Word |
English & Tamil Meaning |
---|---|
தீபிகை | tīpikai, n. <> dīpikā. Lamp; விளக்கு. (சங். அக.) |
தீபு | tīpu, n. <> dvīpa. See தீவு. ஏழ்தீபா லடங்காத புகழ்வீர (பாரத. இராச. 115). |
தீம் | tīm, of. தேம். n. (திவா.) 1. Sweetness, pleasantness; இனிமை. தீங்கதிர்த் தோற்றமென்னவே (சீவக. 2419). 2. Nectar; Sweet; |
தீம்பண்டம் | tīm-paṇṭam, n. <> தீம்+. Sweets, eatables; இனிய தின்பண்டம். Loc. |
தீம்பன் | tīmpaṉ, n. <> தீம்பு. 1. Wicked woman; துஷ்டன். தீம்பரை நல்லவராக்கி (தமிழ்நா. 236). 2. Base fellow; |
தீம்பி | tīmpi, n. Fem of. தீம்பன். Wicked woman; தீயவள். (யாழ். அக.) |
தீம்பு | tīmpu, n. <> தீமை. 1. Wickedness, mischief; குறும்பு. பிள்ளைகளும் நானுமாய்த் தீம்பு செய்து திரிகிறவிடத்தில் (ஈடு, 5, 6, 6). 2. Evil; |
தீம்புழல் | tīm-puḻal, n. <> தீம்+. 1. Sweet pastry; இனிய பண்ணிகாரம். தீம்புழல் வல்சி (மதுரைக். 395). 2. Mahua flower; |
தீம்புளி | tīm-puḷi, n. <> id +. Tamarind cured with jaggery; கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி. இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்பு (மதுரைக். 318). |
தீம்பூ | tīm-pū, n. <> id.+. 1. A tree; ஒருவகை மரம். தீம்பூமரக் கருப்பூரச்சோலை (சீவக. 1497). 2. A fragrant substance; |
தீமகம் | tī-makam, n. <> தீ4+makha. A kind of sacrificial rite for compassing the death of an enemy; ஆபிசாரயாகம். முனிவர் . . . தீமகத்தைச் செய்தார் (கந்தபு. ததீசி. 99). |
தீமடு - த்தல் | tī-maṭu-, v. intr. <> id. +. 1. To kindle fire; நெருப்பு மூட்டுதல். கொலைஞருலை யேற்றித் தீமடுப்ப (நாலடி, 331). 2. To throw into the fire; |
தீமானம் | tī-māṉam, n. <> தீமை+. Disgrace, dishonour; மானக்கேடு. தம்பிமார் தீமானஞ் செய்ததனாற் றீங்குண்டோ (பாரதவெண். உத்தி.121). |
தீமிதி | tī-miti, n. <> தீ4+. Walking on a fire-pit, performed in fulfilment of a vow; பிரார்த்தனையின்பொருட்டுத் தழல்பரப்பிய குழியில் நடக்கை. Loc. |
தீமுரன்பச்சை | tī-muraṉ-paccai, n. perh. id.+முரணு- +. A kind of sandalwood; சந்தன வகை. (சிலப்.14, 108, உரை.) |
தீமுறி | tī-muṟi, n. <> id. +முறி. Phosphorus; பாஷாணவகை. (C. G.) |
தீமுறுகல் | tī-muṟukal, n. <> id. + . A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (w.) |
தீமுறை | tī-muṟai, n. <> id.+. Fire-sacrifice; அக்கினியிற் செய்யும் ஒமம். நான்மறை மரபிற் றீமுறை யொருபால் (சிலப். 5, 175). |
தீமூட்டு - தல் | tī-mūṭṭu-, v. intr. <> id. +. 1. To kindle fire; தீயுண்டாக்குதல். 2. To stir up a quarrel; |
தீமூட்டு | tī-mūṭṭu, n. <> தீமூட்டு-. Lighting material; தீமூட்டுதற்குரிய பொருள். யாஅத்து . . . கோதுடைத் ததரல் . . . தீமூட்டாகும் (அகநா. 257). |
தீமேனியான் | tī-mēṉiyāṉ, n. <> தீ4+. šiva, as having the hue of fire; [தீப்போலும் சரீர நிறமுடையோன்] சிவபிரான். தீமேனியானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ (திருவாச.10, 20). |
தீமை | tīmai, n. <> தீ4. [M. tī.] 1. Mischief; சேட்டை. நிச்சலுந் தீமைகள் செய்வாய் (திவ். பெரியாழ். 2, 7, 3). 2. Fault, guilt; 3. Cruelty, injury; 4. Sinful deed; 5. Inauspicious occasions, as of death; |
தீமைத்தீவு | tīmai-t-tīvu, n. <> தீமை + தீவு1. Andaman Islands, as the place for criminals; [குற்றஞ்செய்ததற்குத் தண்டனையாக அனுப்பற்குரிய தீவு] அண்டமான். |
தீமொழி | tī-moḻi, n. <> id. (யாழ். அக.) 1. Evil word; பொல்லாவார்த்தை. 2. Curse; |
தீய் - தல் | tīy-, 4 v. intr. <> தீ4. See தீ. . |
தீய் - த்தல் | tīy-, 11 v. tr. Caus. of தீய்1-. See தீ. கொதித்திமை தீய்த்தொளிர் செங்கண் (கூர்மபு. அட்டமூர்.3). |
தீய்வு | tīyvu, n. <> தீய்1-. Blighting of crops; பயிர் கரிந்துபோகை. |
தீய | tīya, adj. <> தீமை. 1. Evil, wicked, sinful; தீமையான. 2. Fallacious; |
தீயகம் | tī-y-akam, n. <> தீ4+அகம். Hell, as a place of fire; [நெருப்புள்ள இடம்] நரகம். (w.) |