. Flame, as the tongue of fire; [தீயின் நாக்கு] சுவாலை. 2. Evil tongue; |
தீநாய் | tī-nāy, n. <> id. +. Dog that frequents the burning-ground; மயானத்துத் திரியும் நாய். தீநா யுடையக் கவ்வி (மணி. 6, 114). |
தீநிமித்தம் | tī-nimittam, n. <> id. +. Evil omen; அபசகுனம். |
தீநீர் | tī-nīr, n. <> தீம்+. 1. Sweet, pure water; நன்னீர் சுனைகொ டீநீர் சோற்றுலைக் கூட்டும் (அகநா. 169). 2. Medicated, filtered water; 3. Sweet liquid of the tender coconut; 4. Acid; |
தீநுரை | tī-nurai, n. Cuttle-bone; கடல் நுரை. (யாழ். அக.) |
தீப்தம் | tīptam, n. <> dīpta. 1. Splendour, brightness; பிரகாசம். 2. Asafoetida; 3. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q. v.; 4. Lion; |
தீப்பசி | tī-p-paci, n. <> தீ4+. Pinching hunger; கொடும்பசி. தீப்பசிமாக்கட்குச் செழுஞ் சோ றீத்து (மணி.18, 117). |
தீப்படு - தல் | tī-p-paṭu-, v. intr. <> id. +. [T. tīppaṭuka.] 1. To catch fire; நெருப்புப்பற்றுதல். 2. To die, a term used in reference to kings; |
தீப்படை | tī-p-paṭai, n. <> id. +. Missile of the Fire-god; ஆக்கினேயாத்திரம். தீப்படையினை மாற்றி (கந்தபு. மூன்றாநாட்பானு. யுத். 93). |
தீப்பந்தங்கோவில் | tī-p-pantaṅ-kōvil, n. <> id. +. Tombs erected in honour of Toṭṭiya widows who have performed sati; உடன்கட்டையேறிய தொட்டியமகளிர்பொருட்டு எடுக்கப்பட்ட மண்டபம். Loc. |
தீப்பள்ளயம் | tī-p-paḷḷayam, n. <> id. +. The annual festival of walking on a fire-pit in the presence of Tiraupati-y-ammaṉ; திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூக்குழி யிறங்கும் உற்சவம். (செந். x, 247.) (J.) |