Word |
English & Tamil Meaning |
---|---|
தீபசாந்தி | tīpa-cānti, n. <> dvīpa +. See தீவகச்சாந்தி (மணி. 1, 35, உரை.) . |
தீபத்தட்டு | tīpa-t-taṭṭu, n. <> dīpa +. Tray for waving burning camphor, as before a deity; கர்ப்பூரத்தட்டு. Loc. |
தீபதானம் | tīpa-tāṉam, n. <> id. +. Gift of a lighted lamp to Brahmins on ceremonial occasions; சடங்குகளில் பிராமணர்க்கு விளக்கைத் தானமளிக்கை. |
தீபதி | tīpati, n. <> தீ4 + பதி. Fire-god; அக்கினி (பிங்.) |
தீபதிச்சம் | tīpaticcam, n. Climbing-staff plant. See வாலுழுவை. (மலை.) |
தீபதைலி | tīpa-tili, n. prob. dīpa+tailin. Castor-plant. See ஆமணக்கு. (மலை.) |
தீபபுட்பம் | tīpa-puṭpam, n. of. தீப்புட்பம். Champak. See சண்பகம். (மூ. அ.) |
தீபபுடம் | tīpa-puṭam, n. <> dīpa+. The process of calcination in which a medicine is covered with mud and heated in an oven for as long a time as it will take to prepare boiled rice; சித்தஞ்செய்த மருந்தை மண்ணால்மூடி சோறு பதமாகும் நேரமளவு அடுப்பினுள் வைத்தெடுக்கும் புடம். |
தீபம் 1 | tīpam, n. <> dīpa. 1. Lamp, light; விளக்கு. தூபநற் றீபம் வைம்மின் (திருவாச. 9, 1). 2. Lamp-stand; 3. The fifteenth nakṣatra. 4. See தீபமரம். |
தீபம் 2 | tīpam, n. <> dvīpa. See தீவு. (பிங்.) ஆறுந் தீபமு மடையா விடனும் (பெருங். நரவாண. 4, 78). |
தீபம்பார் - த்தல் | tīpam-pār-, v. intr. <> தீபம்1+. 1. To light lamps, as in a temple; கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல். Nā. 2. To attend to lights, as in a temple; |
தீபமத்திகை | tīpa-mattikai, n. <> dīpa +. Lamp-stand; விளக்குத்தண்டு. (யாழ். அக.) |
தீபமரம் | tīpa-maram, n. <> id. +. Phosphorescent tree; சோதிவிருட்சம். (பெரியபு. கண்ணப்ப.131.) |
தீபவதி | tīpavati, n. <> dvīpa-vatī. River; நதி. (பிங்.) |
தீபவராடி | tīpa-varāṭi, n. perh. divya + வராடி. (Mus.) An ancient melody-type, a subdivision of varāṭi; வராடிப்பண்வகை. (திவா.) |
தீபவிருட்சம் | tīpa-viruṭcam, n. <> dīpa-vrkṣa. 1. See தீபமரம். . 2. Lamp-post; |
தீபனம் | tīpaṉam, n. <> dīpana. 1. Stimulant, exciting agent; அதிகப்படுத்துவது. இசையுங் கூத்தும் காமத்திற்குத் தீபனமாகலின் (சிவக. 2597, உரை). 2. Hunger; 3. Eatables, food; 4. Turmeric; |
தீபஸ்தம்பம் | tīpa-stampam, n. <> dīpa +. 1. Lamp-stand; விளக்குதண்டு. Loc. 2. Light-house; |
தீபாக்கினி | tīpākkiṉi, n. <> id.+ agni. Fire lighted with a chip of fuel two fingers thick, one of three āyurvētākkiṉi, q.v.; ஆயுர் வேதாக்கினி மூன்றனுள் இரண்டுவிரல் கனமுள்ள ஒரு விறகால் எரிக்கும் எரிப்புத்திட்டம். (பைஷஜ. 4.) |
தீபாந்தம் | tīpāntam, n. <> id. + andha. Bandicoot; பெருச்சாளி. (மூ. அ.) |
தீபாந்தரசிட்சை | tīpāntara-ciṭcai, n. <> dvīpāntara +. Transportation beyond the seas; தண்ணீர்மேலேற்றுந் தண்டனை. Mod. |
தீபாந்தரம் | tīpāntaram, n. <> dvīpāntara. See தீவாந்தரம். தீபாந்தரத்துநின்றுந் தேடி (கடம்ப. பு. ல¦லாசந். 57). |
தீபாரத்தி | tīpāratti, n. <> dīpa + ārātrika. See தீபாராதனை. . |
தீபாராதனை | tīpārātaṉai, n.<> id. + ārādhana. Waving lamps before an idol; தீபங்காட்டிப் பூசிக்கை. |
தீபாலி | tīpāli, n. See தீபாவளி (யாழ். அக.) . |
தீபாவலி | tīpāvali, n. See தீபாவளி. . |
தீபாவளி 1 | tīpāvaḷi, n. <> dīpāvali. A festive celebration on the night of the 14th day of the dark fortnight at moon-rise in the month of Aippaci, believed to be ordained by Krṣṇa at the request of Narakācuraṉ; கண்ணபிரானாற் கொல்லப்பட்ட நரகாசுரன் வேண்டுகோளின் படி ஐப்பசியிற் கிருஷ்ணபட்சத்தில் சதுர்த்தசியுள்ள வைகறையிற் மங்களஸ்நானஞ்செய்து கொண்டாடப் படும் பெரும்பண்டிகை. |
தீபாவளி 2 | tīpāvaḷi, n. Insolvent. See திவால். |
தீபி | tīpi, n. <> dvīpin. Tiger; புலி. தீபியாப் பிறந்து நின்று (மேருமந். 366). |