Word |
English & Tamil Meaning |
---|---|
தீவகச்சாந்தி | tīvaka-c-cānti, n. <>dvipaka+. An ancient festival celebrated to propitiate Indra at Kāviri-p-pūm-paṭṭiṉam; பண்டைக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்திரவிழா தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி 1, 35). |
தீவகம்1 | tīvakam, n. <>dīpaka. 1.Lighted lamp, flame; விளக்கு. 2. (Rhet.) Figure of speech in which a word is construed with other words preceding or succeeding, of three varieties, viz., mutaṉilai-t-tīvakam, iṭainilai-t-tīvakam, kaṭainilai-t-tīvakam; 3. Decoy-bird, decoy-beast; |
தீவகம்2 | tīvakam, n. <>dvīpaka. Island; தீவு. திவகச்சாந்தி (மணி. 2, 3). |
தீவகமிருகம் | tīvaka-mirukam, n. <>தீவகம்+. See தீவகம், 3. . |
தீவட்டி | tī-vaṭṭi, n. <>தீ+vartī. [T. diviṭi, K. Tu. divaṭi, M. tīpatti.] Torch, flambeau; தீப்பந்தம். இருளறு தீவட்டிக ளெண்ணில் முன் செல்ல (பணவீடு. 76). See தீவட்டித்தடியன். |
தீவட்டிக்கள்ளன் | tīvaṭṭi-k-kaḷḷaṉ, n. <>தீவட்டி +. A dacoit who commits robbery with the help of torchlight; தீவட்டியைப் பிடித்துக் கொண்டு கொள்ளையடிப்போன். |
தீவட்டிக்காரன் | tīvatti-k-kāraṉ, n. <>id.+. 1. Torch-bearer; தீவட்டிபிடிப்போன். 2. See தீவட்டிக்கள்ளன். Loc. |
தீவட்டிக்கொள்ளை | tīvaṭṭi-k-koḷḷai, n. <>id.+. 1. Torchlight dacoity; தீவட்டியைப் பிடித்துக்கொண்டு செய்யும் கொள்ளை. 2. Unjust exorbitant gain; |
தீவட்டிக்கொள்ளையடி - த்தல் | tīvaṭṭi-k-koḷḷai-yaṭi-, v. intr. <>தீவட்டிக்கொள்ளை+. 1. To commit dacoity with the help of torchlight; தீவட்டியைப்பிடித்துக்கொண்டு கொள்ளையிடுதல். 2. To amass money by illegal means; |
தீவட்டித்தடியன் | tīvaṭṭi-t-taṭiyaṉ, n. <>தீவட்டி+. Senseless, worthless fellow; உபயோகமற்ற அறிவிலி. |
தீவண்ணன | tī-vaṇṇaṉ, n. <>தீ+ varṇa. šiva, as fire-coloured; [அக்கினி நிறத்தோன்] சிவன். தீவண்ணர் திறமொருகாற் பேசாராகில் (தேவா. 1230, 6). |
தீவத்தி | ī-vatti, n. See தீவட்டி, 1. Colloq. . |
தீவம் 1 | tīvam, n. <>dīpa. Lamp; விளக்கு செம்பொற் றீவங்க ளுமலிதர (கோயிற்பு. திருவிழ. 30) |
தீவம் 2 | tīvam, n. <>dvipa. Island; தீவு இலங்கா தீவத்து (மணி. 28, 107). |
தீவர்த்தி | tī-vartti, n. See; தீவட்டி, 1. . |
தீவரம் | tīvaram, n. <>tīvra. See தீவிரம். எந் தீவரமதி மாழ்கி (சிவப் பிரபந் வெங்கைக்கலம். 95). . |
தீவலஞ்செய் - தல் | tī-vala-cey-, v. intra. <>தீ4+. To circumambulate fire, as in a marriage ceremoney; விவாகச்சடங்கு முதலியவற்றில் அக்கினிப்பிரதட்சிணஞ் செய்தல். (திவா) தீவலஞ் செய்வது காண்பார்க ணோன் பென்னை (சிலப். 1, 53). |
தீவளர் - த்தல் | tī-vaḷar-, v. intr. <> id.+. 1. To tend the sacred fire; வேதாக்கினி வளர்த்தல். 2. To light a fire, as in suttee; |
தீவளர்ப்போர் | tī-vaḷarppōr, n. <> id.+. 1. Brahmins, as tending the sacred fire; [வைதி காக்கினியைப் பேணுபவர்] அந்தணர். (சூடா.) 2. Ascetics; |
தீவளி 1 | tī-vaḷi, n. <> id.+. Tempest, whirlwind; கடுங்காற்று. தீவளியா னற்கா யுதிர்தலுமுண்டு (நாலடி, 19). |
தீவளி 2 | tīvaḷi, n. [K. dīvaḷige.] Corr. of தீபாவளி. . |
தீவறை | tī-v-aṟai, n. <> தீ4+. Hole dug in the ground for fire; பெருநெருப்பு எரிக்குங் குழியடுப்பு. (J.) |
தீவனம் | tīvaṉam, n. <> dīpana. 1. Appetite; பசி. 2. Food for animals; fodder, as straw for cattle; |
தீவாணம் | tīvāṇam, n. <> Persn. dīwan-ē-ām. (W.). 1. Government; அரசாட்சி. 2. Court of justice; |
தீவாதை | tī-vātai, n. <> தீ4+bādhā. Affliction by fire; fire-accident; அக்கினிபாதை. தீவாதை யான மனையும் (குமரே. சத. 51). |
தீவாந்தரசிக்ஷை | tīvāntara-cikṣai, n. <> dvīpāntara +. Transportation; தண்ணீர்மே லேற்றுந் தண்டனை. |
தீவாந்தரம் | tīvāntaram, n. <> dvīpāntara. Distant Island; தூரத்தீவு. |