Word |
English & Tamil Meaning |
---|---|
தீர் 2 - த்தல் | tīr-, 11 v. tr. Caus. of தீர்1-. [T. tīrcu, K. tīrisu, M. tīrkku, Tu. tirisuni.] 1. To leave, quit; விடுதல். தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட்டாகும் (தொல். சொல். 318). 2. To finish, complete, conclude, fulfil, perfect; 3. To destroy; 4. To kill; 5. To beat severely; 6. To remove, cure, relieve, as pain, anxiety; 7. To clear off, pay off, as debt; 8. To divorce; 9. To settle, decide, as dispute; |
தீர்க்கக்கிரீபம் | tīrkka-k-kirīpam, n. <> dīrgha-grīva. See தீர்க்ககதி (யாழ். அக.) . |
தீர்க்ககணம் | tīrkka-kaṇam, n. <> dīrgha-kaṇā. A kind of cumin; வெண்சீரகம். (மூ. அ.) |
தீர்க்ககதி | tīrkka-kati, n. <> dīrgha-gati. Camel; ஒட்டகம். (யாழ். அக.) |
தீர்க்ககந்தை | tīrkka-kantai, n. <> dīrgha + kanda. Long-rooted arum; வெருகங்கிழங்கு. (தைலவ. தைல.) |
தீர்க்ககாடிகம் | tīrkka-kāṭikam, n. <> dīrghaghāṭika. See தீர்க்ககதி. (யாழ். அக.) . |
தீர்க்ககாண்டம் | tīrkka-kāṇṭam, n. <> dīrgha +. Common sedge; கோரைப்புல். (மூ. அ.) |
தீர்க்கசங்கம் | tīrkka-caṅkam, n. <> dīrgha-jaṅgha. (யாழ். அக.) 1. See தீர்க்ககதி. . 2. Crane; |
தீர்க்கசத்திரம் | tīrkka-cattiram, n. <> dīr-gha-satra. Sacrifice extending over more than 12 years; பன்னிரண்டாண்டுகட்குமேல் நடைபெறும் யாகம். தீர்க்கசத்திரமக நடத்தினார் (சேதுபு. இலக்கும. 7). |
தீர்க்கசதுரம் | tīrkka-caturam, n. <> dīrgha +. Rectangle; கோணங்களொத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டுருவம். |
தீர்க்கசந்தி | tīrkka-canti, n. <> id. + sandhi. (Gram.) Coalescence of two like vowels into a long vowel of the same class in Sanskrit; ஓருயிர் தன்னினத்துயிரோடு புணரும்போது அவ்விரண்டும் அவ்வினத்து நெட்டுயிராக மாறும் வடமொழிச்சந்தி. |
தீர்க்கசாலம் | tīrkka-cālam, n. <> id. + sāla. Sal. See ஆச்சா. (மூ. அ.) . |
தீர்க்கசிகுவம் | tīrkka-cikuvam, n. <> dīrgha-jīhva. Snake; பாம்பு. (யாழ். அக.) |
தீர்க்கசீவம் | tīrkka-cīvam, n. <> dīrgha + jīva. Long life; நீண்ட ஆயுள். (யாழ். அக.) |
தீர்க்கசுமங்கலி | tīrkka-cumaṅkali, n. <> id. +. Woman blessed with a long and happy married life, a term used in benediction; சுமங்கலையாய் நெடுங்காலம் வாழ்பவள். தீர்க்கசுமங்கலியாய் இருப்பாயாக. |
தீர்க்கசுரம் 1 | tīrkka-curam, n. <> id. + svara. Long vowel; நெடில். (யாழ். அக.) |
தீர்க்கசுரம் 2 | tīrkka-curam, n. <> id. + jvara. Long fever; நீண்டகாலமிருக்கும் ஜ்வரம். |
தீர்க்கசுவாதம் | tīrkka-cuvātam, n. <> id. +švāsa. Sigh; பெருமூச்சு. (பு. வெ.12, இருபாற்.10, உரை.) |
தீர்க்கதண்டம் | tīrkka-taṇṭam, n. <> id.+. 1. See தீர்க்கதண்டன். . 2. Castor-plant. |
தீர்க்கதண்டன் | tīrkka-taṇṭaṉ, n. <> id.+. A form of obeisance or homage which consists in prostrating at full length with the arms extended; சாஷ்டாங்க தண்டம். பிராமணனுந் தீர்க்கதண்டன் ஸமர்ப்பித்து (குருபரம். 469). |
தீர்க்கதரம் | tīrkka-taram, n. <> dīrgha-tara. A hell; நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக.109.) |
தீர்க்கதரிசனம் | tīrkka-taricaṉam, n. <> dīrgha +. Clairvoyance, foresight, prophecy; வருவதுணரும் ஞானம். |
தீர்க்கதரிசி | tīrkka-tarici, n. <> id. + darašin. Seer, prophet; ¢தீர்க்கதரிசனமுடையவன். தீர்க்கதரிசி யாமெவனா னீயிவ் வுறையுள் சேர்வுற்றாய் (ஞானவா. புசுண். 42). |