Word |
English & Tamil Meaning |
---|---|
துகின்முடி 2 | tukiṉ-muṭi, n. <>id +. Headdress; தலைப்பாகை. பைந்துகின்முடி யணிந்தவர் (சீவக .1558). |
துகினசைலம் | tukiṉa-cailam, n. <>tuhina-šaila. See துகினாத்திரி. (யாழ். அக.) . |
துகினம் | tukiṉam, n. <>tuhina. 1. Dew; பனி. (பிங்.) 2. Moon's ray; |
துகினாத்திரி | tukiṉāttiri, n. <>id.+adri. The Himālayas, as the mountain of snow; [பனிமலை] இமயமலை. (யாழ். அக.) |
துகினூல் | tukiṉūl, n. <>துகில் +. White thread; வெண்ணூல். பல்கிழியும் பயினுந் துகினூலொடு (சீவக. 235). |
துகு - தல் | tuku-, 6 v. intr. <>தொகு-. To be gathered in a mass, as the hair; தொகுதியாதல். சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய் (தேவா. 844, 3). |
துகு - த்தல் | tuku-, 11 v. tr. Caus. of துகு-. To bring together, gather in a mass, as the hair; தொகுதியாக்குதல். அவிழ்ந்த புரிசடை துகுக்கும் (திருவிசை. கருவூ. 7, 3). |
துகு | tuku, n. perh. dukha. Pain, distress; வருத்தம். (யாழ். அக.) |
துகுதுகுவெனல் | tuku-tuku-v-eṉal, n. Onom. expr. of the sound of the inflow of a big crowd; பெருங்கூட்டம் வருகையில் எழும் ஒலிக்குறிப்பு. |
துகூலம் | tukūlam, n. <>dukūla. 1. White silk; வெண்பட்டு. 2. Thin cloth; |
துகை - த்தல் | tukai-, 11 v. cf. துவை-. tr. 1. To tread down, trample on, bruise or destroy by treading; மிதித்துழக்குதல். துன்றுகடி காவினையடிக்கொடு துகைத்தான் (கம்பரா. பொழிலிறுத். 8). 2. To pound in a mortar; to mash; 3. To vex; To roam about; to walk; |
துகையல் | tukaiyal, n. <>துகை-. A relish or mash of vegetables, coconuts, etc.; தேங்காய் காய்கறிகளை அரைத்துச்செய்யும் உணவின் உபகரண வகை. |
துங்கசேகரம் | tuṅka-cēkaram, n. <>tuṅgašēkhara. Mountain; மலை. (யாழ். அக.) |
துங்கதை | tuṅkatai, n. <>tuṅga-tā. 1. Height, elevation; உயர்ச்சி. (J.) 2. Dignity, greatness; |
துங்கபத்திரி | tuṅkapattiri, n. See துங்கபத்திரை. துங்கபத்திரி தீம்பாலி தூயதண்பொருநை (திருவிளை. தலவி. 11). . |
துங்கபத்திரை | tuṅkapattirai, n. <>Tuṅgabhadrā. The river Tungabhadra; ஒரு நதி. துங்க பத்திரைச் செங்களத்திடை (கலிங். 89). |
துங்கம் | tuṅkam, n. <>tuṅga. 1. Height, elevation; உயர்ச்சி. துங்கமுகமாளிகை (திவ். பெரியதி. 3, 4, 6). 2. Tip edge; 3. Dignity, exaltedness, excellence; 4. Breadth; 5. Mountain; 6. (Astron.) See துங்கமந்தோச்சம். (W.) 7. Cleanliness, purity; 8. Victory; |
துங்கமத்திமபுத்தி | tuṅka-mattima-putti, n. <>id.+. (Astron.) Mean motion of the moon's apogee. சந்திர சஞ்சாரவட்டத்தின் தூரநிலை. |
துங்கமத்தியம் | tuṅka-mattiyam, n. See துங்கமத்திமபுத்தி. (செந். viii, 218.) . |
துங்கமந்தோச்சம் | tuṅka-mantōccam, n. <>id. +. (Astron.) Apogee of the moon. See சந்திரமந்தோச்சம். (W.) . |
துங்கரிகம் | tuṅkarikam, n. prob. gairika. Red ochre; காவிக்கல். (W.) |
துங்கன் | tuṅkaṉ, n. <>tuṅga. 1. Eminent man; உயர்ந்தோன். அபிமானதுங்கன் செல்வனைப் போல (திவ். திருப்பல். 11). 2. Apogee of the moon. See சந்திரமந்தோச்சம். (செந். viii, 217.) |
துங்கி | tuṅki, n. <>tuṅgī Night; இரவு. (யாழ். அக.) |
துங்கீசன் | tuṅkīcaṉ, n. <>tuṅgīša. (யாழ். அக.) 1. Sun; சூரியன். 2. šiva; 3. Viṣṇu; 4. Moon; |
துச்சகம் | tuccakam, n. <>ducchaka. A kind of fragrant paste; சுகந்தவகை. (யாழ். அக.) |
துச்சத்தரு | tucca-t-turu, n. <>tuccha +. See துச்சத்தரு. (மலை.) . |
துச்சத்துரு | tucca-t-turu, n. <>tuccha-dru. Castor plant; ஆமணக்கு. (யாழ். அக.) |
துச்சதானியம் | tucca-tāṉiyam, n. <>tuccha +. Chaff; பதர். (யாழ். அக.) |
துச்சம் | tuccam, n. <>tuccha. 1. Lowness; meanness, vileness; இழிவு. வார்த்தையைத் துச்சமாக மதித்தானே (இராமநா. உயுத். 81). 2. Emptiness; 3. Non-existence; 4. Chaff; 5. Instability; 6. Flasehood; 7. cf. துசகம். Citron. See கொம்மட்டிமாதுளை. (மலை.) 8. Bitter water melon. See போய்க்கொம்மட்டி. (யாழ். அக.) |