Word |
English & Tamil Meaning |
---|---|
துக்கக்கேடு | tukka-k-kēṭu, n. <>id. +. See துக்கம், 1. சொன்னால் வெட்கக்கேடு, அழுதால் துக்கக்கேடு. . |
துக்ககன் | tukkakaṉ, n. <>duhkha-ga. A sorrow-stricken person; person of melancholy mood; துயரமுள்ளோன். (W.) |
துக்கங்கா - த்தல் | tukkaṅ-kā-, v. intr. <>துக்கம் +. To observe mourning; இழவு கொண்டாடுதல். |
துக்கங்கேள் - தல் [துக்கங்கேட்டல்] | tukkaṅ-kēḷ, v. tr. <>id.+. To comfort mourners, condole with; இழவு விசாரித்தல். |
துக்கங்கொண்டாடு - தல் | tukkaṅ-koṇ-ṭāṭu-, v. intr. <>id.+. 1. See துக்கங்கா-. . 2. See துக்கங்கேள்-. Loc. |
துக்கசாகரம் | tukka-cākaram, n. <>id. +. Overwhelming grief, as an ocean of grief; [துயர்க்கடல்] பெருந்துயர். துக்கசாகரத் துயரிடைப் பிழைத்தும் (திருவாச. 4, 25). |
துக்கடா | tukkaṭā, <> Hind. tukra. n. 1. Piece, bit; சிறுதுண்டு. Loc. 2. Any relish; |
துக்கடி | tukkaṭi, <>Hind.tukri. n. 1. Division of a district; நிலப்பகுதி. 2. See துக்கடா, 1.--adj. See துக்கடா. |
துக்கத்திரயம் | tukka-t-tirayam, n. <>duhkha+. Three kinds of afflictions. See தாபத்திரயம். . |
துக்கநிவர்த்தி | tukka-nivartti, n. <>id.+. See துக்கநிவாரணம். . |
துக்கநிவாரணம் | tukka-nivāraṇam, n. <>id.+. 1. Deliverance from all ills; துன்பநீக்கம். 2. (Buddh.) The doctrine that the extinction of desire is the sure means of deliverance and cessation of pain, one of four vāymai, q.v.; |
துக்கநிவாரணமார்க்கம் | tukka-nivāraṇamārkkam, n. <>id.+. (Buddh.) The doctrine of the path that leads to the extinction of desire and thereby of pain, one of four vāymai, q.v.; வாய்மை நான்கனுள் பற்றறுவதே துக்கநிவாரணத்துக்குரிய வழியென்ற பௌத்தமதக்கொள்கை. (மணி. 2, 66-7, உரை.) |
துக்கப்பைத்தியம் | tukka-p-paittiyam, n. <>id.+. Melancholia; காரணமின்றிப் பயமுந்துக்கமுங்கொள்ளும் மனநோய். (M. L.) |
துக்கம் 1 | tukkam, n. <>duhkha. 1. Sorrow, distress, affliction; துன்பம். (சூடா.) துக்கமித்தொடர்ச்சி யென்றே (கம்பரா. கும்பகருண. 142). 2. Hell; 3. Disease; 4. (Buddh.) The doctrine that existence is painful, one of four vāymai, q.v.; 5. Consumption; |
துக்கம் 2 | tukkam, n. prob. dyu+kha. Sky; ஆகாசம். நிலந்துக்க நீர்வளி தீயானான் (தேவா. 844, 3). |
துக்கர் | tukkar, n. <>துக்கம். Consumptive patients; க்ஷயரோகிகள். துக்கர் துருநாமர் (சிறுபஞ் 76). |
துக்கரம் | tukkaram, n. <>duṣ-kara. That which is difficult to be made or done; செய்தற்கரியது. துக்கரமான கொன்றைத்தொடையலால் வளைத்தவாறும் (பாரத. பதின்மூ. 161). |
துக்கராகம் | tukka-rākam, n. <>துக்கம் +. 1. Mournful tune; இழவுக்குரிய பண் (யாழ்.அக.) 2. (Mus.) An ancient secondary melody-type of pālai class; |
துக்கவீடூ | tukka-vīṭu, n. <> id. +. House of mourning; இழவுகொண்டாடும் வீடு. |
துக்காணி | tukkāṇi, n. <>U. duggāni. A small copper coin=2 or 4 pies; இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட சிறு செப்புநாணயம். துக்காணிப் பொட்டுமிட்டு (திருக்கூட்டச்சத. Mss.). |
துக்காதீதம் | tukkātītam, n. <>U. duhkha+. Pleasure, happiness; சுகம். (யாழ்.அக.) |
துக்கானி | tukkāṉi, n. <>U.dukāni. That which pertains to a shop; கடைக்குரியது. Loc. |
துக்கி 1 - த்தல் | tukki-, 11 v. intr. <>duhkha. To sorrow, mourn; to be in distress; மனம் வருந்துதல். |
துக்கி 2 | tukki, n. <>duhkhin. See துக்கிதன். சுகியாயிருக்கிறதும் துக்கியாயிருக்கிறதும் ... சுபாவங்காணும் (சி. சி. 2, 5, மறைஞா.). . |
துக்கிணி | tukkiṇi, n. See துக்குணி துக்கிணி கிள்ளித்தா வம்மே (குற்றா. குற. 62, 4). . |
துக்கிதம் | tukkitam, n. <>duhkhita. Sorrow; துக்கம். (யழ்.அக.) |
துக்கிதன் | tukkitaṉ, duhkhita. Person in affliction; துயரமுடையோன். தலைவலியரியுந்துக்கிதன் (சிவதரு. சனன. 48) |
துக்கு 1 | tukku, <>T. tukku. (W.) Meanness; கீழ்மை. Worthlessness; Useless person or thing; |