Word |
English & Tamil Meaning |
---|---|
தீவாந்தரவவரை | tīvāntara-v-avarai, n. <> தீவாந்தரம்+. A bean from the eastern islands; கீழ்ந்த்தீவுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அவரைவகை. (W.) |
தீவாளி | tīvāḷi, n. Corr. of தீபாவளி. Loc. . |
தீவாளிகுளி - த்தல் | tīvāḷi-kuḷi-, v. intr. <> தீவாளி+. To become bankrupt by extravagant living; ஆடம்பரச்செலவு செய்து பாப்பராதல். Loc. |
தீவாளியா - தல் | tīvāḷi-y-ā-, v. intr. prob. திவால்+. To become bankrupt; கடனால் நிலைகுலைதல். |
தீவான் 1 | tīvāṉ, n. <> dvīpa. Islander; தீவில்வாழ்பவன். (W.) |
தீவான் 2 | tīvāṉ, n. <> Persn. dīwān. Dewan. See தீவான். |
தீவான் 3 | tīvāṉ, n. <> தீ4. Wretched fellow deserving to be burnt alive; எரிக்கப்படத்தக்க அற்பன். இந்தத் தீவான் என்ன நிலை நிற்கிறான்? |
தீவானம் | tīvāṉam, n. <> Persn. diwānā. Madness, insanity; பைத்தியம். |
தீவி 1 | tīvi, n. <> dvīpin. Tiger; புலி (உரி. நி.) |
தீவி 2 | tīvi, n. A bird; பட்சிவகை. (சங். அக.) |
தீவிகை | tīvikai, n. <> dīpikā. Lamp. See தீபிகை. மீன்குழாத்தி னெங்குந் தீவிகை (சீவக. 2325). |
தீவிதிராட்சம் | tīvi-tirāṭcam, n. See தீவுதிராட்சம். (மலை.) . |
தீவிய | tīviya, adj. <> தீம். Sweet, delicious; இனிமையான. செவ்விய தீவிய சொல்லி (கலித்.19). |
தீவிரகந்தம் | tīvira-kantam, n. perh. tīvra+gandha. Basil; துளசி. (சங். அக.) |
தீவிரகாசரோகம் | tīvira-kāca-rōkam, n. <> id.+. Bronchitis; காசநோய்வகை. |
தீவிரம் | tīviram, n. <> tīvra. 1. Speed, celerity; விரைவு. Colloq. 2. Fury, rage; 3. Sun's ray; 4. Intensity, severity; 5. Pungency, sharpness; 6. A hell; |
தீவிரவேகம் | tīvira-vēkam, n. <> id.+. A hell; நரகவகை. விதமறு தீவிரவேகங் கராளமென விளம்புநவும் (சிவதரு. சுவர்க்க. 113). |
தீவிரவேதனை | tīvira-vētaṉai, n. <> id.+. Extreme pain; அதிகவேதனை. Loc. |
தீவிரி - த்தல் | tīviri-, 11 v. <> id. tr. To hasten, expedite; விரைவுபடுத்துதல்.--intr. To be intense, severe, poignant, fierce; |
தீவிழி - த்தல் | tī-viḻi-, v. intr. <> தீ4+. To look with fire-red eyes, as in anger; பெருங்கோபத்துடன் பார்த்தல். தீவிழித்து மேற்சென்ற வேழம் (சீவக. 783). |
தீவிளங்கும்வைரம் | tī-viḷaṅkum-vairam, n. <> id.+. Ambergris; மீனம்பர். (யாழ். அக.) |
தீவிளி 1 | tī-viḷi, n. See தீயளி. (பிங்.) . |
தீவிளி 2 | tī-viḷi, n. <> தீ4+. Harsh, cruel word; கொடுஞ்சொல். செற்ற நோக்கித் தீவிளி விளிவன் (திங். திருமாலை 30). |
தீவிளி 3 | tīviḷi, n. Corr. of தீபாவளி. . |
தீவினை | tī-viṉai, n. <> தீமை+. 1. Sinful deed; கொடுஞ்செயல். (சூடா.) 2. Sin; 3. Fire-sacrifice; |
தீவு 1 | tīvu, n. <> dvīpa. [K. dīvi, M tīvu.]. Island; நான்குபக்கமும் நீர்சூழ்ந்த நிலம். பொலம்படு தீவிற்கு (பெருங். நரவாண. 1, 23). 2. Distant country; |
தீவு 2 | tīvu, n. See தீய்வு. Loc. . |
தீவு 3 | tīvu, n. <> தீம். Sweetness; இனிமை. (யாழ். அக.) |
தீவுக்குருவி | tīvu-k-kuruvi, n. <> தீவு1+. Foreign bird; அன்னியநாட்டுப்பறவை. |
தீவுச்சரக்கு | tīvu-c-carakku, n. <> id.+. Foreign articles; அன்னியநாட்டுச்சரக்கு. |
தீவுதிராட்சம் | tīvu-tirāṭcam, n. <> id.+. Foreign vine; அன்னியநாட்டுக் கொடிமுந்திரி. (W.) |
தீவுபற்று | tīvu-paṟṟu, n. <> id.+. Neighbouring islands; தீவுப்புறம். (யாழ். அக.) |
தீவேள் - தல் [தீவேட்டல்] | tī-vēḷ-, v. intr. <> தீ4+. 1. To perform Vēdic sacrifice; யாகஞ்செய்தல். செந்தீவேட்டு . . . புரிசடை புலர்த்துவோனே (புறநா. 251). 2. To marry; |
தீவேள்வி | tī-vēḷvi, n. <> id.+. Wedding, as accompanied with fire-rite; அக்கினி சாட்சியாகச் செய்யுங் கலியாணம். (திவா.) |
தீழ்ப்பு | tīḻppu, n. (யாழ். அக.) 1. Pollution; தீட்டு. 2. [T.tīlu.] Inferiority; |
தீற்றிப்போடு - தல் | tīṟṟi-p-pōṭu-, . intr. <> தீற்று-+. To give advice in secret; இரகசிய போதனைசெய்தல். (J.) |